Daily Current Affairs
Here we have updated 12th September 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்
- செப்டம்பர் 15-ல் காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
- இத்திட்டத்திற்கு பயனாளியாக 1,06,50,000 பேர் தேர்வாகியுள்ளனர்.
- ஆண்டிற்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தியாகி இமானுவேல் சேகரனார்
- பரமக்குடியில் ரூ 3 கோடியில் இமானுவேல் சேகரனார் உருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்தியா முதலிடம்
- கடந்த காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) புதிதாக 70லட்சம் கைப்பேசி வாடிக்கையாளர்கள் இணைக்கபட்டு கைப்பேசி வாடிக்கையாளர்கள் எண்ணிகையில் சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடத்தை சீனாவும், 3வது இடத்தை அமெரிக்காவும் பிடித்துள்ளன.
ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
- முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவாக்கம் தொடர்பாக இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
- இந்த ஒப்பந்தங்களானது இந்திய பிரதமர் மோடி மற்றும் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளன.
வியூக கூட்டாண்மை கவுன்சில் கூட்டம்
- புதுதில்லியில் இந்தியா சவூதி அரேபியா இடையேயான முதல் வியூக கூட்டாண்மை கவுன்சில் கூட்டம் நடைபெற்றுள்ளது
எண்ம ரூபாய் பயன்பாடு
- வங்கிகளுக்கு இடையேயான பரிவர்த்தனையில் எண்ம ரூபாயின் (டிஜிட்டல் கரன்சி) பயன்பாடு சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- எண்ம ரூபாய் பயன்படுத்த 9 வங்கிகளுக்கு மட்டுமே ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது
- கிரிப்டோ கரன்சிகளுக்கு முற்றுப்பள்ளி வைக்கும் நோக்கில் எண்ம ரூபாய் பயன்பாடு 2022-23 நிதியாண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
பசுமை பருவநிலை நிதி
- பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவும் வகையில் பசுமை பருவ நிலை நிதிக்கு பிரிட்டன் அரசு 2 பில்லியன் டாலர்கள் (ரூ.16,600 கோடி) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- 2010-ல் 194 நாடுகளால் பசுமை பருவ நிலை நிதி உருவாக்கப்பட்டது.
- 2009-ல் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் ஐ.நா.பருவநிலை மாறுபாடு மாநாடானது நடைபெற்றுள்ளது.
- பசுமை பருவ நிலை நிதியானது கரியமில வாயு உமிழ்வை குறைக்கவும், பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளவும் வளரும் நாடுகளுக்கு, வளர்ந்த நாடுகள் நிதியளிக்க ஏற்படுத்தப்பட்டது.
டெல்லி பிரகடனம்
G20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றப்பட்டது.
- தனது படைகளை பயன்படுத்தி மற்ற நாட்டின் எல்லை பிடிக்கக் கூடாது.
- நாடுகளுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்.
- ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற அடிப்படையில் அமைதியான, நட்பு ரீதியான மற்றும் அண்டை நாடுகள்
- இது போருக்கான காலம் இல்லை
உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி
G20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் இந்தியா, பிரேசில், அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆப்ரிக்க யூனியன்
- G20 அமைப்பின் கூட்டமைப்பில் ஆப்பிரக்க யூனியன் புதிய உறுப்பு நாடாக இணைக்கப்பட்டுள்ளது.
- ஆப்ரிக்க யூனியன் தலைவராக அஜாலி அசோம்னி (கோமரஸ் அதிபர்) செயல்படுகிறார்.
- ஆப்ரிக்க யூனியனானது எத்தியோப்பியாவின் அபாபாவை தலைமையிடமாக கொண்டு 2002-ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.
சமுத்ரயான் திட்டம்
- வங்கக் கடலின் ஆழ்பகுதியில் கோபால்ட், நிலக்கரி, மாங்கனீசு மற்றும் தாதுப்பொருள்களை ஆராய தேசிய கடல் தொழில் நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
- இத்திட்டதின் கீழ் மத்ஸ்யா 6000 என்ற நீர் மூழ்கி கப்பல் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது.
கிழக்கு பொருளாதார மன்ற மாநாடு
- ரஷ்யாவின் விளாடி வோஸ்ட்டாக்கில் 18வது கிழக்கு பொருளாதார மன்ற மாநாடு நடைபெற்றுள்ளது.
- இந்தியா தரப்பில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனாவால் கலந்து கொண்டார்.
டென்னிஸ் ஆஸ்டின் (Dennis Austin)
- பவர் பாயிண்ட் (Power Point) மென்பொருளை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் காலமானார்.
இந்தோனிசிய மாஸ்டர் பாட்மின்டன் சூப்பர் 100 போட்டி
- கிரண் ஜார்ஜ் (இந்தியா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (US Open Grand Slam) டென்னிஸ் போட்டி
- ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவோ ஜோகோவிச் (செர்பியா) டேனில் மெத்வதேவை (ரஷ்யா) வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- நோவோ ஜோ கோவிச் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.
- அதிக சாம்பியன் பட்டம் வென்ற மார்க்ரெட் கோர்ட் சாதனையை சமன் செய்துள்ளார்.