Daily Current Affairs
Here we have updated 11th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மகாகவி தினம்
- பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி தினமாக கொண்டாடப்படுகிறது.
- பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11 மகாகவி தினமாக தமிழக அரசால் அறிவித்துள்ளது.
- பாரதியார் காலம் – 11.12.1882 – 11.09.1921
GST விகிதம்
- புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கான GST விகிதம் 12%லிருந்து 5%மாக குறைக்கப்பட்டுள்ளது.
- கார் இருக்கைகளுக்கான GST விகிதம் 18%லிருந்து 28%ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அணுமின் நிலையம்
- ரஷ்யா 2036-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின்நிலையம் அமைக்க முடிவு செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 2040க்குள் இந்தியா நிலவுக்கு மனிதர்களை அனுப்ப முடிவு
- 2050க்குள் இந்தியா நிலவில் விண்வெளி மையம் அமைக்க முடிவு.
செமிகான் இந்தியா 2024 மாநாடு
- உத்திரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் செமிகான் இந்தியா 2024 மாநாடு நடைபெற்றுள்ளது.
மால்பே & முல்கி
- கொச்சி கப்பல் கட்டும் நிறுவனமானது நீர்மூழ்கிக் கப்பலின் எதிர்ப்புப் போர் நீர்க்கப்பலான மால்பே & முல்கி கப்பல்களை உருவாக்கியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
நீர்மூழ்கி கப்பலை எதிர்க்கும் நீர்கப்பல்
- மாஹி
- மல்வான்
- மங்ரோல்
கா.செல்லப்பன்
- மொழிபெயர்ப்பாளர் கா.செல்லப்பன் காலமானர்.
- இவர் இரவிந்திரநாத் தாகூர் எழுதிய கோரா புதினத்தினை தமிழ் மொழியில் மொழிபெயர்த்தற்காக சாகித்திய அகாதெமி விருதினை பெற்றுள்ளார்.
- கருணாநிதியின் குறளோவியம், தென்பாண்டிச்சிங்கம், மீசை முளைத்த வயதில் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
- 2006ஆம் ஆண்டுக்கான பாரதிதாசன் விருதினையும், 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதினையும் பெற்றுள்ளார்.
யுத் அபியாஸ்
- இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே யுத் அபியாஸ் எனும் கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- சதா தான்சிக் – இந்தியா & சவுதி அரேபியா கூட்டு இராணுவப் பயிற்சி
- இந்திரா – இந்தியா & ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சி
சர்வதேச சோலார் கூட்டணி
- சர்வதேச சோலார் கூட்டணியில் (ISA) 101வது உறுப்பினராக நேபாளம் இணைந்துள்ளது.
- ISA (International Solar Alliance) – 2015
புதிய வளர்ச்சி வங்கி
- புதிய வளர்ச்சி வங்கியில் உறுப்பினராக அல்ஜீரியா இணைந்துள்ளது.
- புதிய வளர்ச்சி வங்கி – 2015
சொத்து வரி
- கோடீஸ்வரர்களுக்கு 2% சொத்து வரியை பிரேசில் நாடானது G20 மாநாட்டில் முன்மொழிய உள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
- 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியின் புடாபெஸ்ட் (Budapest) பகுதியில் நடைபெற்ற உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற்றது.
தீபாலி தாபா
- இந்திய குத்துச்சண்டை வீரரான தீபாலி தாபா முதல் ஆசிய பள்ளி மாணவி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
தேசிய வன தியாகிகள் தினம் (National Forest Martyrs Day) – செப்டம்பர் 11
இன்றைய நாள் பற்றிய குறிப்புகள்
- சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
- 1893 செப்டம்பர் 11-ல் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தர் உரையாற்றிய தினம்
- 11.09.2001 – அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நாள்