Daily Current Affairs
Here we have updated 11th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெண்கள் பாதுகாப்பு
நகரங்கள் அடிப்படையில்
- பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற நகரங்களில் பெங்களூரு முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – சென்னை
- 3வது இடம் – மும்பை
மாநிலங்கள் அடிப்படையில்
- பெண்கள் பணிபுரிவதற்கு ஏற்ற மாநிலங்களில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது.
மாநில கட்சி
- நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய இரண்டு கட்சிகள் மாநில கட்சியாக (State Party) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
- நாம் தமிழர் கட்சி 1958-ல் சி.பா.ஆதித்தனாரால் துவங்கப்பட்டது.
- விடுதலை சிறுத்தைகள் கட்சி 1982-ல் மலைச்சாமி என்பவரால் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என்ற பெயரில் துவக்கப்பட்டது.
- இக்கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் 4 மாநிலக் கட்சிகளும், இந்திய அளவில் 6 தேசிய கட்சிகளும் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
மாநிலகட்சித் தகுதிகள்
- மாநில சட்டப்பேவை தேர்தலில் குறைந்தபட்சம் 6% வாக்குகள் பெற்றிருக்க வேண்டும்.
- 25 தொகுதிகளுக்கு ஒரு மக்களவை தொகுதி அல்லது சட்டப்பேரவை தேர்தலில் குறைந்த பட்சம் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
- சட்டப்பேரவை தொகுதிகளில் குறைந்தபட்சம் 3% தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
சிக்கிம்
- இந்தியாவின் முதல் ஆர்கானிக் மீன்வளத் தொகுப்பு சிக்கிம் மாநிலத்தின் சார்பங் பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஹென்லி பாஸ்போர்ட் 2025
- ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டில் இந்தியாவில் 85வது இடத்தை பெற்றுள்ளது.
- முதலிடம் – சிங்கப்பூர்
- இரண்டாம் இடம் – ஜப்பான்
- கடைசி இடம் (106) – ஆப்கானிஸ்தான்
ஃபிளமிங்கோ திருவிழா
- ஆந்திரபிரதேசத்திலுள்ள பழவேற்காடு ஏரி, நெல்லப்பட்டு பறவைகள் சரணாலயத்தில் ஃபிளமிங்கோ திருவிழா நடைபெற்றது.
- இவ்விழாவில் ஃபிளமிங்கோ என்ற வெளிநாட்டு பறவையானது ஆந்திரப்பிரதேசத்திற்கு வருவதை முன்னிட்ட்டு கொண்டாடப்படுகிறது.
சி-மார்க் சுரங்கப்பாதை
- சி-மார்க் (Z-Morh) சுரங்கப்பாதை காஷ்மீரின் கந்தேர்பால் பகுதியில் தொடங்கப்பட உள்ளது.
- இந்த சுரங்கப்பாதையானது காஷ்மீரையும் லடாக்கையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.
ஜீனோம் இந்தியா தரவுத்தளம்
- ஜீனோம் இந்தியா தரவுத்தளம் IBDC-ல் சேமிக்கப்பட்டுள்ளது.
- 83 இனக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10,000 மக்களின் ஜீனிலுள்ள டி.என்.ஏ-வை வரிசைபடுத்தப்பட்டுள்ளது. இதற்கான தரவுகள் IBDC-ல் சேமிக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் மரபணு கோளாறு கண்டுபிடித்து அதற்கேற்றார் போல் மருந்துகள் தயாரிக்க உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- IBDC (Indian Biological Data Center) – இந்திய உயிரியல் தரவு மையம்
- IBDC அமைந்துள்ள இடம் – ஃபரிதாபாத் (ஹரியானா)
பி.என்.ஸ்ரீகிருஷ்ணா
- ஐடி சரிபார்ப்பு மற்றும் தரவு பகிர்வு தளத்தின் தலைவராக பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- தரவு பாதுகாப்பு சட்டம் பரிந்துரை செய்தவர் – பி.என்.ஸ்ரீகிருஷ்ணா
ஜோசப் அவுன்
- லெபனான் நாட்டின் அதிபாராக ஜோசப் அவுன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கீரின்லாந்து
- அமெரிக்காவின் வர்த்தகத்திற்கு உதவும் கீரின்லாந்து, பனமா கால்வாய்களை அமெரிக்காவுடன் இணைக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- கீரின்லாந்து டென்மார்க்கிற்கு சொந்தமாக இருந்து வந்த நிலையில் 1979-ல் சுயாட்சி வழங்கப்பட்டது.
- கீரின்லாந்து 80% பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளது.
- 57,000 மக்கள் வசிக்கின்றன.
முக்கிய தினம்
தேசிய மனித கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு தினம் (National Human Trafficking Awareness Day) – ஜனவரி 11