Daily Current Affairs
Here we have updated 13th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
எமரால்டு அணை
- நீலகிரி மாவட்டத்திலுள்ள எமரால்டு அணையிலிருந்து 35 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ஆராய்ச்சி மையம்
- இஸ்ரோ உதவியுடன் சென்னை ஐஐடியில் திரவ மற்றும் வெப்பநிலை சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.
மொழிபெயர்ப்பு
- மாதொருபாகன் என்னும் நூலினை தமிழ் மொழியிலிருந்து பிரெஞ்சு மொழிக்கு லெட்டிசியா இபனெஸ் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
- வாசுதேவன் என்பவர் இந்நூலினை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்துள்ளார்.
- மாதொருபாகன் என்பது பெருமாள் முருகன் எழுதிய நூலாகும்.
ஆற்றல் பாதுகாப்பு சட்டம்
- கார்பன் கிரெடிட் டிரேடிங் திட்டமானது ஆற்றல் பாதுகாப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
- ஆற்றல் பாதுகாப்பு சட்டம் – 2022
INSV தாரிணி
- கோவாவில் இருந்து புறப்பட்ட INSV தாரிணி கப்பல் ஆஸ்திரேலியாவின் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
- இக்கப்பல் வந்தடைந்துள்ள முதல் துறைமுகம் ஆகும்.
தொடர்புடைய செய்திகள்
- INSV தாரணி கடற்படைக் கப்பல் மூலம் இரு கடற்படை பெண் அதிகாரிகள் ரூபா, தரன திலனா ஆகியோர் சாகர் பரிக்ரமா 2 (Sagar Parikrama 2) திட்டத்தின் கீழ் உலகை சுற்றி வர உள்ளன.
- சாகர் பரிக்ரமா 1 திட்டமும் 2017-ல் INSV தாரணி கடற்படைக் கப்பல் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
முப்படை விண்வெளி பயிற்சி
- இந்தியாவின் முதல் முப்படை விண்வெளி பயிற்சி புதுதில்லியில் நடைபெற்றது.
- இந்தியாவின் முப்படை தளபதி: அனில்செளகான்
வாழ்நாள் சாதனையாளர் விருது
- IFFI வாழ்நாள் சாதனையாளர் விருதானது பிலிப் நோய்ஸ் என்பவருக்கு வழங்கப்பட உள்ளது.
எலீஸ் ஸ்டெஃபானிக்
- ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக எலீஸ் ஸ்டெஃபானிக் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஷிகெரு இஷிபா
- ஜப்பானின் பிரதமராக ஷிகெரு இஷிபா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
அரவிந்த் சிதம்பரம்
- சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தினை அரவிந்த் சிதம்பரம் வென்றுள்ளார்.
- சேலஞ்சர்ஸ் பிரிவில் பிரணவ் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.
முக்கிய தினம்
பொது சேவை ஒளிபரப்பு தினம் (Public service Broadcasting day) – நவம்பர் 12
உலக கருணை தினம் (World Kindness day) – நவம்பர் 13