Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th March 2023

Daily Current Affairs

Here we have updated 12th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்றும் மேலும் சில நலத்திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • துணி நூல் துறைக்கு தனி ஆணையரகம் அமைப்பு, 24,684 பேருக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்குதல் போன்றவை செயல்படுத்தப்பட்டுள்ளன.
    • கைத்தறிக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் 200 யூனிடிலிருந்து  300 யூனிட்டாகவும், விசைத்தறிக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் 750 யூனிடிலிருந்து 1,000 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
  • “காலா பாணி” நாவலுக்காக சாகித்திய அகாதெமி விருது தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் எழுத்தாளருமான மு.ராஜேந்திரன்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
  • மார்ச் 14-ல் ஐக்கிய நாடுகள் சபையில் மகளிர் நிலை குறித்த 67-ஆவது அமர்வு நியூயார்க்கில் நடைபெறுகிறது.
    • “திறன் மேம்பாடு மூலம் மகளிர் கூட்டுறவு தலைமைக்கான புதுமையான வலையமைப்பு” என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
  • கரோனா தொற்று காலத்திலும் வழக்குகளுக்கு தீர்வு கண்டதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருந்ததென சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொ) டி.ராஜா தெரிவித்துள்ளார்.
    • 2015-ல் கொண்டு வரப்பட்ட வணிக வழக்குகள் சட்டம் புரட்சிகரமானது என தெரிவித்துள்ளார்.
    • கரோனா காலகட்டமான 2020-2022 வரை அதிக வழக்குகள் தீர்வு காணப்பட்டத்தில் தமிழகம் முதலிடம் பிடிக்கிறது.
    • நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்கள்  மூலம் 63 லட்சம் வழக்குகளில் தமிழகத்தில் உள்ள 2 உயர்நீதி மன்றங்களின் மூலம் 14லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
    • 21% வழக்குகள் தீர்வு காணப்பட்டு நாட்டிலேயே தமிழகம் முதலிடம்.
    • வணிக வழக்குகளை கையாளுவதில் உலக அளவில் 158-வது இடத்திலிருந்து வேகமாக முன்னேறி முதல் 10 நாடுகளுக்குள் இந்தியா வந்தள்ளது.
  • “இயற்கையை பேணுவோம்” என்ற தலைப்பில் சென்னை ராணி மேரி கல்லூரியில் “சிற்பி” திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 5லட்சம் விதை பந்துகளை தயாரித்து அரசுபள்ளி மாணவ மாணவிகள் சாதனை படைத்துள்ளன.
    • தமிழகத்தில் வனப்பரப்பை அதிகரிக்கும் வகையில் “பசுமை தமிழ்நாடு” என்ற திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலுள்ள 22.7% வனபரப்பை 33%மாக உயர்த்த வேண்டும் எனவும் முடிவு செய்ப்பட்டது.
    • பசுமை தமிழ்நாடு – 24.09.2022
    • சிற்பி திட்டம் – 14.09.2022
  • சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம்.

தேசிய செய்தி

  • கைவினைஞர்களுக்கு “பிஎம் விகாஸ்” (பிரதமரின் விஸ்வகர்மா கெளஷல் சம்மான்) திட்டம் அதிகாரமளிக்கும் என்ற பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
    • இத்திட்டம் கைவினைஞர்கள் மற்றும் சிறுதொழில்களில் தொடர்புடையோரை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறது.
    • எளிதாக கடன் பெறுதல், திறன் மேம்பாடு, தொழில் நுட்பம் சார்ந்த ஆதரவு, எண்ம அதிகாரமளித்தல், வணிகப் பெயர் ஊக்குவிப்பு, சந்தைப்படுத்ததல் என ஒவ்வொரு “விஸ்வகர்மா”வுக்கும் (கைவினைஞர்கள்) அமைப்பு ரீதியிலான ஆதரவை அரசு உறுதி செய்யும். கைவினைஞர்களை மேம்படுத்தும் அதே வேளையில்  அவர்களின் வளமையான பாரம்பரியத்தையும் இத்திட்டம் பாதுகாக்கும்.
    • பிரதமரின் தற்சார்பு நிதி (ஸ்வநிதி) திட்டம், வீதியோர வியாபாரிகளுக்கு பலனளிப்பது போல, பிஎம் விகாஸ் திட்டம் கைவினைஞர்களுக்கு பலனளிக்கும் என்று கூறியுள்ளார்
  • ஒரே பூமி, ஒரே சூரியன், ஒரே மின்சார விநியோகக் கட்டமைப்பு என்ற கொள்கை மூலம் மிகை மின்சார உற்பத்தியை நாடுகள் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
  • ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் 483 ரயில் நிலையங்களில் நெசவாளர்கள் கைவினைஞர்களின் படைப்புகள் உற்பத்தி பொருள்களின் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

உலகச் செய்தி

  • சீன பிரதமராக லீ கியாங் தேர்வு.
    • கடந்த 10 ஆண்டுகளாக பிரதமாகப் பதவி வகித்து வரும் லீ கெகியாங்கு பதிலாக லீ கியாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Mar 10 Current Affairs  |  Mar 11 Current Affairs

Leave a Comment