Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13 – 14th November 2022

Daily Current Affairs

Here we have updated 13-14th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழகத்தின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வெங்கி ராமகிருஷ்ணன் பிரிட்டன் உயரிய விருதாகிய “ஆர்டர் ஆஃப் மெரிட்” விருதுக்கு தேர்வானார்.
    • 2009ல் வேதியலுக்கான நோபல் பரிசினை உடலில் உள்ள செல்களில் இருக்கும் ரைசோம்கள் குறித்த ஆராய்சிக்காக வென்றார்.
  • 6 முதல் 9ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் “கலைத் திருவிழா போட்டி” தமிழகத்தில் நடைபெறுகிது.
    • இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருது வழங்கப்பட்ட உள்ளது.

தேசிய செய்தி

  • உரம் விற்பனையாது “பாரத் யூரியா” என்ற பெயரில் செயல்படும் என இந்திய பிரதமர் அறிவிப்பு.
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து தனி மனித வருவாய் 33.4% உயர்ந்துள்ளது.
  • பசுமை ஆற்றல் திறந்த அணுகல் தொடர்பான பயன்பாடுகளை செயலாக்க https://greenopenaccess.in/ என்ற இணையதள முகவரியினை ஸ்ரீ ஆர்.கே.சிங் தொடங்கி வைத்தார்.
  • உத்திர பிரதேசம், வாரணாசியில் நாட்டின் முதல் ஹைட்ரஜன் செல் கேடமரன் கப்பலை உருவாக்க கொச்சி கப்பல் கட்டும் நிறுவனம் இந்திய உள்நாட்டு நீர் வழிகள் ஆணையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    • மேலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமானது உத்திரபிரதேசத்திற்கு ஆறு மின்சார கேடமரன் கப்பல்கள் மற்றும் கவுகாத்திக்கு இரண்டு கப்பல்கள் கட்டவும் நிறுவனம் கையொப்பம் இட்டுள்ளது.
  • நவம்பர் 12-ல் இந்திய விமானப்படை மற்றும் பிரெஞ்சு வான் மற்றும் விண்வெளிப்படையின் இருதரப்பு விமானப் பயிற்சியின் ஏழவது பதிப்பு, “கருடா-VII பயிற்சி” நிறைவடைந்துள்ளது.
  • உலகின் உயரமான வாக்குசாவடி மையம் இமாச்சலப்பிரதேசம் “தஷீகங்க்” என்ற மலைப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு்ள்ளது.
    • இவ்வாக்குச் சாவடியில் 52 வாக்காளர்கள் மட்டுமே உள்ளன.
  • CSIR-NIIST-யின் இயக்குநராக சி.அனந்தராமகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்திய வம்சாவளியை சேர்ந்த கே.பி.ஜார்ஜ் அமெரிக்க நீதிபதியாக மீண்டும் தேர்வானார்.

உலக செய்தி

  • சர்வதேச தரக் குறியீட்டு நிறுவனமான “மூடிஸ்” 2022-ம் ஆண்டிற்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7%மாக குறையும் என அறிவித்துள்ளது.
  • தியான் ஷாவ்-5 என்ற விண்கலத்தை சீனா சொந்த விண்வெளி நிலையமான தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு லாங் மார்ச்-7 ஒய்சி என்ற ராக்கெட் மூலம் செலுத்தியுள்ளது.
    • சீனசமீபத்தில் வென்டியன், மெங்டியன் என்ற ஆய்வுகலங்களை தியாங்காங் விண்வெளி நிலையத்திற்கு செலுத்தியுள்ளது.
    • இஸ்ரோவால் பிரிட்டனின் 36 செயற்கைக்கோள்களை “எல்விஎம் 3” ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தபட்டது.
  • கம்போடியா நாட்டின் தலைகரான நாம் பென்னில் ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது.
  • காந்தி அமைதி யாத்திரை விருது ஸ்ரீஸ்ரீரவி சங்கர் என்பவருக்கு வழங்கப்ட்டுள்ளது.
  • பிசிசிஐ-யின செயலரான ஜெய் ஷா ஐசிசியின்  நிதி மற்றும் வர்த்தக விவகாரங்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • ஐசிசியின் தலைவராக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்லே 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டு செய்தி

  • நவம்பர் 11-ல் நடைபெற்ற ஜோர்டானின் அம்மானில் நடந்த ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்களானா லோவ்லினா போர்கோஹைன், பர்வீன் ஹூடா, சவீதி, அல்ஃபியா பதான் ஆகியோர்  தங்க பதக்கம் வென்றனர்
  • கபடி உலகக் கோப்பை போட்டி முதன் முறையாக ஆசியாவிற்கு வெளியே வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் நடைபெற உள்ளது.
  • ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 20 ஒவர் உலககோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

முக்கிய தினம்

  • உலக கருணை தினம் (நவம்பர்-13)
    • கருப்பொருள் : “Be kind whenever possible”
  • உலக சர்க்கரை நோய் தினம் (நவம்பர்-14)
    • கருப்பொருள் : “Access to diabetes education”

Nov 11 – Current Affairs | Nov 12 – Current Affairs

Leave a Comment