Daily Current Affairs
Here we have updated 12-13th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழ்நாட்டில் 105 கோடியில் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
- இல்லம் தேடி கல்வி திட்டத்தினை மேலும் தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
- இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்ட நாள் – 27 Oct 2021
- மாணவர்களிடம் கற்றல் இடைவெளியை குறைக்க எற்படுத்தப்பட்ட திட்டம்
- சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் “சிங்கார சென்னை 2.0” என்ற திட்டத்தில் 42 பணிகளை மேற்கொள்ள ரூ 98.59 கோடி நிதி ஒதுக்கீடு.
தேசிய செய்தி
- அதானி குழுமத்தின் மீதான மோசடி புகார் விவகாரத்தை செபி கண்காணித்துக் கொள்ளும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
- செபி – இந்தியப் பங்கு பரிவர்த்தனை வாரியம்.
- இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் இருப்பு ஜம்மு & காஷ்மீரில் க்ண்டுபிடிக்கபட்டுள்ளது.
- நாட்டின் சில்லறைப் பணவீக்கம் 2023-24ம் நிதியாண்டில் சுமார் 5.3 சதவீதமாக இருக்கும் என ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.
- RBI ஆளுநர் – சக்திகாந்த்
- RBI – Reserve Bank of India
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு 1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையிடம் – மும்பை
- உலகின் முதல் வாழும் பாரம்பரிய பல்கலைக்கழகமாக கொல்கத்தாவின் விஷ்வ பாரதி பல்கலைக்கழகத்தை யுனெஸ்கோ அறிவிக்க உள்ளது.
- இப்பல்கலைகழகத்தை நேபால் பரிசு பெற்ற முதல் இந்தியரான ரவீந்திரநாத் தாகூர் உருவாக்கினார்.
- யுனஸ்கோ – UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization
- தலைமையிடம் – பாரிஸ், பிரான்ஸ்
- அமைக்கப்பட்ட ஆண்டு – 16.11.1945
- பேரிடர்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் தயார் நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ஐயூசிஎன் (IUCN) தெரிவித்துள்ளது.
- ஐயூசிஎன் – சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பு.
- பிப்ரவரி 18ல் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மேலும் 12 சிவிங்கி புலிகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு வருகை தர உள்ளன.
- 1947-ல் சதீஸ்கர் மாநிலத்தில் கொரியா மாவட்டத்தில் ஒரு சிவிங்கி புலி இறந்தது. இதனால் 1952-ல் இந்தியாவில் சிவிங்புலி இல்லை என அறிவிக்கப்பட்டது.
- 2022 செப்டம்பர் 17ல் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நமீீபியாவில் இருந்து 8 சிவிங்கி புலிகள் விடுவிக்கப்பட்டன.
- ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வானார். மேலும் 12 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டள்ளனர்
மாநிலங்கள் | ஆளுநர்கள் |
நாகலாந்து | இல.கணேசன் |
ஆந்திரம் | எஸ்.அப்துல் நஸீர் |
ஹிமாச்சல் | சிவபிரதாப் சுக்லா |
அஸ்ஸாம் | குலாப் சந்த் கட்டாரியா |
சிக்கிம் | லக்ஷ்மன் பிரசாந் ஆச்சார்யா |
சத்திஸ்கர் | விஸ்வபூஷன் ஹரிசந்தன் |
மணிப்பூர் | அனுசுயா உய்கே |
அருணாச்சல பிரதேசம் | கைவல்ய திரிவிக்ரம் பர்நாயக் |
பீகார் | ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் |
மேகாலயம் | பாகு செளஹான் |
மகாராஷ்டிரம் | ரமேஷ் பயஸ் |
லடாக் | பி.டி.மிஸ்ரா |
- பிப்ரவரி 11ல் இந்தியாவின் நிதி உதவியில் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையம் இலங்கை மக்களின் பயன்பாட்டுக்காக அர்பணிக்கப்பட்டது.
- இலங்கை சுதந்திர தினம் – பிப்ரவரி 4
- இலங்கையின் 75வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது.
- நீதித்துறையின் செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் புரட்சியை ஏற்படுத்தும் என உச்சநீதிமன்ற நீதிபதி ஹிமாகோி தெரிவித்துள்ளார்.
- உலக மகிழ்ச்சி குறியீட்டில் இந்தியா 136வது இடம் பிடித்துள்ளது
- முதலிடம் – பின்லாந்து (5வது முறையாக)
- இரண்டாவது இடம் – டென்மார்க்
- மூன்றாவது இடம் – சுவிட்சர்லாந்து
- வீட்டு வேலைகளில் காணப்படும் பாலின பாகுபாடு குறித்த ஆய்வில் வீட்டு வேலைகளில் பெண்கள் 7.2 மணி நேரமும், ஆண்கள் 2.8 மணிநேரமும் செலவிடுவதாக அகமதாபாத் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் நம்ரதா சிக்கந்தர்கர் தெரிவித்துள்ளார்.
உலகச்செய்தி
- அமெரிக்க வான் வெளியில் பறந்து கொண்டிருந்த மேலும் ஒரு பொருளை அந்நாட்டு பாதுகாப்பு படை விமானமான எஃப்-22 போர் விமானம் சுட்டுதள்ளியது
- வங்கதேசத்தின் 22வது அதிபராக ஓய்வு பெற்ற நீதிபதி முகமது சகாபுதின் தேர்வு செய்யப்பட உள்ளார்.
விளையாட்டுச் செய்தி
- இந்தியாவில் நடைபெற்ற முதல் எஃப்ஐஏ ஃபார்முலா இ கார் பந்தயத்தமான “ஹைதரபாத் இ ப்ரீ” போட்டியில் பிரான்ஸ் கார்பந்த வீரர் ஜீன் எரிக்வெர்க்னே வெற்றி பெற்றார்.
முக்கிய தினம்
- தேசிய உற்பத்தியாளர் தினம் – (பிப்ரவரி – 12)
- கருப்பொருள் : “Productivity, Green Growth and Sustainability Celebrating India’s G-20 Presidency”
- உலக வானொலி தினம் – (பிப்ரவரி – 13)