Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th July 2024

Daily Current Affairs

Here we have updated 11th July 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மக்களுடன் முதல்வர் திட்டம்

Vetri Study Center Current Affairs - Makkaludan Muthalvar

  • நகர்புறங்களில் செயல்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதியில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
  • இத்திட்டம் தருமபுரியில் தொடங்கி வைக்கப்படுகிறது.
  • கள ஆய்வில் முதல்வர் திட்டம், உங்கள் தொகுதியில் முதல்வர் போன்ற திட்டங்களின் விரிவாக்கமாக மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது.
  • இத்திட்டதின் கீழ் 15 அரசுத் துறைகள் 44 அரசு திட்ட சேவைகளை தருகிறது.
  • 30 நாட்களில் தீர்வு காணப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • நகர்புறங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் 18.12.2023-ல் கோவையில் தொடங்கப்பெற்றது.

குழந்தை இறப்பு விகிதம்

  • தமிழ்நாட்டின் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 9ஆக குறைந்துள்ளது.
  • 2020-ல் குழந்தை இறப்பு விகிதமானது 13-ஆக இருந்துள்ளது.
  • குழந்தை இறப்பு விகிதம் – 1000 குழந்தைகளுக்கு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையை குறிப்பிடுவது

சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024

  • 2024ஆம் ஆண்டிற்கான சுற்றுலா மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 39வது இடத்தினை பிடித்துள்ளது.

பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம்

  • 10வது பிரிக்ஸ் நாடாளுமன்ற மன்றம் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற உள்ளது.
  • பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் நாடாளுமன்றத் தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளன.
  • இந்தியா சார்பில் சபாநாயகரான ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு – 16.06.2009
  • உறுப்பு நாடுகள் – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம்

ரேச்சல் ரீவ்ஸ்

Vetri Study Center Current Affairs - Rachel Reeves

  • இங்கிலாந்து வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் ரேச்சல் ரீவ்ஸ் பிரிட்டனின் நிதியமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் பிரிட்டனின் முதல் பெண் நிதியமைச்சர் ஆவார்.

எலிசா டி அண்டா மட்ராசோ

  • நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தலைவராக எலிசா டி அண்டா மட்ராசோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி ஜூன் மாத விருதுகள்

  • சிறந்த வீரர் – ஜஸ்பிரித் பும்ரா
  • சிறந்த வீராங்களை – ஸ்ருதி மந்தனா

கிரிக்கெட் அணி சாதனை

  • சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 150 வெற்றிகளை பெற்றுள்ள முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

யூரோ கால்பந்து

  • ஸ்பெயின் கால்பந்து வீரரான லேமின் யமால் யூரோ கால்பந்து போட்டியில் கோல் அடித்து மிக இளவயதில் (16 வயது) கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

நூல்வெளியீடு

Vetri Study Center Current Affairs - Folk Deities of Tamil Nadu

  • தி இந்து குழுமானது தமிழக சுற்றுலாத் துறையுடன் இணைந்து Forts of Tamilnadu: A walk – Through என்னும் நூலினை வெளியிட்டுள்ளது.
  • மேலும் இந்து சமய அறநிலையத்துறையுடன் இணைந்து Folk Deities of Tamil Nadu நூலினை வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்த இருநூல்களையும் தமிழக முதல்வர் வெளியிட்டுள்ளார்.
  • Forts of Tamilnadu: A walk – Through – தமிழகத்திலிலுள்ள 17 கோட்டைகளை பற்றி கூறுகிறது.
  • Folk Deities of Tamil Nadu – நாட்டார் தெய்வங்களை பற்றி கூறுகிறது.

முக்கிய தினம்

உலக பார்கின்சன் நோய் தினம் (World Parkinson’s Disease Day) – ஜூலை 11

உலக மக்கள் தொகை தினம் (World Population Day) – ஜூலை 11

  • கருப்பொருள்: To Leave no one behind count everyone

Related Links

Leave a Comment