Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th December 2022

Daily Current Affairs

Here we have updated 14th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • “இந்தியா இன் பிக்சல்ஸ்” அமைப்பு வெளியிட்டுள்ள தனிநபர் வருமான பட்டியலில் தமிழகத்தில் திருவள்ளுவர் மாவட்டம் முதலிடம் (தனிநபர் வருமானம் – ரூ.3.84 லட்சம் குறைந்த பட்சம்) பெற்றுள்ளது.
    • 2வது இடம் – கோவை மாவட்டம்
    • 3வது இடம – ஈரோடு மாவட்டம்

தேசிய செய்தி

  • இந்திய ராணுவ வீரர்கள் உரிய நேரத்தில் தலையீட்டால் அருணாசலபிரதேசத்தின் தவாங் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் அத்துமீறல் முறியடிக்கப்பட்டது.
  • நவம்பர் மாத “குறைதீர்ப்புக் குறியீட்டு பட்டியலில்” இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) நான்காவது மாதமாக முதலிடத்தை பிடித்துள்ளது.
    • UIDAI – Unique Identification Authority of India
    • நிறுவப்பட்ட ஆண்டு : 29.01.2009
  • இந்தியா செயற்கைக்கோள் அலைக்கற்றை ஏலத்தை நடத்தும் முதல் நாடாக திகழ்கிறது என TRAI தலைவர் தெரிவித்துள்ளார்.
  • கர்நாடாகவில் நகர்புற ஏழைகளுக்காக “நமது கிளினிக்குகள்”ஐ அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
  • கர்நாடாக மாநிலத்தின் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 5வது சிறுமிக்கு முதல்முறையாக ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • ஜிகா வைரஸ் ADS கொசுக்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது
    • இவ் வைரஸ் 1947-ல் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 2023 ஜனவரி 1 முதல் டெல்லியில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது..

முக்கிய தினம்

  • தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation DaY)
    • இத்தினத்தில் “V.YATRA” என்னும் செயலி மற்றும் இணையதளம் வெளியிடப்பட்டுள்ளது

Dec 11 – 12 Current Affairs | Dec 13 – Current Affairs

Leave a Comment