Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th October 2023

Daily Current Affairs

Here we have updated 11th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பெயர் மாற்றம்

Vetri Study Center Current Affairs - Tanjore College of Agriculture

  • தஞ்சாவூர் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பெயரை டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை அறிவியல் மற்றும் மரபியில் பிரிவில் சிறந்த மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

சமாதானத் திட்டம்

Vetri Study Center Current Affairs - Peace Plan

  • வணிகர்கள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தும் வகையில் சமாதானத் திட்டத்தினை அக்டோபர் 16-ல் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
  • இத் திட்டமானது 2024 பிப்ரவரி 15 வரை நிலுவையில் இருக்கும்.
  • தமிழக அரசிற்கு வணிகர் செலுத்த வேண்டிய வரிநிலுவைத் தொகை தொடர்பாக 2.11 லட்சம் வழக்குகள் நிலவையில் உள்ளன.
  • 2017-ல் ஜி.எஸ்டி. வரி அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும் எற்கனவே நடைமுறையில் உள்ள வரிச்சட்டங்களின் கீழ் உள்ள பழைய நிலவைத் தொகைகளை வசூலிப்பததிற்காக சமாதானத்திட்டமான அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் கள ஆய்வு 

Vetri Study Center Current Affairs - Copper Coins of Chola and Vijayanagara Empires

  • கடலூர் மாவட்டம், உளுந்தம்பட்டு பகுதி தென்பெண்ணை ஆற்றுப்படுகையில் நடைபெற்ற கள அகழாய்வில் சோழ, விஜயநகர பேரரசு கால செப்பு நாணயங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன
  • இதில் 2 சோழ பேரரசு காலத்தையும், 1 விஜயநகர பேரரசு காலத்தையும் சேர்ந்ததாக கருதப்படுகிறது.
  • சோழ கால நாணயத்தின் ஒருபுறத்தில் ஒருவர் கையில் மலர் ஏந்தி நின்றவாரும், அவரது இடது பக்கத்தில் 4 வட்டங்களும், மேலே பிறையும், கீழே மலரும் உள்ளன.
  • விஜயநரக கால நாணயத்தின் ஒருபுறத்தில் தேவநாகி எழுத்தில் ஸ்ரீநீலகண்டா எனவும் மற்றொரு புறத்தில் காளைஉருவமும், பிறையும் உள்ளன.

பொருளாதார வளர்ச்சி

Vetri Study Center Current Affairs - Economic development

  • சர்வதேச செலவாணி நிதியமானது (IMF) நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.3%மாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
  • உலகின் பொருளாதார வளர்ச்சி 3%மாக இருக்கும் எனக் கணித்துள்ளது.

சாஸ்த்ரா ராமானுஜன் பரிசு 2023

Vetri Study Center Current Affairs - Ripyang Chang

  • 32 வயதிற்குட்பட்டோருக்கான சாஸ்த்ரா ராமானுஜன் பரிசானது அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக உதவி பேராசிரியரான ரிபியாங் சாங்கிற்கு வழங்கப்பட்டுள்ளது.
  • கும்பகோணத்தின் சாஸ்த்ரா பல்கலைக்கழகமானது இப்பரிசினை வழங்குகிறது.

IORA – அமைச்சர்கள் கூட்டம்

Vetri Study Center Current Affairs - Jaishankar

  • இந்திய பெருங்கடலோர நாடுகள் கூட்டமைப்பின் 23வது அமைச்சர்கள் மாநாடானது (IORA) இலங்கையில் கொழும்பு நகரில் நடைபெற உள்ளது.
  • இந்தியா சார்பில் எஸ்.ஜெயங்சர் பங்கேற்க உள்ளார்.
  • 2023-2025 ஆண்டுக்கான இக்கூட்டமைப்பின் தலைமை பொறுப்பினை இலங்கையும், துணைத் தலைமை பொறுப்பினை இந்தியாவும் வகிக்க உள்ளது.
  • IORA – Indian Ocean Rim Association – 1997
  • இதன் தலைமையகம் மொரிசியஸ்ஸில் உள்ளது. இக்கூட்டமைபில் 23 உறுப்பு நாடுகள் உள்ளன.

மகாத்மா காந்தி சிலை (Statue of Mahatma Gandhi)

Vetri Study Center Current Affairs - Statue of Mahatma Gandhi

  • தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிலுள்ள டால்ஸ்டாய் பண்ணையில் 8 அடி உயர காந்தி சிலையானது தென் ஆப்பிரிக்க இந்திய தூதரான பிரபாத் குமார் திறந்து வைத்தார்.
  • 1910-ல் டால்ஸ்டாய் பண்ணையானது துவங்கப்பட்டது.

செல்வந்தர்கள் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Indian Rich List

  • 2023-ம் ஆண்டுக்கான இந்திய செல்வந்தர்கள் பட்டியலில்  முதல் மூன்று இடங்கள் முறையே முகேஷ் அம்பானி (ரூ.8.08 லட்சம்), கெளதம் அதானி (ரூ.4.47 லட்சம் கோடி), ஆதார் பூனா வாலா (ரூ.2.78 லட்சம் கோடி) ஆகியோர் பிடித்துள்ளனர்.
  • ஹுகுன் இந்தியா நிறுவனமானது இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

தேசிய விளையாட்டு போட்டிகள் (National sports competitions)

Vetri Study Center Current Affairs - National sports competitions

  • 37வது தேசிய விளையாட்டு போட்டிகள் கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கான ஜோதி ஓட்டம் தொடங்கியுள்ளது.
  • இதன் இலச்சினையாக மோகோ (MOGA) தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • MOGA – இந்திய காட்டெருமை – கோவின் மாநில விலங்கு

பாட்மிண்டன் தரவரிசை

Vetri Study Center Current Affairs - Satwik Rankireddy & Chirag Shetty

  • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி இணை பாட்மிண்டன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
  • ஆடவர் இரட்டையர் பிரிவில் முதன் முறையாக முதலிடம் பிடிக்கும் சாதனை புரிந்துள்ளன.

உலக பெண் குழந்தைகள் தினம் (International Day of the Girl Child)Oct 11

Vetri Study Center Current Affairs - International Day of the Girl Child

  • கருப்பொருள்: “Invest in Girls Rights our Leadership & well – Being”.

 

October 09 Current Affairs | October 10 Current Affairs

Leave a Comment