Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th November 2022

Daily Current Affairs

Here we have updated 11th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • “சிறந்த சீர்திருத்த மாநில விருது” தமிழக அரசுக்கு வழங்கப்பட்டது.
  • சென்னை மாநகர போக்குவரத்து கழத்தால் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக “சென்னை பஸ்” (Chennai Bus) என்ற செயலியை திறம்பட செயல்படுத்தியதற்காக “சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம்” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
    • இவ்விருது கொச்சியில் நடைபெற்ற 15வது இந்திய நகர்ப்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சியில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தால் வழங்கப்பட்டது.

தேசிய செய்தி

  • முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினை ரத்து செய்யப்பட்டு நெக்ஸ்ட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.
  • இந்தியக் குடும்பங்களின் வருவாய் செலவுகள், சேமிப்புகள் தொடர்பாக “டிவி9” நெட்வொர்க் சார்பில் ஆய்வு மேற்கொண்டு “மனி9” அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 69% குடும்பங்கள் பொருளாதார பாதுகாப்பில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க ஏற்படும் காலதாமத்திற்காக வழக்குகளை பட்டியலிட புதிய நடைமுறையை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
    • திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளும் அடுத்த திங்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என அவ்வறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயமாக ஆதார் புதிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆதார் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் கொண்டுவந்துள்ளது.
  • இந்தியாவிலும், சர்வதச அளவிலும் சூரிய எரிசக்தி பயன்பாடு குறித்து எரிசக்தி-தூய காற்று ஆராய்ச்சி மையம், எரிசக்தி பொருளாதார மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் நடப்பு 2022-ல் ஜனவரி முதல் ஜூன் வரை சூரிய எரிசக்தி பயன்படுத்தியதன் மூலம் 32,000 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் பயன்பாட்டையும், 1.91 கோடி டன் நிலக்கரி பயன்பாட்டின் தேவையும் இந்தியா தவிர்த்துள்ளது.
  • நவம்பர் 10-ல் “வீராங்கனா சேவா கேந்திரா” திட்டத்தை வீர நாரிகளின் நலன் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி இராணுவ மனைவிகள் நல சங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
  • பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட 2வது முனையத்தையும், 108 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள கெம்பே கவுடா சிலையை பிரதமர் திறந்து வைக்கிறார்.
  • நவம்பர் 11-ல் சென்னை மைசூருக்கு இடையேயான 5வது வந்தே பாரத் ரயில் சேவையை (தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • சுற்றுச்சூழலுக்கு நிலையான  மற்றம் காலநிலைக்கு எற்ற திட்டங்களில் முதலீடு செய்வதற்கான வருமானத்தை உருவாக்கும் நிதி கருவிகளான பசுமை பத்திரங்கள் கட்டமைப்பிற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்துள்ளார்.

உலக செய்தி

  • நவம்பர் 8-ல் நடைபெற்ற அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஸ்ரீ தனேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமீளா ஜெயபால் உள்ளிட்ட 5 இந்தியர்கள் வெற்றி.

முக்கிய தினம்

  • தேசிய கல்வி தினம்
    • மெளலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளினை நினைவு கொள்ளும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் 11-ல் தேசிய ஆசிரிய தினம் கொண்டாடப்படுகிறது.
    • கருப்பொருள் : “Changing Course, Transforming Educaion”

Nov 9 – Current Affairs | Nov 10 – Current Affairs

Leave a Comment