Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th March 2023

Daily Current Affairs

Here we have updated 14th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • மார்ச் 12-ல் சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் எழுத்தாளர் கி.ராஜநாரயணன் நூற்றாண்டு விழா நடைபெற்றது.
    • கோபல்லபுரத்து மக்கள் என்னும் நாவலுக்கு 1991-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது.
    • “தமிழ்நாடு கரிசல் இலக்கியத்தின் தந்தை”-யாக போற்றப்படுகிறார்.

தேசிய செய்தி

  • அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சிலில் நடைபெற்ற “95-வது ஆஸ்கர் விருது” விழாவில் “ஆர்ஆர்ஆர்” படத்தில் இடம் பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் ஆஸ்கார் விருதை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
    • சிறந்த பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் என்ற பெருமையை எம்.எம்.கீரவாணி பெற்றுள்ளார்.
    • நாட்டு நாட்டு பாடலுக்கான ஆஸ்கர் விருதினை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் பெற்றுக்கொண்டனர்.
    • இதற்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்துக்காக சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலித்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் இரு ஆஸ்கர் விருதுகளை 2009-ம் ஆண்டில் வென்றிருந்தார்
  • “தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்” என்ற ஆவண குறும்படம் ஆஸ்கர் விருதினை வென்றுள்ளது.
    • இப்படம் நீலகிரி மாவட்டத்தின் முதுமலை காப்பகத்தில் யானை பராமரிபாளர்களாக பணியாற்றும் காட்டு நாயக்கர் பழங்குடியின தம்பதிகளான பொம்மன், பெள்ளி தம்பதியை பற்றியதாகும்.
    • இப்படத்திற்கான விருதினை இயக்குநர் கார்த்திகி கோன்சால்வஸ், தயாரிப்பாளர் குனீத் மோங்கோ பெற்றுக்கொண்டனர்.
  • புதுவையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் சமையல் எரிவாயு உருளைக்கு மாதம் தோறும் ரூ.300 மானியம் வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்துள்ளார்.
  • மார்ச் 13-ல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு செயல்படுத்த 2023-24 ஆம் ஆண்டு ரூ.1.18 லட்சம் கோடி பஜ்ஜெட்டை மக்களவையில் மத்திய நிதித்துறை அமைச்சர் பங்கஜ் செளதரி தாக்கல் செய்தது.
  • சர்வதேச யாேகா தினத்திற்கு இன்னும் 100 நாட்கள் இருக்கும் நிலையில் அதன் தொடக்க நிகழ்வாக மார்ச் 13-15 வரை “3 நாள் யோ மகோத்சவம்-2023” நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • மார்ச் 13,14 இருதினங்கள் டில்லியின் தால்கடோரா விளையாட்டு அரங்கத்திலும், மார்ச் 15-ம் தேதி மெரார்ஜி தேசயி யோகா கழகத்திலும் நடைபெறுகிறது.
    • 2015 முதல் ஜீன் 21-ம் தேதி “சர்வதேச யோகா தினம்” கொண்டாடப்பட்டு வருகிறது

உலகச் செய்தி

  • நேபாள அதிபராக நேபாளி காங்கிரஸ் கட்சியின் ராம் சந்திர பெளடேல் (78) பதவியேற்றுள்ளார்.

முக்கிய தினம்

  • சர்வதேச கணித தினம் (π) Pi Day
    • தேசிய கணித தினம் (டிசம்-22) கணிதமேதை ராமானுஜத்தின் பிறந்த நாளை முன்னிட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

Mar 11 Current Affairs  |  Mar 12 Current Affairs

Leave a Comment