Daily Current Affairs
Here we have updated 11th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தொழிலாளர்களை தேடி மருத்துவம்
- தொழிலாளர்கள் வேலை பாரக்கும் இடங்களுக்கு சென்று மருத்துவம் அளிக்க தொழிலாளர்களை தேடி மருத்துவ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இத்திட்டமானது திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்களை தேடி மருத்துவம் – 09.01.2024
தொடர்புடைய செய்திகள்
- மக்களைத் தேடி மருத்துவம் – 20.09.2021
- இன்னுயிர் காப்போம் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் – 18.12.2021
அரசு தலைமை வழக்கறிஞர்
- தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக (அட்வகேட் ஜெனரல்) பி.எஸ்.ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞராக பதவி வகித்த ஆர்.சண்முகசுந்தரம் ராஜினாமா செய்துள்ள பின் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- மாநில அரசு தலைமை வழக்கறிஞர் – விதி 165
யாஷிமா – சென்னை வருகை
- கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க ஜப்பானின் கடலோரக் காவல்படை ரோந்து கப்பலான யாஷிமா சென்னைத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.
புவிசார் குறியீடு
- ஒடிசா மாநிலத்தின் சிவப்பு எறும்பு சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தக்கத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
- இத்துடன் ஒடிசாவில் 26 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இதற்கு முன் ஒடிசாவின் 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
லாஞ்சியா சவுரா பெயிண்டிங், டோங்கிரியா கோந்த் எம்பிராய்டரி சால்வை, கஜுரிகுமா (பனை வெல்வம்), தேன்கல் மாஜி, சிமிலி பால் காய் சட்னி, நாயகர் கண்டேமுண்டி கத்தரிக்காய், கோராபுட் காலா ஜீரா அரிசி
சர்வதேச காத்தாடி திருவிழா
- குஜராத்தில் சர்வதேச காத்தாடி திருவிழா நடைபெற உள்ளது.
பி.ஆர்.கம்போஜ்
- ஹரியானா வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தரும், பேராசிரியருமான பி.ஆர்.கம்போஜ்-க்கு எம்.எஸ்.சுவாமிநாதன் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
உக்ரம்
- இந்திய ராணுவ பயன்பாட்டிற்காக DRDO உக்ரம் துப்பாக்கியினை தயாரித்துள்ளது.
- DRDO – Defence Research & Development Organization – 1958
விஸ்கர்மா யோஜனா
- பிரத மந்திரியின் விஸ்கர்மா யோஜனா திட்டத்தினை ஜம்மு காஷ்மீர் செயல்படுத்தியுள்ளது.
- இதன் மூலம் பிரத மந்திரியின் விஸ்கர்மா யோஜனா திட்டத்தினை செயல்படுத்திய முதல் யூனியன் பிரதேசமாக மாறியுள்ளது.
- பிரத மந்திரி விஸ்கர்மா யோஜனா – 17.09.2023
டிரோன் அறிமுகம்
- அதானி டிஃபன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திரிஷ்டி 10 ஸ்டார்லைனர் டிரோன் இந்திய கடற்படையிடம் இணைக்கப்பட்டுள்ளது.
- 36 மணி நேரம் தொடர்ந்து பறந்து கண்காணிப்பு, உளவுப் பணிகளை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
10வது துடிப்பான குஜராத் மாநாடு
- உலக முதலீடுகளை ஈர்க்க குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் 10வது துடிப்பான குஜராத் மாநாடானது நடைபெறுகிறது.
- அதானி குழுமமானது ரூ.2லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது.
- அதானி குழுமமானது கட்சின் கெளதா பகுதியில் 725 ச.கி.மீ. உலகின் மிகப்பெரிய பசுமை எரிசக்தி பூங்காவினை அமைத்து கொண்டு இருக்கிறது.
ஆசியான் கூட்டமைப்பு
- கிழக்கு தைமூர் நாடானது ஆசியான் கூட்டமைப்பில் இணைய உள்ளது.
- மேலும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பிலும் இணைய உள்ளது.
பூடான்
- பூடான் நாட்டின் பிரதமராக ஷெரிங் டாக்பே பொறுப்பேற்க உள்ளார்.
ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டி
- 10மீ ஏர் பிஸ்டல் ரைஃபிள் மகளிர் தனிநபர் பிரிவில் நான்சி தங்கம் வென்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் ரைஃபிள் மகளிர் அணிகள் பிரிவில் நான்சி, இளவேனில் வாலறிவன், மெஹூலி கோஷ் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
- 10மீ ஏர் பிஸ்டல் ரைஃபிள் ஆடவர் தனிநபர் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல் தங்கம் வென்றுள்ளார்.
- 10மீ ஏர் பிஸ்டல் ரைஃபிள் மகளிர் அணிகள் பிரிவில் ருத்ராங்க்ஷ் பாட்டீல், அர்ஜூன், ஸ்ரீகார்த்திக் சபரிராஜ் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.
திருப்பூர் குமரன் நினைவு தினம் – Jan 11
- காலம் 04.10.1904 – 11.01.1932
- சிறப்பு பெயர்: கொடிகாத்த குமரன்
லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினம் – Jan 11
- காலம் 02.10.1904 – 11.01.1966
- இந்தியாவின் இரண்டாவது பிரதமர்
தேசிய மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் (National Human Trafficking Awareness Day) – Jan 11
January 9 Current Affairs | January 10 Current Affairs