Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th September 2023

Daily Current Affairs

Here we have updated 14th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பசுமை ஹைட்ரஜன் மையம் (Green Hydrogen Centre)

Vetri Study Center Current Affairs - Green Hydrogen

  • தமிழ்நாட்டில் கீரன் ஹைட்ரஜன் வேலி இன்னேவேஷன் சென்டரை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) & சென்னை ஐஐடி இணைந்து ரூ.100 கோடி மதிப்பீட்டில் பசுமை ஹைட்ரஜன் மையமானது அமைக்க உள்ளது.
  • தினமும் சுமார் 500டன் அளவில் உற்பத்தி செய்து திரவமாக சேமிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் ஸ்வோனியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் (ஜிந்த – சோனிபட்) தொடங்கப்பட்டது
  • ஆசியாவிலே முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை சீனா தொடங்கப்பட்டது.
  • உலகில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஜெர்மனி தொடங்கப்பட்டது

சாலையோர நலவாரியம் (Welfare assistance to Road side traders)

Vetri Study Center Current Affairs - Welfare assistance to Road side traders

  • சாலையோர வியாபரிகளின் நலன்களை பாதுகாக்க தமிழக அரசால் தமிழ்நாடு சாலையோர கடைகள் மற்றும் வணிக நிறுவன வியாபாரிகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இதன் தலைவராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்

யானை வழித்தடங்கள் (Elephant Tracks)

Vetri Study Center Current Affairs - Elephant Tracks

  • இந்தியாவில் 150 யானை வழித்தடங்கள் உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
  • கடந்த 2010-ல் யானை வழித்தடங்கள் 88-ஆக இருந்தது. தற்போது 150-ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 26 யானை வழித்தடங்கள் அமைந்துள்ளன.

தொடர்புடைய செய்திகள் 

  • உலக யானைகள் தினம் – Aug 12
  • தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உள்ளது.
  • புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைக்கப்பட்டு புலி மற்றும் யானை திட்டப்பிரிவானது உருவாக்கப்பட்டது.
  • யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டமான “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” அசாமில் செயல்படுத்தப்படுகிறது
  • கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.

கருத்தரங்கம் – துவக்கம்

Vetri Study Center Current Affairs - First Global Symposium on Farmers' Rights

  • தில்லியில் விவசாயிகளின் உரிமைகள் தொடர்பான முதல் உலகாளவிய கருத்தரங்கத்தை (First Global Symposium on Farmers’ Rights) குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு துவங்கி வைத்துள்ளார்.
  • 2001-ல் கொண்டு வரப்பட்ட பயிர் வகைகளின் பாதுகாப்பு, விவசாயிகளின் உரிமைகள் சட்டத்தின் மூலம் விவசாயிகள் விதைகளை பயன்படுத்தவும், பாதுகாக்கவும், பகிர்ந்த கொள்ளவும், விற்கவும் இயலும். மேலும் விவசாயிகள் தங்களுக்குச் சொந்தமான விதைகளைப் பதிவு செய்து கொள்ளவும் முடியும்.
  • இச்சட்டம் ஒட்டு மொத்த உலகம் முழுவதும் பின்பற்ற தக்க வகையில் முன்னுதாரணமாக திகழ்வதாக குடியரசுத்தலைவர் தெரிவித்துள்ளார்.

சி295 விமானம் (C295 Aircraft)

Vetri Study Center Current Affairs - C295 Aircraft

  • ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள சி295 விமானம் இந்திய விமானப்படைத் தளபதி வி.ஆர்.செளத்திரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
  • ஸ்பெயினில் அமைந்துள்ள ஏர்பஸ் நிறுவனத்திடம் ரூ.21,935 கோடி மதிப்பீட்டில் 56 சி295 விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா 2021-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

உஜ்வாலா திட்டம் (Ujjwala Yojana Scheme)

Vetri Study Center Current Affairs - Ujjwala Yojana Scheme

  • பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தில் கீழ் மேலும் 75 இலட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பயனாளிகளின் எண்ணிக்கையானது 10.35 கோடியாக அதிகரித்துள்ளது.
  • இத்திட்டமானது 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்த ரூ.1650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • 2015-ல் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்ற குறிக்கோளுடன் பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டமானது (PMKSY – Pradhan Mantri Krishi Sinchai Yojana) தொடங்கப்பட்டது.
  • 2018-ல் பிரதமரின் மருத்துவக் காப்பீட்டு திட்டமானது (PMJAY – Pradhan Mantri Jan Arogya Yojana) உருவாக்கப்பட்டது.

