Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th January 2023

Daily Current Affairs

Here we have updated 14th January 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழகத்தில் அனைத்து அரசு பணிகளுக்கும் தமிழ் கட்டாயம் என்ற சட்ட மசோதா சட்ட பேரவையில் நிறைவேற்றம்.
    • சட்டத்திருத்த மசோதாவின் 21-ஏ பிரிவின் கீழ் கட்டாயத் தமிழ் மொழித்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு 40 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கு இணங்க 2021 டிசம்பர் 1 தேதியிட்ட அரசாணையை மனிதவள மேலாண்மைத்துறை மூலம் வெளியிடப்பட்டதன் பயனாக இத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • இத்திட்டம் 2022 செப்டம்பர் 15ல் மதுரையில் தொடங்கப்பட்டது.
  • தமிழகத்தின் சிறந்த காவல்நிலையங்கள் தேர்வு. குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் விருது வழங்குகின்றார்
    • 1வது இடம் – திருப்பூர் வடக்கு காவல் நிலையம்.
    • 2வது இடம் – திருச்சி கோட்டை காவல் நிலையம்
    • 3வது இடம் – திண்டுக்கல் தாலுகா காவல் நிலையம்
  • இந்தியாவில் மின்னணு கழிவுகளை உருவாக்கும் மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது.
    • முதல் இடம் –மும்பை
    • மூன்றாவது இடம் – ஆந்திரப்பிரதேசம்
  • தமிழகத்தில் நிகழ் நிதியாண்டின் 6 மாதங்களில் வருவாய் பற்றாக்குறை ரூ.4,185 கோடி என தமிழக நிதியமைச்சர் பழனிச்சாமி தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
    • கடந்த ஆண்டு வரவு செலவு விவரம் (செப்டம்பர் வரை)
      • வருவாய் வரவுகள் – ரூ.1,12,143 கோடி
      • செலவீனம் – ரூ.1,16,328 கோடி
      • பற்றாக்குறை – ரூ 4,185 கோடி
  • தமிழக அரசின் சார்பில் 2024-ல் லக முதலீட்டாளாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெறும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • சென்னை அருகே ஒத்திவாக்கத்தில் நடைபெற்ற மாநில காவல்துறைகளுக்கு இடையேயான துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல்துறை முதலிடம் பிடித்துள்ளது.
    • அகில இந்திய காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டியில் தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ரா.சதி சிவனேஷ் முதலிடம் பிடித்துள்ளார்.
  • தூத்துக்குடி எட்டயுரம் பகுதியை சேர்நத திருநங்கையான ஸ்ருதி தமிழகத்தில் முதன் முறையாக கிராம உதவியாளாராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இவர் மேலகரந்தை கிராமத்தில் பணி நியமனம் செய்யப்ப்பட்டுள்ளார்.

தேசிய செய்தி

  • மின்சார வாகனங்களுக்கு வழங்கப்பட்ட வரி விலக்கு மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
    • 2022 டிசம்பர் 31ல் வரி விலக்கு சலுகை முடிவடைந்தன் காரணமாக 2025 டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டுள்ளது.
  • உலகளவில் மின்னணு கழிவுகளை உருவாக்குவதில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
    • முதல் இடம் – சீனா
    • இரண்டாவது இடம் – அமெரிக்கா
  • உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமட் நகரம் கடந்த 12 நாட்களில் 5.4 செ.மீ. அளவுக்கு பூமியில் புதைந்துள்ளது.
  • தெற்குலகின் குரல் மாநாடு எனப்படும் குளோபல் சவுத் உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
  • திருச்சியை தலைமை இடமாக கொண்ட “கிராமாலயா தொண்டு நிறுவனம் டெல்லியில் மாதவிடாய் கால சுகாதார மேலாண்மை இந்தியா 3வது உச்சி மாநாட்டினை நடத்தியுள்ளது.
    • 13வது இடத்தை தமிழகத்தின் கோவை விமான நிலையம் பிடித்துள்ளது.
  • புதுச்சேரியில் அசின் எந்த உதவியும் பெறாத 17 ஆயிரம் ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார்.

முக்கிய தினம்

  • சர்வதேச காத்தாடி தினம்

Jan 12 Current Affairs | Jan 13 Current Affairs

Leave a Comment