Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th and 13th January

Daily Current Affairs

Here we have updated 12th and 13th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மின் மதி 2.0

Vetri Study Center Current Affairs - MinMathi

  • மகளிர்  சுயஉதவிக்குழுக்கள் நிதி மேலாண்மை சிறப்பாக செயல்பட தமிழகத்தில் மின் மதி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது.

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு

  • பொதுமக்கள் போதைப்பொருள்கள் நடமாட்டம் பற்றி புகார் அளிக்க போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற செயலியும் அதற்கான இலச்சினையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சில்வர் நோட்டீஸ்

  • உள்நாட்டில் சட்டவிரோதமாக பணம் சம்பாத்திக்கும் பணத்தை வெளிநாட்டில் பதுக்குவர்களுக்கு சில்வர் நோட்டீஸ் வழங்கப்படுகிறது.

சிறப்பு நீதிமன்றங்கள்

  • பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் 7 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.
  • திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அமைக்கப்பட உள்ளது.

புவி வெப்பமயமாதல் 

Vetri Study Center Current Affairs - GLOBAL WARMING

  • புவி வெப்பமயமாதல் வரம்பை மீறிய முதல் ஆண்டாக 2024 கருதப்படுகிறது.
  • 2024-ல் 1.55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கும்பவாணி எப்எம்

  • உத்திரப்பிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் நடைபெறும் மகாகும்பமேளாவினை ஒலி பரப்ப கும்பவாணி எப்எம் (103.5) தொடங்கப்பட்டுள்ளது.
  • கும்பமேளா நடைபெறுவதற்காக மகாகும்ப் என்ற மாவட்டமும் உருவாக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை, மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • இது 1936ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957ஆம் ஆண்டு முதல் “ஆகாச வாணி” எனவும் பெயர் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.

நேரடி வரி பகிர்வு

  • மத்திய அரசின் நேரடி வரி பகிர்வு அதிகமுள்ள மாநிலமாக பீகார் உள்ளது.

HIMKAVACH ஆடைகள்

  • DRDO அமைப்பானது இராணுவத்தினனருக்கான HIMKAVACH ஆடைகளை தயாரித்துள்ளது.
  • DRDO (Defence Research and Development Organisation) – 1958

பிரான்ஸ்

  • செயற்கை நுண்ணறிவு நடவடிக்கை உச்சி மாநாடு பிரான்ஸில் நடைபெற உள்ளது.

நிக்கோலஸ் மதுரோ

  • வெனிசுலாவின் அதிபராக நிக்கோலஸ் மதுரோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

அஞ்சு பாபி ஜார்ஜ்

Vetri Study Center Current Affairs - Anju Bobby George

  • AFI தடகள ஆணையத்தின் தலைவராக அஞ்சு பாபி ஜார்ஜ் (Anju Bobby George) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • AFI (Athletics Federation of India) -1946

இந்தி மொழி சான்றிதழ்

  • இலங்கை நாடானது இந்தி மொழி சான்றிதழ் படிப்பை தொடங்கி உள்ளது.

முக்கிய தினம்

தேசிய இளைஞர் தினம் (National Youth Day) – ஜனவரி 12

 

Related Links

Leave a Comment