Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th September 2023

Daily Current Affairs

Here we have updated 13th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சென்னை ஐஐடி

Vetri Study Center Current Affairs - Chennai IIT

  • கழிவு நீர் மற்றும் குடிநீர் குழாய்களில் ஏற்படும் விரிசல்கள், உடைப்புகளை சரிசெய்ய செயற்கை நுண்ணறிவு  (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய எண்டோபாட் என்ற ரோபோவை சென்னை ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளன

தொடர்புடைய செய்திகள்

  • சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் மற்றும் மியூஸ் வியரபிள் ஸடார் அப் நிறுவனம்
    இணைந்து இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு, உடல் வெப்பநிலை மற்றும் பணம் செலுத்தும் வசதியுடைய மோதிர வடிவ தொழில் நுட்ப ஸ்மார்ட் ரிங் கண்டுபிடித்துள்ளன.
  • ஒரே நேரத்தில் இரு புயல்களை கணிக்கும் புதிய தொழில் நுட்பமான புஜிவாரா தொடர்பினை சென்னை ஐஐடி கண்டுபிடித்துள்ளது

கயல்விழி செல்வராஜ்

Vetri Study Center Current Affairs - kayalvizhi selvaraj

  • பழங்குடியினர் நல வாரியத்தலைவராக ஆதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்களும், 14 அலுவல் சாரா உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 14 அலுவல் சாரா உறுப்பினர்களில் 3 பேர் பழங்குடியினத்தவர் ஆவார்.

யுவன் சந்திர சேகர்

Vetri Study Center Current Affairs - Yuvan Chandrasekar

  • கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பு சார்பில் எழுத்தாளர் யுவன் சந்திர சேகருக்கு விஷ்ணுபுரம் இலக்கிய விருதானது வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது 2010 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • கானல் நதி, பகடை ஆட்டம், ஒளிவிலகல், ஏமாறும் கலை, ஒற்றை உலகம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • தமிழகத்தின் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்கள் அமைக்க தமிழக அரசு மற்றும் மேக்ஸ் விஷன் தனியார் மருத்துவமனை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • கண் சிகிச்சை மையங்கள் அமைக்க ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆயுஷ்மான் பவ திட்டம்

  • செப்டம்பர் 13-ல் அனைவருக்கும் ஆரோக்கிய சேவைகளை அளிக்கும் திட்டமான ஆயுஷ்மான் பவ திட்டத்தினை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு துவங்கி வைக்கிறார்.
  • இத்திட்டமானது செப்டம்பர் 17 முதல் அமலுக்கு வர உள்ளது.
  • உடல் உறுப்பு தான இலவச தொலைபேசி எண்ணாக 1800114770 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புவிசார் குறியீடு

Vetri Study Center Current Affairs - geographical indication

  • ஒடிசா மாநிலத்தின் கோபுரட் மாவட்டத்தின் கால ஜீரா அரிசிக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது
  • கார ஜீரா அரிசியானது அரிசியின் இளவரசன் என அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • இதுவரை தமிழகத்தில் 56 பொருள்களுக்கு வழங்கப்பட்டு புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.
  • உத்திரபிரதேசம், கர்நாடகா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

90 எல்லை உள்கட்டமைப்பு திட்டங்கள்

Vetri Study Center Current Affairs - 90 new border infrastructure

  • எல்லை சாலைகள் ஆணையம் இந்தியாவின் வடக்கு வடமேற்கு பகுதிகளில் உருவாக்கப்பட்ட 90 எல்லை உட்கட்டமைப்பு திட்டங்களை ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்பணித்துள்ளார்.
  • இத்திட்டத்தில் அருணாச்சலப்பிரதேசம் கமேங் மாவட்டத்தில் 500மீ தொலைவில் மாலிபரா – சார்துவார் – நவாங் சுங்கப்பாதை சாலையையும் அமைக்கப்பட்டுள்ளது.
  • எல்லை சாலைகள் ஆணையமானது 1960-ல் உருவாக்கப்பட்டது.

மொராக்கா

Vetri Study Center Current Affairs - Morocco Earthquake

  • மொராக்காவில் 6.8 ரிக்டர் அளவுகளாக பதிவான நிலநடுக்கத்தால் 2,900 பேர் இறந்துள்ளன.

லிபியா

Vetri Study Center Current Affairs - Libya Daniel strom

  • லிபியாவில் உருவான டேனியல் புயல் காரணமாக வாடி டெர்ணா நதி அணை உடைந்து 2300 பேர் இறந்துள்ளனர்.

இயன் வில்முட்

Vetri Study Center Current Affairs - Ian Wilmut

  • குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் உயிரினமான டோலி என்ற செம்மறி ஆட்டினை உருவாக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானி இயன் வில்முட் காலமானார்.
  • 1996-ல் பிரிட்டனின் எடின்பார்க் பல்கலைக்கழத்தில் டோலி குளோனிங் ஆட்டை உருவாக்கினார்.

ஐசிசி விருது

Vetri Study Center Current Affairs - ICC Auguset month Awards

  • 2023-ஆம் ஆண்டிற்கான ஆகஸ்ட் மாத விருதிற்கான சிறந்த வீராக பாபர் ஆசம் (பாகிஸ்தான்) தேர்வாகியுள்ளார்.
  • இவ்விருதினை பாபர் ஆசம் 3வது முறையாக பெறுகிறார்.
  • சிறந்த வீராங்கனையாக அர்லினி கெல்லி (அயர்லாந்து) தேர்வாகியுள்ளார்.

September 11 Current Affairs | September 12 Current Affairs

Leave a Comment