Daily Current Affairs
Here we have updated 13th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கடல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமான சேது சமுத்திர திட்டம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இத்திட்டம் 300மீ அகலமும், 12மீ ஆழமும் 167 கி.மீ நீளமும் கொண்டது.
- 1860 – ரூ.50லட்சம் செலவில் கமாண்டர் டெய்லர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
- 1955 – டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் குழு ஆய்வு
- 1963 – மத்திய அமைச்சரவை கூட்டம் ஆய்வு
- 1964 – நாகேந்திரசிங் தலமையிலான உயர்நிலைக் குழு ஆய்வு
- 2004-ல் ரூ.2427 கோடி செலவில் திட்டத்திற்கு அனுமதி
- 2005 – ஜூலை 2-ல் திட்டம் தொடங்கப்பட்டது.
- “அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள “நேரம் தவறாத 20 விமான நிலையங்கள்” பட்டியிலில் 13வது இடத்தை தமிழகத்தின் கோவை விமான நிலையம் பிடித்துள்ளது.
- ஜனவரி 13-15வரை கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் தமிழக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில் “சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா” நடைபெறுகிறது.
தேசிய செய்தி
- பாதுகாப்புப் படைக்குத் தேவையான ஏவுகணைகளை ரூ.4,276 கோடி மதிப்பீல் உள்நாட்டில் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இக்கொள்கைளயின் படி ரூ.1920 காேடி செலவில் DRDO நிறுவனம் தயாரித்துள்ள குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகளை (VSHORADS) வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீமாக குறையும் என உலக வங்கி அறிவித்துள்ளது.
- உலக வங்கி உருவாக்கப்பட்டது – 1945
- ஜனவரி 18-20வரை கேரளாவின் திருவனந்தபுரத்தில் இந்தியாவின் G20 தலைமைத்துவத்தின் கீழ் முதல் சுகாதார பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
- ஆகஸ்ட 1 முதல் பாஸ்மதி அரிசியில் நறுமணத்தை கூட்டுவதற்கும் நிறத்தை மேம்படுத்துவதற்கும் சேர்க்கப்படும் நிறமூட்டிகளுக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
- “அபீஷியல் ஏர்லைன் கைட்ஸ்” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள நேரம் தவறாத விமான நிறுவனப்பட்டியலில் இந்தியாவின் “இண்டிகோ” 15வது இடம் பெற்றுள்ளது.
- இந்தியாவின் மரியான் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள AMBRONOL Syrup, DOK-1 Max Syrup ஆகிய இரு இருமல் மருந்து தரமற்றவை என “உலக சுகாதார நிறுவனம் (WHO)” தடை செய்துள்ளது.
- உலக சுகாதார நிறுவனம் – 1948