Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11-12th December 2022

Daily Current Affairs

Here we have updated 11-12th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • 11.12.22-ல் மகாகவி பாரதியார் 141வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
    • பாரதியார் பிறந்தநாள் விழா இந்திய மொழிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
  • காசி & தமிழகம் இடையே “காசி தமிழ் சங்கம் எக்ஸ்பிரஸ்” தொடங்கப்படும் என மத்திய இரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார்.
    • மத்திய இரயில்வே அமைச்சர் : அஸ்வினி வைஷ்ணவ்
  • ஆளுநர் நியமன விவகாரம் பற்றிய தனிநபர் சட்டத்திருத்த மசோதாவினை பி.வில்சன் (தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்) அறிமுகம் செய்துள்ளார்.
    • ஆளுநர் தகுதி – சட்ட பிரிவு 157 

தேசிய செய்தி

  • குறிப்பிட்ட சில சமூகங்களை பழங்குடியினர் பட்டியிலில் புதிதாக சேர்க்க “பழங்குடியினர் திருத்த மசோதோவினை” மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மக்களவையில் அறிமுகம் செய்தார்.
    • மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் – அர்ஜுன் முண்டா
    • சேர்க்கப்படும் பழங்குடியின சமூகத்தினர்கள்
      1. தமிழகம் – நரிக்குறவர், குருவிக்காரர்
      2. இமாச்சலப்பிரதேசர் – ஹாட் டீ
      3. கர்நாடகம் – பெட்டா குருபா
      4. சத்திஸ்கார் – பின்ஜியா
  • டிசம்பர் 11ல் இமாச்சலப்பிரதேசத்தின 15வதுமுதல்வரா சுக்விந்தர் சிங் பதவியேற்றுள்ளார்.
  • டிசம்பர் 11ல் தெற்கு இரயில்வே தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது.
    • தெற்கு ரயில்வே தலைமையகம்சென்னை
    • வடிவமைத்தவர்N.கிரேசன்
    • அடிக்கல் நாட்டியவர்பென்லட் பிரபு
    • கட்ட வகைஇந்தோ சாரசானிக்
  • விவாசய மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (NABARD) புதிய தலைவராக K.V.ஷாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
    • NABARD – National Bank for Agriculture and Rural Development
    • உருவான ஆண்டு – 1982 (விவாசய மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி சட்டம் 1981ன் படி)
    • தலைமையகம் – மும்பை
  • மேற்கு வங்கத்தின் ஆளுநராக சிவி ஆனந்த் போஸ் நியமிக்கப்பட்டார்.
  • கோவா மாநிலத்தில் மோபா சர்வதேச விமான நிலையம் திறப்பு.
    • இதனால் விமான நிலைய எண்ணிக்கை 140-ஆக அதிகரிப்பு.
  • நாகபுரி-பிலாஸ்பூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார் .
    • மேலும் நாகபுரி-ஷீரடி இடையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் சேவை, நாகபுரி எய்ம்ஸ் மருத்துவமனை, மரபு சார்ந்த ரத்த நோய்களின் ஆராய்ச்சி, மேலாண்மை & கட்டுபாட்டு மையத்தை தொடங்கி வைக்கிறார்.

உலக செய்தி

  • டிசம்பர் 11-ல் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப்கனவெரல் விண்வெளி ஏவுதளத்திலிருநது Space-X நிறுவனம் ராக்கெட் மூலம் ஜப்பானின் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான விண்கலம் அனுப்பப்பட்டது..
    • இவ்விண்கலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் லூனார் ரோவர் வாகனம், ஜப்பான் ரோபோ ஆகியவை அனுப்பப்பட்டுள்ளன.
    • “ஐஸ்பேஸ்” தனியார் நிறுவனத்தின் இத்திட்டத்திற்கு “ஹகுட்டோ” என பெயரிடப்பட்டுள்ளது.
    • இவ்விண்கலம் வடகிழக்குப் பகுதியில் தரையிரங்க உள்ளது.
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கும் போது அத்தடைகளுக்கு விலக்கு அளிக்கும் தீர்மானத்தினை அமெரிக்கா, அயர்லாந்து நாடுகள் தாக்கல் செய்துள்ளன.
    • இத்தீர்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது.

முக்கிய தினம்

  • உலக மலைகள் தினம் (டிசம்பர் 11)
    • கருப்பொருள் : “Women Move Mountains”
    • இத்தினம் 2003-லிருந்து அனசரிக்கப்பட்டு வருகிறது.

Dec 09 – Current Affairs  | Dec 10 – Current Affairs 

Leave a Comment