Daily Current Affairs
Here we have updated 11th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சிலை திறப்பு
- வெண்ணி காலடி, குயிலி, எத்தலப்பர் நாயக்கர் போன்றோருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது.
- வெண்ணி காலடி – புலித்தேவரின் படைத்தளபதி
- குயிலி – வேலுநாச்சியாரின் தோழி, உடையாள் என்ற படைப்பிரிவின் பெண் படைத்தளபதி
- எத்தலப்பர் நாயக்கர் – தளி பகுதி பாளையக்காரர், வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எதிரான ஆங்கிலேயர்களின் சதியை எதிர்த்தவர்.
பத்ம விபூசன் விருது
- சமீபத்தில் காலமான ரத்தன் டாடா 2008-ல் பத்ம விபூசன் விருது விருதினை பெற்றுள்ளார்.
தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகம்
- லோத்தலில் தேசிய கடல் சார் பாரம்பரிய வளாகம் அமைய உள்ளது.
- லோத்தல் குஜராத்தில் அமைந்துள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம்
- செறிவூட்டப்பட்ட அரிசி திட்டமான பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- செறிவூட்டப்பட்ட அரிசி திட்டமானது PDS, ICDS, POSHAN திட்டங்களுக்கு கீழ் வழங்கப்பட்டுள்ளது.
- PDS – Public Distribution System
- ICDS (Integrated Child Development Services) – ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் – 2.10.1975
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் – 2020
நோபல் பரிசு – 2024
- இலக்கியத்திற்கான 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு தென்கொரியாவைச் சேர்ந்த ஹான் காங் என்பவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித் வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் இவரின் கவிதை உரைநடைக்காக வழங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2023 இலக்கியத்திற்கான நோபல் பரிசு – ஜான் ஃபோஸ்
- 1913 இலக்கியத்திற்கான நோபல் பரிசு – இரவிந்திரநாத் தாகூர் (கீதாஞ்சலி)
SARTHE 1.0
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கான சட்ட சேவை வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்ய SARTHE 1.0-யை சமூக நீதி அமைச்சகம் ஆரம்பித்துள்ளது.
கைமுர் வனவிலங்கு சரணாலயம்
- பீகாரிலுள்ள கைமூர் வனவிலங்கு சரணாலயத்தை கைமூர் புலிகள் சரணாலயமாக மாற்றப்படுகிறது.
- பீகாரில் வால்மீகி புலிகள் சரணாலயமும் அமைந்துள்ளது.
தொலைநோக்கி
- ஆசியாவின் மிகப்பெரிய செரன்கோவ் தொலைநோக்கி லடாக்கில் திறக்கப்பட்டுள்ளது.
இணை மாவட்ட திட்டம்
- அசாம் மாநிலமானது இணை மாவட்ட திட்டத்தினை உருவாக்கியுள்ளது.
காரக்கல் இனப்பெருக்க மையம்
- குஜராத்தின் கட்ச் பகுதியில் காரக்கல் இனப்பெருக்க மையம் மற்றும் பாதுகாப்பு மையம் திறக்கப்பட உள்ளது.
ட்ரக்கோமா
- இந்தியாவில் ட்ரக்கோமா (Trachoma) என்னும் நோய் இல்லையென உலக சுகாதார நிறுவனம் (WHO) அறிவித்துள்ளது.
நிமா ரிஞ்சி ஷெர்பா
- பூமியிலுள்ள 14 சிகரங்களையும் நேபாளத்தை சேர்ந்த நிமா ரிஞ்சி ஷெர்பா (Nima Rinjii Sherpa) ஏறி முடித்துள்ளார்.
- இதன் மூலம் இச்சாதனையை படைத்த மிக இளவயது நபர் என்ற பெருமையை பெறுகிறார்
ரஃபேல் நடால்
- ஸ்பெயின் நாட்டு டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
- இவர் 22 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
சர்வதேச பெண் குழந்தை தினம் (International Girl Child Day) அக்டோபர் – 11
- தேசிய பெண் குழந்தைகள் தினம் – ஜனவரி 24
- மாநில பாதுகாப்ப பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் – பிப்ரவரி 24
தமிழக அரசின் திட்டங்கள்
பள்ளி இல்ல நூலக திட்டம் – 2022
மனம் திட்டம் – 22.12.2022