இணைய நீதிமன்றம்

  • இணைய நீதிமன்ற 3வது கட்ட திட்டத்திற்காக ரூ.7510 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • காகித பயன்பாடற்ற நீதிமன்றங்களாக மாற்றம் செய்யும் திட்டமே இணைய நீதி மன்றம் திட்டமாகும்
  • எளிதில் அனுப்புதல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தத்துவ அடிப்படையில் 3வது கட்ட திட்டமானது தொடங்கப்பட உள்ளது.

எம்.பி.க்கள்- குற்றவியல் வழக்குகள்

  • அசோசியேஷன்ஃபார் டெமாக்ரேடிக்க ரிஃபார்ம்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி நாடாளுமன்றத்தின் 40% எம்.பி.க்கள் மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

கட்சி வாரியாக எம்.பி.க்களின் குற்ற வழக்குகள்

கட்சிகுற்ற வழக்குகள் உள்ள எம்.பி.க்கள்கட்சி எம்.பி.க்களில் குற்ற வழக்குள்ளோர் சதவீதம்
பாஜக13936%
காங்கிரஸ்4353%
தி.மு.க1338%
அ.தி.மு.க120%

தொடர்புடைய செய்திகள்

  • பணக்காரர்கள் எம்எல்ஏக்களை கொண்ட கட்சிகள் பட்டியல் – 1வது இடம் – பி.ஜே.பி., 2வது இடம் – காங்கிரஸ், 6வது இடம் – தி.மு.க
  • அதிக கோடீஸ்வர எல்எல்ஏக்கள் உள்ள மாநிலம் – கர்நாடகா
  • கோடீஸ்வர எம்எல்ஏ- டி.கே.சிவகுமார் (கர்நாடகா)
  • ஏழ்மையான எம்எல்ஏ – நிர்மல்குமார் (மேற்கு வங்கம்)
  • கோடீஸ்வர முதல்வர் – ஜெகன்மோகன்ரெட்டி (ஆந்திரா)
  • ஏழ்மையான முதல்வர் – மம்தா பானர்ஜி (மேற்கு வங்கம்)

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ITF)

Vetri Study Center Current Affairs - Simona Halep

  • ஊக்க மருந்து தடுப்பு விதியினை மீறியதற்காக  டென்னிஸ் வீராங்கனையான சைமோனோ ஹேலப் (ருமேனியா)-பிறகு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ITF – International Tennis Federation – 03.01.1913
  • இதன் தலைமையகம் லண்டனில் (இங்கிலாந்து) அமைந்துள்ளது.

லஞ்ச ஒழிப்பு வாரம் (Anti-Bribery Week)

  • அக்டோபர் 30 முதல் நவம்பர் 6வரை லஞ்ச ஒழிப்பு வாரமாக கடைபிடிக்க மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • “லஞ்சம் கேட்டால் இல்லை என்று சொல்லுங்கள்; நாட்டுக்காக செயலாற்றுங்கள்” என்ற தலைப்பில் லஞ்ச ஒழிப்பு வாரம் கடைபிடிக்கப்பட உள்ளது.

தேசிய ஹிந்தி தினம் (Hindi Diwas) – Sep 14

Vetri Study Center Current Affairs - Hindi Diwas

  • 14.09.1949-ல் இந்தியாவின் அலுவல் மொழியாக ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டதன் நினைவாக தேசிய ஹிந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.

September 12 Current Affairs | September 13 Current Affairs

Leave a Comment