Daily Current Affairs
Here we have updated 12th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கூடுதல் அட்வகேட் ஜெனரல்
- மேகாலயா மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாக வழக்கறிஞர் இ.கே.குமரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- கரூரைச் சேர்ந்த இவர் கேரள மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் பணியாற்றி வருகிறார்.
கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
- ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரில் காக் ஆற்றின் அருகே கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- பல லட்சம் ஆண்டுகளுக்கு முந்தியவை என தொல்லியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
மத்திய பிரதேசம் – புதிய முதல்வர்
- மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- மத்திய பிரதேசம் சட்ட மன்ற தொகுதிகள் – 230
சத்திஸ்கர் – புதிய முதல்வர்
- சத்திஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சத்திஸ்கர் சட்ட மன்ற தொகுதிகள் – 90
போக்ஸோ வழக்குகள்
- கடந்த ஜனவரி 31-வரை விரைவு நீதி மன்றங்களில் 2.43 லட்சம் போக்ஸோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிக்கையொன்று வெளியாகியுள்ளது.
- 2022-ல் போக்ஸோ வழக்குகளில் 3% மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
- போக்ஸோ வழக்கு நிலுவையில் அருணாச்சல பிரதேசம், தில்லி, பீகார் போன்ற மாநிலங்கள் முதன்மையாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- போக்ஸோ வழக்குகளை விசாரிக்கும் விரைவு நீதிமன்றமானது 2019ல் உருவாக்கப்பட்டுள்ளது.
- தற்போது 2026 வரை விரைவு நீதிமன்றங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- போக்ஸோ சட்டம் 2012-ல் உருவாக்கப்பட்டது.
விதி 370
- ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பு விதி 370 ரத்து செல்லும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து விரைவில் வழங்க வேண்டுமெனவும், லடாக் யூனியன் பிரதேசமாக மாற்றியது செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- பிரிவு 371-ன் படி மகாராஷ்டிரா மற்றும் குஜாராத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371A-ன் படி நாகலாந்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371B-ன் படி அஸ்ஸாமிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371C-ன் படி மணிப்பூருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371D-ன் படி ஆந்திரப்பிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371E-ன் படி ஆந்திரப்பிரதேசத்தின் மத்திய பல்கலைக்கழகம் ஏற்படுத்தல்
- பிரிவு 371F-ன் படி சிக்கிமிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371G-ன் படி மிசாேரோமிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371H-ன் படி அருணாச்சலபிரதேசத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371I-ன் படி கோவாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
- பிரிவு 371J-ன் படி கர்நாடாகாவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
லோக் அதாலத்
- 4-வது லோக் அதாலத்தில் 1.17 கோடி வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய சட்ட பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
- டிசம்பர் 4-வது லோக் அதாலத் 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுள்ளது.
- லோக் அதாலத் – 1987
- இது ஒரு மக்கள் நீதிமன்றம் ஆகும் (லோக் – மக்கள், அதாலத் – நீநிதிமன்றம்)
அதி நவீன விளையாட்டு அறிவியல் மையம்
- இந்தியாவின் மிகப்பெரிய அதி நவீன விளையாட்டு அறிவியல் மையமானது ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் திறக்கபட்டுள்ளது.
ஓய்வு அறிவிப்பு
- அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்து பாகிஸ்தான் வீரர் ஆசாத் ஷஃபிக் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தேசிய தேர்வாளராக பணிபுரிய உள்ளார்.
13வது ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி – சிலி
- நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது.
- நெதர்லாந்து அணி 5வது முறையாக (1997, 2009, 2013, 2022, 2023) சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
- 2வது இடத்தினை ஆர்ஜென்டினா அணி 4வது முறையாக பிடித்துள்ளது.
- 3வது இடத்தினை பெல்ஜியம் அணி பிடித்துள்ளது.
சர்வதேச யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினம் (International Universal Health Coverage Day) – டிசம் 12
- கருப்பொருள்: “The UHC Day theme is Health for All: Time for Action”
சர்வதேச நடுநிலை நாள் (International Day of Neutrality) – டிசம் 12
December 10 Current Affairs | December 11 Current Affairs