Daily Current Affairs
Here we have updated 14-15th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய வகை வண்ணத்துப்பூச்சி
- மேற்கு தொடர்ச்சி மலையின் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மேகமலை கோட்டத்தில் கிளவுட் ஃபாரஸ்ட் சில்வர் லைன் (Cloud Forest Silver Line) எனும் புதிய வகை வண்ணத்துப்பூச்சி இனம் கண்டறியப்பட்டுள்ளது.
- இத்துடன் வண்ணத்துப்பூச்சிகளின் எண்ணிக்கை 337-ஆக உயர்ந்துள்ளது.
- 33 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வண்ணத்தப்பூச்சி இனமாகும்.
தமிழ்நாடு – பெயர் மாற்றம்
- 14.01.1969 மெட்ராஸ் மகாணத்திற்கு தமிழ்நாடு என அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றப்பட்டது.
- அறிஞர் அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என மாற்றம் செய்யப்பட்டது.
தூய்மை நகரங்கள் பட்டியல்
- மத்திய அரசின் தூய்மை நகரப்பட்டியலில் சென்னை 37வது இடத்தை பிடித்துள்ளது.
- இப்பட்டியலில் 44 இடத்திலிருந்து 37 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
நவீன வன உயிரின் மறுவாழ்வு மையம்
- கோவை வனக் கோட்டத்தில் உள்ள பெத்தி குட்டை பகுதியில் வன உயிரின மறுவாழ்வு மையம் அமைக்க தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது.
- வன உயிரின மறுவாழ்வு மையமானது ரூ.19.50 கோடி செலவில் 53 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளது.
- வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் – 1972
காணாமல் போன நபர்கள்
- 2013 முதல் தற்போது வரை தமிழகத்தில் காணாமல் போன 6000 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகவல் அறியும் உரிமை சட்டம் (Right to Information Act) – 2005
கீழ்வேளூர் பேரூராட்சி
- தென்னிந்தியாவின் தூய்மை விருதானது நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் பேரூராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருது
- மதுரையைச் சேர்ந்த ஆயி அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- அரசுபள்ளிக்கு 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தினை கொடையாக கொடுத்த ஆயி அம்மாளை கெளரவிக்கும் வகையில் இவ்விருதானது வழங்கப்பட உள்ளது.
புத்தகம் வெளியீடு
- சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பபாசி புத்தக்காட்சியில் கொரோனா-உடல் காத்தோம்… உயிர் காத்தோம் என்னும் நூலினை தமிழக இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- இந்நூலினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எழுதியுள்ளார்.
வீரமணிதாசன்
- பின்னணி பாடகர் வீரமணிதாசனுக்கு ஹரிவராசனம் விருதானது வழங்கப்பட உள்ளது.
உலகின் மிகச் சிறந்த அரிசி
- டேஸ்ட் அட்லஸ் (Taste Atlas) இணையதளம் உலகின் மிகச் சிறந்த அரிசியாக இந்தியாவின் பாஸ்மதி அரிசியை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- இத்தாலியின் அர்போரியா வகை அரிசியும், போர்ச்சுக்கலின் கரோலினா வகை அரிசியும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
இந்திய ரூபாய் – ஒப்புதல்
- 35 நாடுகள் இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
- இதனை தில்லியில் நடைபெற்ற இந்திய ரூபாயின் 100 ஆண்டு கால பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஓபன் சூப்பர் 1000 பாட்மின்டன் போட்டி
- ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் – சிராஜ் ஷெட்டி இணை வெள்ளி வென்றுள்ளது.
முன்னாள் ராணுவ படை வீரர்கள் தினம் (Ex-Servicemen’s Day) – ஜன 14
- 14.01.1953-ல் இந்தியாவின் முதல் ராணுவ தளபதி ஃபீலட் மார்ஷல் பணி ஓய்வு பெற்ற தினமானது முன்னாள் ராணுவ படை வீரர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய ராணுவ தினம் (Indian Army Day) – ஜன 15
- 15.01.1949-ல் பிரிட்ஷாரிடமிருந்து இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்ட தினம்
- இன்று 75வது ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.
January 12 Current Affairs | January 13 Current Affairs