Daily Current Affairs
Here we have updated 11th to 13th February 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பறவைக் கூடம்
- இந்தியாவின் மிகப்பெரிய பறவைக் கூடம் திருச்சியின் கம்பரசம்பேட்டையில் திறக்கப்பட்டுள்ளது.
- இதன் பரப்பளவு 60,000 ச.கி.மீ
சிவசக்தி
- சந்திரயான்-3 தரையிறங்கிய சிவசக்தியை சுற்றியுள்ள பகுதி சுமார் 3.7 பில்லியன் ஆண்டுகள் பழமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- சந்திரயான்-2 தரையிறங்கிய இடம் – தரங்கா
- சந்திரயான்-1 தரையிறங்கிய இடம் – ஜவ்கர்
பொட்டாஷ் வளங்கள்
- இந்தியாவில் அதிக பொட்டாஷ் வளங்கள் ராஜஸ்தானிலும், அதற்கு அடுத்தபடியாக பஞ்சாப்பிலும் காணப்படுகின்றன.
சைக்ளோன் கூட்டு ராணுவ பயிற்சி
- இந்தியா மற்றும் எகிப்து இடையே சைக்ளோன் என்னும் கூட்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது.
இலக்கு நிர்ணயம்
- நிணநீர் ஃபைலேரியாசிஸை (யானைக்கால்) ஒழிக்க 2027-ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பண்டோரா திட்டம்
- சூரிய மண்டலத்தின் வெளிப்புறம் உள்ள கோள்களின் வளிமண்டலத்தை ஆராய பண்டோரா திட்டத்தினை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் தொடங்க உள்ளது.
WAVES உச்சி மாநாடு
- முதலாவது WAVES உச்சி மாநாடு மகாராஷ்டிராவில் நடைபெற உள்ளது.
தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணையம்
- தேசிய துப்புரவு தொழிலாளர் ஆணையமானது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த ஆணையம் 1993-ல் ஆரம்பிக்கப்பட்டது.
- இதன் தலைவராக தமிழகத்தை சேர்ந்த எம்.வெங்கடேசன் உள்ளார்
ஹென்லி பாஸ்போர்ட்
- ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு பட்டியல் 2025-ல் இந்தியா 80வது இடத்தை பிடித்துள்ளது
மியூனிக் பாதுகாப்பு மாநாடு
- 61வது மியூனிக் பாதுகாப்பு மாநாடானது ஜெர்மெனியின் மியூனிக் என்ற இடத்தில் நடைபெற்றுள்ளது.
- 1963 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
திரியா நகரம்
- உலகாளவிய நகரமான திரியா சவுதி அரேபியாவில் கட்டப்பட்டு வருகிறது.
முக்கிய தினம்
யுனானி தினம் (Unani Day) – பிப்ரவரி 11
உலக நோயுற்றோர் தினம் (World day of the sick) – பிப்ரவரி 11
பாதுகாப்பான இணைய தினம் (Safer Internet Day) – பிப்ரவரி 11
தேசிய உற்பத்தித்திறன் தினம் (National Productivity Day) – பிப்ரவரி 12
உலக வானொலி தினம் (World Radio Day) – பிப்ரவரி 13
தேசிய பெண்கள் தினம் (National Women’s Day) – பிப்ரவரி 13