Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th January 2023

Daily Current Affairs

Here we have updated 12th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • ஜனவரி 12ல் சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் அயலகத் தமிழர் தினம் நடைபெற உள்ளது.
    • 2016-17ஆம் நிதியாண்டில் இருந்து பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • ஜனவரி 11ல் கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடியில் கண்ணாடி கூண்டுப்பாலம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கும் தடுப்பூசிகளுக்கு டிஜிட்டல் முறையிலான எண்ம சான்றிதழ்கள் வழங்கும் முறை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
    • முதற்கட்டமாக திண்டுக்கல், ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.
    • தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி 11தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
      • காசநோய்
      • கல்லீரல் தொற்று மற்றம் புற்றுநோய்
      • இளம்பிள்ளை வாதம்
      • கக்குவான் இருமல்
      • ரண ஜன்னி
      • தொண்டை அடைப்பான்
      • இன்ஃப்ளூயன்ஸா
      • தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய்
      • ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
      • விட்டமின் – ஏ குறைபாடு
  • ஜனவரி 11ல் சர்வதேச சொகுப்பு கப்பல் தூத்துகுடி வ.உசி. துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தது.
    • கப்பலின் பெயர் – எம்.எஸ். அமிரா
    • 2022 டிசம்பர் 22 பிரிட்டனில் இருந்து புறப்பட்டது.
  • 2027 ஆண்டு வரை “முதல்வரின் விரிவான காப்பீட்டத் திட்டம்” நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • இந்திட்டத்தில் 1.23கோடிபேர் பயனடைந்துள்ளனர்
    • 2009-ல் கலைஞர் காப்பீடு திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • 2011-ல் மேம்படுத்தப்பட்டு “முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம்” எனப் பெயர் மாற்றம் செய்யபட்டது.
    • 2023-ல் இத்திட்டம் முடிவடைய உள்ள நிலையில் 2027 வரை நீடிக்கப்பட்டள்ளது

தேசிய செய்தி

  • அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் யுபிஐ செயலி மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • அடுத்த 3 மாதங்களில் எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஸ்எல்வி உள்ளிட்ட 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி (ISRO) மையத்தில் தலைவர் எம். சுவாமிநாத் தெரிவித்துள்ளார்.
  • இயற்கை வேளாண் பொருட்கள், லிதைகளை ஏற்றுமதி செய்ய “பல மாநில கூட்டுறவு சங்கள் (எம்எஸ்சிஎஸ்) 2002” விதியின் கீீழ் தேசிய அளவிலான இயற்கை வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் “நாட்டு நாட்டு” பாடல் கோல்டன் குளோப் விருதினை பெற்றுள்ளது.
  • ஒடிசாவின் சண்டீபூர் கடற்கரையில் நடைபெற்றபிருத்வி-2″ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
    • சுமார் 350 கீ.மி. தொலைவில் அமைந்துள்ள இலக்குகளை அழிக்கும்

உலக செய்தி

  • சர்வதேச விண்வெளிநிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள், 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்காக செலுத்தப்பட்ட சூயஸ் விண்கலத்தில் எற்பட்ட கசிவின் காரணமாக புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
  • கிரீஸ் நாட்டின் கடைசி அரசரான கான்ஸ்டன்டீன் (82) காலமானார்.

விளையாட்டு செய்தி

  • ஆசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா, சரத் கமல், மனிகா பத்ரா ஆகியோர் உலக டேபிள் டென்னிஸ் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • ஜனவரி 11-ல் ஒடிசாவில் சர்வதேச ஹாக்கி சம்மேளனம் நடத்தும் ஆடவர் ஹாக்கி போட்டி தொடங்கியது.

முக்கிய தினம்

  • தேசிய இளைஞர் தினம் (ஜனவரி 12)
    • விவேகானந்தர் பிறந்த நாள் 1984 முதல் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Jan 08-09 Current Affairs | Jan 10 Current Affairs

Leave a Comment