Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th February 2024

Daily Current Affairs

Here we have updated 13th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் 2024

பிப்ரவரி 12-ல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டமானது தொடங்கியது.

ஆளுநர் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு அம்சங்கள்

  • குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தபடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொருளாதாரம்

  • தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியானது 8.9%மாக உள்ளது. (தேசிய பொருளாதார வளர்ச்சி – 7.24%)
  • தேசிய பொருளாதார வளர்ச்சியான 7.24% விட தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது.
  • தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.97%-மாக உள்ளது. (தேசிய பணவீக்கம் – 6.65%)

புதுமைப்பெண் திட்டம் (05.09.2022)

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமைப் பெண் திட்டத்தினால் கல்லூரியில் மாணவிகளின் சேர்க்கை 34% அதிகரிப்பு.
  • மாதந்தோறும் 2.7 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை உணவுத் திட்டம் (15.09.2022)

  • முதல்வரின் காலை உணவுத் திடடம் 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • இத்திட்டத்தின் கீழ் 16.85 லட்சம் மாணாக்கர்கள் பயனடைந்துள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம் (05.08.2021)

  • இத்திட்டத்தின் கீழ் 1.07 கோடி பேர் பயனடைந்துள்ளன.

சிந்து கணபதி

Vetri Study Center Current Affairs - Sindhu Ganapathy

  • தெற்கு ரயில்வே துறையின் டிக்கெட் பரிசோதகராக (TTE) திருநங்கையான சிந்து கணபதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தெற்கு ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதகர் ஆவார்.

குறும்படம் வெளியீடு

  • தமிழ்நாடு அரசின் சார்பில் விதை, நிழல் என்னும் இரு குறும்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளது.
  • குழந்தைகள் பெற்றோருடன் ஒரு குடும்பமாக வளர்வதற்கான அவசியம் பற்றியும், குழந்தை வளர்ப்பு, பராம்பரிய சேவை பற்றியும் விழிப்புணர்வும் ஏற்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர்கள் கூட்டமைப்பு

  • சர்வதேச சிறு தேயிலை உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைமையகமானது இந்தியாவின் அமைய உள்ளது.

நவாப் சலாம்

  • சர்வதேச நீதிமன்றத்தின் (International Court) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • சர்வதேச நீதிமன்றம் – ஹேக் (நெதர்லாந்து)

சீனா

Vetri Study Center Current Affairs - Fast Telescope

  • உலகின் வேகமான தொலைநோக்கியை (Fast Telescope) உருவாக்கியுள்ளது.
  • இது உலகின் பெரிய ரேடியோ தொலைநோக்கி ஆகும்.

உலக அரசாங்க மாநாடு

  • 2024-ஆம் ஆண்டிற்கான உலக அரசாங்க மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள (UAE) துபையில் வைத்து நடைபெற உள்ளது.

அலெக்சாண்டர் ஸ்டப்

Vetri Study Center Current Affairs - Alexander Stubb

  • பின்லாந்து நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

டல்லாஸ் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி

  • அமெரிக்காவின் டாமி பால் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

முபதலா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி – அபுதாபி

  • கஜகஸ்தானின் எலனா ரைபாகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

SAFF U19 பெண்கள் சாம்பியன் ஷிப்

  • SAFF-யின் U19 பெண்கள் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இணைந்து சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
  • SAFF – South Asian Football Federation

தேசிய மகளிர் தினம் (National Women’s Day) – பிப்ரவரி 13

Vetri Study Center Current Affairs - National Women's Day

  • இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவின் பிறந்த தினமானது தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக ரேடியோ தினம் (World Radio Day) – பிப்ரவரி 13

Vetri Study Center Current Affairs - World Radio Day

  • கருப்பொருள்: Radio: A century informing, entertaining and education.

February 10 Current Affairs  | February 11-12 Current Affairs

Related Links

Leave a Comment