Daily Current Affairs
Here we have updated 14th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
இ-லியர்னிங் (e-learning)
- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு (TNPSC), ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு (TRB), மத்திய அரசுப் பணியாளர் தேர்வு (UPSC), வங்கி, ரயில்வே போன்ற பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு மாதிரி வினாத்தாள்களை மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் e-learning திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை இயக்குநரகம், பொது நூலகத் துறை, அண்ணா நூலகம் இணைந்து இத்திட்டதினை அறிமுகம் செய்துள்ளன.
- இணைய தள முகவரி – https://elms.annacentenarylibrary.org/
நிலத்தடி நீர்
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளதாக நீர் வளத்துறை மேற்கொண்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி
- நகரங்களுக்கிடையே சரக்குகளை எளிதாகவும், திறமையாகவும் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் ஆப்ட்ரூட் (OptRoute) என்ற செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.
- இதனை சென்னை ஐஐடி-யின் ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர்.
- இடைத்தரகர் யாரும் இல்லாமல் ஓட்டுநரையும், நுகர்வோரையும் நேரடியாக இணைக்கும் வகையில் இச்செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பணி இடமாற்றம்
- அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி விவேக்குமார் சிங் மற்றும் தெலுங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுதிர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டள்ளனர்.
- தற்போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.
நிதி ஒதுக்கீடு
- 15-வது மத்திய நிதி ஆணையம் மூலமாக தமிழகத்தின் ஊரகப்பகுதிகளுக்கு ரூ.836.97 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 15வது நிதி ஆணைய தலைவர் – ஸ்ரீ என்.கே சிங்
- அரசமைப்பு சட்டம் 280-வது பிரிவின் படி ஒவ்வொரு 5 ஆண்டுக்கும் நிதிக்குழு அமைக்கப்படும்
- மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான நிதிப்பகிர்வு, மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியுதவிகள் குறித்த பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கும்.
புதிய துணைவேந்தர்
- எக்பால் ஹுசைன் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடன் ஒப்பந்தம்
- உயர்தர நகர்ப்புற உள்கட்டமைப்பை உருவாக்க ரூ.3,300 கோடி (400 மில்லியன் டாலர்) கடன்பெற ஆசிய வளர்ச்சி வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மூத்த வாக்களர் – இமாச்சலபிரதேசம்
- இமாச்சலபிரதேசத்தின் மூத்த வாக்களாரான கங்கா தேவி (104) காலமானார்.
மணிப்பூர் – குழுக்களுக்கு தடை
- மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கு ஆதரவான ஆயுத குழுக்கள் உள்பட 9 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
- இத்தடையானது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழங்குடியினர் வளர்ச்சித் திட்டம்
- நவம்பர் 15-ல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ரூ.24,000 கோடி மதிப்பிலான பழங்குடியினர் வளரச்சித்திட்டத்தை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
- பழங்குடியினர் தினம் (பிர்சா முண்டா பிறந்த தினம்) – நவம்பர் 15
ஹால் ஆஃப் ஃபேம் விருது (Hall of Fame Award)
- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) கெளரவமிக்க விருதான ஹால் ஆஃப் ஃபேம் விருதிற்கு 3 நபர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
- வீரேந்திர சேவாக் – தொடக்க ஆட்டக்கரார் இந்திய அணி
- டயானா எல்டுல்ஜி – இந்திய மகளிர் அணி முன்னாள் கேப்டன் (விருது பெறும் முதல் இந்திய வீராங்கனை)
- அரவிந்தா டி சில்வா – இலங்கை அணி
ஏடிபி டூர் ஃபைனல்ஸ் போட்டி (இத்தாலி-டூர்)
- ஜோகோவிச் (செர்பியா) சாம்பியன் பட்டத்தை வென்று உலகின் நம்பர் 1 வீரர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டார்.
- 6 ஆண்டுகளாக நம்பர் 1 சாம்பியனாக நீடித்த பீட் சாம்பிராஸின் சாதனையும் முறியடித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025
- பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025-க்கு இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
- 8 ஆண்டுகளுக்கு பிறகு 2025-ல் பாகிஸ்தான் இப்போட்டியை நடத்த உள்ளது.
பில்லி ஜீன் கிங் டென்னிஸ் போட்டி – செவில்லே
- உலகின் தலைசிறந்த மகளிர் அணிகள் மோதும் பில்லிஜீன் கோப்பை டென்னிஸ் போட்டியில் கனடா அணி உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- முதன் முறையாக கனடா அணி பில்லி ஜீன் கிங் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
தேசிய குழந்தைகள் தினம் (National Children’s Day) – Nov 14
உலக சர்க்கரை நோய் தினம் (World Diabetes Day) – Nov 14
November-11 Current Affairs | November 12-13 Current Affairs