Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th January 2024

Daily Current Affairs

Here we have updated 13th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

எனது கிராமம் திட்டம்

Vetri Study Center Current Affairs - Enathu gramam Thittam

  • வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களின் வளர்ச்சியில் அவர்களே கவனம் செலுத்த எனது கிராமம் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
  • திட்டம் தொடங்கிய நாள்: ஜனவரி  12.
  • இத்திட்டமானது அயலகத் தமிழர் மாநாட்டின் போது தொடங்கி வைக்கப்பட்டது.

அயலகத் தமிழர் விருது

Vetri Study Center Current Affairs - Ayalaga tamilar viruthu

  • சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் தமிழ் இலக்கியம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட 8 பிரிவுகளில் விருதானது வழங்கப்பட்டுள்ளது.
    1. சையது முகமது சலாவுதின் – மலேசியா
    2. டத்தோ எம்.சரவணன் – மலேசியா
    3. சுப்பிரமணியன் தின்னப்பன் – சிங்கப்பூர்
    4. ஜெயராமன் லிங்க மாணிக்கர் – சிங்கப்பூர்
    5. பாலசுவாமி நாதன் – அமெரிக்கா
    6. பக்கிரி சாமி ராஜமாணிக்கம் – அமெரிக்கா
    7. வைதேகி ஹர்பேர்ட் – அமெரிக்கா
    8. சுதாகர் பிச்சை முத்து – பிரிட்டன்
    9. முருகேசு பரமநாதன் – ஆஸ்திரேலியா
    10. ஜெஸிலா பானு – யுஏஇ
    11. ராமன் குருசாமி – தென்கொரியா
    12. சரண்யா தேவி – குவைத்

தமிழக அரசின் விருது 2024

தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் பெரியார், அம்பேத்கர், காமராஜர் விருதுகள் அறிவிக்கப்படுள்ளன

  • காமராஜர் விருது – பலராமன்
  • டாக்டர் அம்பேத்கர் விருது – சண்முகம்
  • திருவள்ளூவர் விருது – பாலமுருகனடிமை சுவாமிகள்
  • தந்தை பெரியார் விருது – சு.ப.வீரபாண்டியன்
  • பேரறிஞர் அண்ணா விருது – பத்தமடை பரமசிவம்
  • மகாகவி பாரதியார் விருது – பழநிபாரதி
  • பாவேந்தர் பாரதிதாசன் விருது  – முத்தரசு
  • திரு.வி.க. விருது – ஜெயசீல ஸ்டீபன்
  • கி.ஆ.பெ.விஸ்வநாதன் விருது – இரா.கருணாநிதி

ஏறுதழுவுதல் அரங்கம்

Vetri Study Center Current Affairs - Kalaignar Karunanidhi Centenary

  • மதுரையிலுள்ள அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ஜல்லிகட்டு போட்டிகளுக்காக ஏறுதழுவுதல் அரங்கம் ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது.
  • இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிட்டப்பட்டுள்ளது.

மாசடைந்த நகரங்கள் பட்டியல்

எரிசக்தி – தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையமானது மாசடைந்த நகரகங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

  • முதலிடம் – பைர்னிஹாட் (மேகாலயம்)
  • இரண்டாவது இடம் – பெருசராய் (பிகார்)
  • மூன்றாவது இடம் – கிரேட்டர் நொய்டா (உத்திரபிரதேசம்)

காற்று மாசுபாட்டில் டெல்லி 8வது இடத்தை பிடித்துள்ளது.

ஏவுகணை சோதனை வெற்றி

  • ஒடிசாவின் சண்டீபூர் கடலோரப் பகுதியில் அதிநவீன ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றியடைந்துள்ளது.
  • குறைந்த உயரத்தில் அதிவேகத்தில் பறந்து செல்லும் இலக்குகளை தாக்கி அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த ஏவுகணையானது 80 கி.மீ. தொலைவிலுள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் தன்மையுடையது.

ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் திட்டம்

  • அயோத்தி ராமர் கோவிலுக்கு மக்களை அழைத்து செல்ல சத்தீஸ்கர் அரசு ஸ்ரீ ராம்லாலா தர்ஷன் திட்டத்தினை தொடங்கியுள்ளது.

விமான நிலையம் திறப்பு

Vetri Study Center Current Affairs - Malkangiri Airport

  • ஒடிசாவில் புதிய விமான நிலையத்தினை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் திறந்து வைத்துள்ளார்.
  • இவ்விமான நிலையத்திற்கு மல்கங்கிரி விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆசிய தகுதி சுற்று துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்தோனேசியா

Vetri Study Center Current Affairs - Pratap Singh Tomar

  • 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் தனிநபர் பிரிவில் அகில் ஷோரன் தங்கமும், பிரதாப் சிங் தோமர் வெள்ளியும் வென்றுள்ளனர்.
  • 50 மீ ரைபிள் 3 பொசிஷன்ஸ் ஆடவர் அணிகள் பிரிவில் அகில் ஷோரன, பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசேல் ஆகியோர் தங்கம் வென்றுள்ளனர்.

தேசிய சாலை பாதுகாப்பு வாரம் – National Road Safety Week (Jan 11-17)

Vetri Study Center Current Affairs - National Road Safety Week

  • கருப்பொருள்: Be a Road Safety Here

January 11 Current Affairs | January 12 Current Affairs

Related Links

Leave a Comment