Daily Current Affairs
Here we have updated 12th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- நவம்பர் 11-ல் திண்டுக்கல்லில் நடைபெற்ற காந்தி கிராம கிராமியப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
- இவ்விழாவில் மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு கெளரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.
- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்ட 6 பேர்க்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளித்துள்ளது.
- கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற தமிழக முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.
- 14-ம் நூற்றாண்டை சேர்ந்த பிற்கால பாண்டியர் காலத்திய வில்லேந்திய வீரன் நடுகல் திண்டுக்கல் மாவட்டம் கோவிலூரில் கண்டுபிடிக்கப்பட்டது.
தேசிய செய்தி
- புவேனஸ்வரிலுள்ள ஜெய்தேவ் பவனில் நவம்பர் 11-ல் இந்திய குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சிலின் (AICTE) பொறியியல் புத்தகங்களை ஒடியா மொழியில் அறிமுகப்படுத்தினார்.
- ஆங்கில வழியில் தொழில்நுட்ப கல்வியை மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்ட காரணமாக தேசிய கல்விக் கொள்கை-2020ன் கீழ் பிராந்திய மொழிகளில் தொழிற்நுட்ப கல்வியை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது
- போபால் இரயில் நிலையத்திற்கு 4-நட்சத்திரங்களுடன் “Eat Right station” சான்றிதழை பயணிகளுக்கு உயர்தர, சத்தான உணவை வழங்கியதற்கா Food Safety and Standards Authority of India (FSSAI)-ஐ வழங்கியுள்ளது.
- இந்தியாவின் முதல் பெண் தாவரவியலாளர் எடவலத் கக்கட் ஜானகி அம்மாள் 125வது பிறந்த நாளையொட்டி நிர்மலா ஜேம்ஸ் எழுதிய “வாழ்க்கை மற்றும் அறிவியல் பங்களிப்புகள்” நூலினை “என்வியு ரிசரச் அண்ட் டெவலப்மென்ட்” வெளியிட்டுள்ளது.
உலக செய்தி
- எகிப்தில் நடைபெறும் ஐ.நா. 27வது பருவநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட “சர்வதேச கார்பன் பட்ஜெட்” அறிக்கையில் உலகளவிலான கரியமில வாயு வெளியேற்றம் நடப்பு ஆண்டான 2022-ல் 4060 டன் என்ற அளவைத் தொடும் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
- 2019-ல் 4090டன் அளவு கரியமில வாயு வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளது
- 2019-ல் சீனா 37%, அமெரிக்கா 14%, ஐரோப்பிய யூனியன் 8%, இந்தியா 7% ஆகிய அளவிற்கு கரியமில வாயு வெறியேற்றம் செய்துள்ளன.
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் “Winning the Inner Battle” என்ற நூலினை எழுதியுள்ளார்.
- நீரஜ் சோப்ராவை சுவிட்சர்லாந்து சுற்றுலாத்துறை “நட்புறவு தூதராக” நியமனம் செய்துள்ளது.
விளையாட்டு செய்தி
- நவம்பர் 13-ல் 2022-ம் ஆண்டுக்கான ஏ.பி.டி இறுதி சுற்று உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன் போட்டி இத்தாலியில் (துரின் நகரம்) தொடங்குகிறது.
- ஜோர்டானில் நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் லவ்வினா போர்கோஹைன் 75 கிலோ பிரிவில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
- இந்தியாவின் அங்குஷிதா போரா 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
- கோவிந்த் குமார் சஹானி (48கிலோ), சுமித் (75 கிலோ) நரேந்தர் (92+கிலோ) ஆகிய பிரிவுகளில் வெண்கலம் வென்றனர்.
முக்கிய தினம்
- உலக நிமோனியா தினம்
- கருப்பொருள் : “Championing the fight to stop pneumonia.”
Nov 10 – Current Affairs | Nov 11 – Current Affairs