Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th October 2023

Daily Current Affairs

Here we have updated 13th October  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நீலகிரி வரையாடு திட்டம்

Vetri Study Center Current Affairs - Nilgiri Draft Project

  • நீலகிரி வரையாட்டினை (மவுண்ட்டன் மோனார்க்) பாதுகாப்பதற்கான முன்னோடி திட்டத்தினை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
  • ரூ.25கோடி செலவில் திட்ட அலுவலகமானது நீலகிரி வரையாட்டின் எண்ணிக்கை, கணக்கெடுப்பு, நோய் கண்டறிய தொடங்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

Vetri Study Center Current Affairs - Copper Coins of Chola and Vijayanagara Empires

  • மயிலாடுதுறை மாவட்டத்தினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் இணைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பட்டியிலில் இடம் பிடித்துள்ளன.

சட்டத்திருத்த மசோதா

  • வேளாண் மண்டல சட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பினை சேர்க்க சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

சரஸ்வதி சம்மான் விருது

Vetri Study Center Current Affairs - Saraswati Samman Award - Sivasankari

  • எழுத்தாளர் சிவசங்கரிக்கு சூரியவம்சம் நினைவுகள் என்னும் நூலிற்காக சரஸ்வதி சம்மான் விருது 2022 வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது கே.கே.பிர்லா அறக்கட்டளை மூலம் 1991 முதல் வழங்கப்பட்டு வருகிறது.

உடலுறுப்பு தானம்

TNPSC Current Affairs - Organ donation

  • நிகழாண்டில் தமிழகத்தில் 128பேரிடமிருந்து 733 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளதென மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
  • 2022-23 ஆண்டுக்கான உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் பிடித்து விருதினை பெற்றுள்ளது.
  • உறுப்பு தான திட்டத்தில் 36,472 பேர் பதிவு செய்துள்ளன. 1,737 பேரிடம் உடல் உறுப்பு தானம் பெறப்பட்டு 10,353 பெறப்பட்டுள்ளன.

வெம்பக்கோட்டை (2-ஆம் கட்ட அகழாய்வு)

Vetri Study Center Current Affairs - bull - Vembakota

  • விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவமானது கண்டறியப்பட்டுள்ளது.

புஷ் புல் ரயில்

Vetri Study Center Current Affairs - Push pull train

  • எளிய மக்களும் அதிவேக ரயிலில் பயணிக்கும் வகையில் புஷ் புல் ரயில் திட்டத்தினை இரயில்வே அறிமுகம் செய்ய உள்ளது.
  • புஷ் புல் ரயிலின் பெட்டியானது பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
  • புஷ் புல் ரயிலின் பெட்டியின் எஞ்சினானது மேற்கு வங்கத்தின் சித்தரஞ்சன் லோகோமோட்டிவ் ஒர்க்ஸ் ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்திய உயர்கல்வி ஆணைய மசோதா

  • யுஜிசி, ஏஐசிடிஇ, என்சிடிஇ ஆகியவற்றிற்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையமானது அமைக்க சட்டமசோதாவனது விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • கல்வியின் தரத்தினை உயர்த்தவும், கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கவும் இந்த ஆணையமானது அமைக்கப்பட உள்ளது.
  • மருத்துவம் மற்றும் சட்டக்கல்லூரிகள் இந்த ஆணையத்தின் கீழ் வராது.

சபாநாயகர்கள் உச்சி மாநாடு

Vetri Study Center Current Affairs - Parliamentary Speakers Summit

  • ஜி20 நாடுகளின் நாடுகளின் நாடாளுமன்ற 9வது  சபாநாயகர் உச்சி மாநாடானது (பி20) டெல்லியின் யசோ பூமியில் நடைபெறுகிறது.
  • கருப்பொருள்: ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலத்திற்கான நாடாளுமன்றம்

ரோகித் சர்மா 

Vetri Study Center Current Affairs - Rohit Sharma

  • உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்களை (7)  பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
  • மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் அதிவேகம் சதமடித்து (63பந்து) சாதனை படைத்துள்ளார்.
  • சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் அனைத்து பார்மட்டுகளிலும் அதிக சிக்சர்கள் (556) அடித்தும் உலகச் சாதனை படைத்துள்ளார்.

தேசிய தடகள போட்டி – பெங்களூரு

  • தேசிய ஓபன் தடகள சாம்பியண் ஷிப் மகளிருக்கான 100மீ பிரிவில் கிரதரணி ரவிகுமார் (தமிழ்நாடு) முதலிடம் பிடித்துள்ளார்.

உலக முட்டை தினம் (World Egg Day)Oct 13

Vetri Study Center Current Affairs - World Egg Day

  • கருப்பொருள்: “Eggs for healthy future”

பேரிடர் அபாயத்தைக் குறைக்கும் சர்வதேச தினம் (International Day for Disaster Risk Reduction Day)Oct 13

Vetri Study Center Current Affairs - International Day for Disaster Risk Reduction Day

  • கருப்பொருள்: “Fighting inequality for a resilient future”.

 

October 11 Current Affairs | October 12 Current Affairs

Leave a Comment