Daily Current Affairs
Here we have updated 12th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
அயலகத் தமிழர் தினம்
- அயலகத் தமிழர் தினத்தினை (ஜனவரி 12) முன்னிட்டு அயலகத் தமிழர் தின விழா சென்னையில் நடைபெறுகிறது.
- அயலகத் தமிழர் நல வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது.
- இவ்விழாவானது தமிழ் வெல்லும் என்ற கருப்பொருளுடன் நடைபெறுகிறது.
தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்
- தமிழக அரசு மற்றும் உலக வங்கி இணைந்து கடலோர வளங்களை மீட்டெடுத்து பாதுகாக்க தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
- இத்திட்டமானது 2028-2029 நிதியாண்டு வரை செயல்பாட்டில் நடைமுறைபடுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்திற்காக உலக வங்கியிடம் இருந்து ரூ.1675 கோடி நிதியை தமிழக அரசு கடனாக பெற்றுள்ளது.
இதன் கீழ் தொடங்கப்படும் திட்டங்கள்
- செங்கல்பட்டு, கடம்பூர் – பல்லுயிர் பாதுகாப்பு பூங்கா (ரூ.345 கோடி)
- சென்னை மற்றும் நாகப்பட்டினம் – கடல் ஆமை பாதுகாப்பு மையம் (ரூ.60 கோடி)
- தஞ்சாவூர் – பன்னாட்டு கடல் பாதுகாப்பு மையம் (ரூ.90 கோடி)
டீல்ஸ் (TEALS) திட்டம்
- தமிழக அரசு பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு உட்பட பல்வேறு பயிற்சிகளை வழங்கும் திட்டமான டீல்ஸ் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
- இத்திட்டத்தை தமிழக அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
- TEALS – Technology Education and Learning Support
தேசிய இளைஞர் திருவிழா
- மகாராஷ்டிராவின் நாசிக்கில் 27வது தேசிய இளைஞர் விழா நடைபெற உள்ளது.
- இவ்விழாவிற்கு இலச்சினையாக மகாராஷ்டிராவின் மாநில விலங்கான இந்தியன் ராட்சத அணில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஓரே நாடு ஒரே தேர்தல்
- மக்களவை மற்றும் மாநில பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ஓரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்) உடன்பாடில்லை என தெரிவித்துள்ளார்.
- ஓரே நாடு ஒரே தேர்தல் – ராம்நாத்கோவிந்த தலையில் குழு அமைப்பு
- கடந்த 1952-ல் மக்களவை மற்றும் மாநில பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது.
விங்ஸ் இந்தியா 2024
- ஜனவரி 18-21 வரை தெலுங்கானாவின் ஹைதாரபாத்தில் விங்ஸ் இந்தியா 2024 நடைபெற உள்ளது.
சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் 2024
- 2024ஆம் ஆண்டிற்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் இந்தியா 80வது இடத்தை பிடித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் கடைசி இடத்தினை பிடித்துள்ளது.
- இலண்டனைச் சேர்ந்த ஹென்லி நிறுவனமானது இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.
- முதல் இடம் – பிரான்ஸ், ஜெர்மெனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான், சிங்கப்பூர்
- இரண்டாவது இடம் – பின்லாந்து, சுவிடன், தென் கொரியா
- மூன்றாவது இடம் – ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து, நெதர்லாந்து.
செந்தில் பாண்டியன்
- உலக வர்த்தக அமைப்பின் (WTO) இந்திய தூதராக செந்தில் பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- WTO – World Trade Organization – 01.01.1995
தூய்மையான நகரங்கள் பட்டியல் 2023
- ஒன்றிய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் சார்பில் தூய்மையான நகரங்கள் பட்டியல் 2023 வெளியிடப்பட்டுள்ளது.
1 லட்சத்திற்கு மேலான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்
- முதலிடம் – இந்தூர் (7வது முறை), சூரத்
- மூன்றாமிடம் – நவி மும்பை
- நான்காவது இடம் – விசாகப்பட்டினம்
1 லட்சத்திற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள்
- முதலிடம் – சாஸ்வத் (மகாராஷ்டிரா)
- இரண்டாமிடம் – பதான் (சத்திஸ்கர்)
- மூன்றாமிடம் – லோனா வாலா (மகாராஷ்டிரா)
கங்கை ஆற்றங்கரையோர தூய்மை நகரங்கள்
- முதலிடம் – வாரணாசி
- இரண்டாமிடம் – பிராயாக்ராஜ்
மாநிலங்கள் அடிப்படையில்
- முதலிடம் – மகாராஷ்டிரா
- இரண்டாமிடம் – மத்தியபிரதேசம்
- மூன்றாமிடம் – சத்திஸ்கர்
ஜாக்ரெப் ஓபன் மல்யுத்தப் போட்டி – குரோஷியா
- 57 கிலோ பிரிவில் அமன் ஷெராவத் தங்கம் வென்றுள்ளார்.
ஆசிய ஒலிம்பிக் தகுதி சுற்றுப்போட்டி – இந்தோனேஷியா
- 25மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் மகளிர் தனிநபர் பிரிவில் ரிதம் சங்வான் வெண்கலம் வென்று பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- 25மீ ஸ்போர்ட்ஸ் பிஸ்டல் மகளிர் அணிகள் பிரிவில் ரிதம் சங்வான், ஈஷா சிங், சிம்ரன் ப்ரித் ஆகியோர் வெள்ளி வென்றுள்ளனர்.
தேசிய இளைஞர் தினம் (National Youth Day) – Jan 12
- விவேகானந்த பிறந்த தினம் (ஜனவரி 12) நினைவாக தேசிய இளைஞர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
January 10 Current Affairs | January 11 Current Affairs