Daily Current Affairs
Here we have updated 12th October 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு
- 2024 பிப்ரவரி 8-10 வரை சென்னை நந்தம்பாக்த்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ் இணைய கல்விக் கழகம் மூலம் பன்னாட்டு கணினித் தமிழ் மாநாடு (கணினித் தமிழ்-24) நடைபெற உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்
மசோதா நிறைவேற்றம்
- தமிழகத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வரிகள் உயர்த்தும் சட்ட மசோதாவானது சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
சாகர் கவாச் (Sagar Kavach)
- தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் சாகர் கவாச் என்ற பெயரில் இரண்டு நாள் பாதுகாப்பு ஒத்திகையானது நடைபெற்றுள்ளது.
- இவ்வொத்திகையானது 2008-ல் நடைபெற்ற மும்பை தாக்குதலை அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு முறை காவல் துறையினால் நடத்தப்படுகிறது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
- இளைஞர் மேம்பாட்டுக்காக எனது இளைய பாரதம் என்ற தன்னாட்சி அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- இவ்வமைப்பானது அக்டோபர் 31-ல் (சர்தார் வல்லபாய் படேல் பிறந்த தினம்) தொடங்கப்படும்.
- 19 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயனிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
ஆபரேஷன் அஜய் (Operation Ajay)
- இஸ்ரேல்-ஹமாஸ் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் தாயகம் அழைத்து வர ஆபரேஷன் அஜய் தொடங்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
|
உலக பார்வை தினம் (World Sight Day) – Oct 12
- கருப்பொருள்: “Love Your Eyes at Work”
உலக மூட்டு வலி தினம் (World Arthritis Day) – Oct 12
- கருப்பொருள்: “Living With an RMD at all stages of life”.