Daily Current Affairs
Here we have updated 13th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெண்களுக்கு இட ஒதுக்கீடு
- ஜம்மு-காஷ்மீர், புதுச்சேரி சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33% அளிக்கப்பட உள்ளது.
- ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டமன்ற தொகுதிகள் – 114 தொகுதிகள் (காஷ்மீரின் 24 தொகுதிகள் உட்பட)
- புதுச்சேரி சட்டமன்ற தொகுதிகள் – 30
நிகில் டே
- சர்வதேச ஊழல் எதிர்ப்பு சாம்பியன் 2023 விருதானது இந்திய சமூக செயற்பாட்டாளர் நிகில் டேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
- அமெரிக்க அரசு வழங்கும் இவ்விருதினை பெறும் முதல் இந்தியர் ஆவார்.
ராஜஸ்தான் – முதல்வர் தேர்வு
- ராஜஸ்தானின் புதிய முதல்வராக பஜன்லால் சர்மா தேர்வாகியுள்ளார்.
- ராஜஸ்தான் சட்டமன்ற தொகுதிகள் – 200
- ராஜஸ்தானின் துணை முதலமைச்சர்களாக தியாகுமார், பிரேம்சந்த் ஆகியோர் செய்யப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
- மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- சத்திஸ்கர் மாநிலத்தின் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் சாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோ திட்டம்
- சந்திராயன் 3 வெற்றியைத் தொடர்ந்து 2040 ஆண்டில் சந்திரனுக்கு இந்திய வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
- சோதனைக்காக விமானப்படையைச் சேர்ந்த 4 விமானிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஏவுகணை சோதனை நிறுத்தம்
- அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை ஒடிசா கடற்கரையில் ஏவுகணை சோதனை நிறுத்த உள்ளதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.
- ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவு மற்றும் கஞ்சம் மாவட்டத்தின் ருஷிகுல்யா போன்ற இடங்களில் ஆலிவ்ரிட்ரே என்னும் அரிய வகை கடல் ஆமைகள் முட்டையிடும் வழக்கத்தை கொண்டுள்ளது. எனவே ஏவுகணை சோதனை நிறுத்தப்படுகிறது.
ஆர்டர் ஆஃப் மெரிட் விருது
- இந்தியாவின் முன்னாள் நடிகரான கபீர் பேடிக்கு இத்தாலியின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் மெரிட் வழங்கப்பட்டுள்ளது.
வின்பேக் (VINBAX)
- இந்தியாவிற்கும், வியட்நாமிற்கும் இடையே கூட்டு இராணுவப் பயிற்சியானது நடத்தப்பட்டுள்ளது.
- இப்பயிற்சியானது வின்பேக் (VINBAX) என்ற பெயரில் நடத்தப்பட்டுள்ளது.
அபின் உற்பத்தியாளர்
- உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தியாளராக மியான்மர் திகழ்கிறது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவில் மத்தியபிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
33வது வியாஸ் சம்மான் விருது
- புஷ்ப பாரதிக்கு 33வது வியாஸ் சம்மான் விருதினை பெற்றுள்ளார்.
வயதான பெண் மரணம்
- உலகின் 2வது அதிக வயதான பெண்ணான ஃபுசா தட்சுமி காலமானார்.
- அவர் தன் 116 வயதில் காலமாகியுள்ளார்.
காஸா போர் நிறுத்தம்
- காஸா போர் நிறுத்தம் பற்றிய தீர்மானத்தை ஐ.நா. சபை கொண்டு வந்துள்ளது.
- இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 153 நாடுகளும், எதிராக 10 நாடுகளும், 23 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
விராட்கோலி
- கூகுளில் அதிகம் தேடப்படும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விராட்கோலி முதலிடம் பிடித்துள்ளார்.
- சச்சின் டெண்டுல்கர், தோனி, ரோகித் ஷர்மா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்துள்ளார்.
விளம்பர தூதர்
- திரிபுரா மாநில சுற்றுலாத்துறை விளம்பர தூதராக சவுரவ் கங்குலி (இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் – சோதனை முயற்சி
- ஐசிசி (ICC) பந்துவீச்சில் புதிய விதிமுறை அமல்படுத்துவதற்காக சோதனையை மேற்கொண்டுள்ளது.
- ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவரின் முதல் பந்தை வீசுவதற்கு 60 நொடிகளுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது அந்த விதிமுறையாகும்.
- இவ்விதியானது இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான டி20 போட்டியில் இவ்விதி பரிசோதனை செய்யப்பட உள்ளது.
சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி
- சென்னை லீலா பேலஸில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி-2023 நடைபெற உள்ளது.
- டிசம்பர் 15-21 வரை தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்துகிறது.
December 11 Current Affairs | December 12 Current Affairs