Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th February 2023

Daily Current Affairs

Here we have updated 15th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

 • காலச்சூழலுக்கு ஏற்ப மாற்றி வடிவமைக்கப்பட்ட மின் வாகன கொள்கையின் மூலம் சென்னை, மதுரை சேலம், திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 நகரங்களை மின் வாகன நகரங்களாக மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இக் கொள்கையின் மூலம் 50 ஆயிரம் கோடி மூதலிடுகளை ஈர்ப்பதுடன் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சாலை வரி விலக்கு, பதிவு கட்டணம் தள்ளுபடி ஆகிய பயன்கள் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
 • பிப்ரவரி 15ல் கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்துப்படும் 14 கிராமங்களில் அனைத்து துறைகளில் சார்பில் சிறப்பு வங்கி முகாம் நடைபெற உள்ளதாக வேளாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
  • வேளாண் இயக்குநர் – எல்.சுரேஷ்
  • கலைஞர் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் – 23.05.2022
  • ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியையும் தன்னிறைவான கிராமத்தையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் சிறப்பாகும்.
 • முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம், முன்னாள் சட்டபேவரை உறுப்பினர் பொள்ளாள்ளாச்சி  நா.மகாலிங்கம் ஆகியோரின் சிலையுடன் கூடிய அரங்குகள் அமைக்க தமிழக முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • மேலும் சுதந்திர பேராட்ட வீரர் தளி பாளையக்காரர் மலையாண்டி வெங்கிடுபதி எத்தலப்பநாயக்கர் நினைவாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் சிலையும், தனி கிராமத்தில் அவருக்கு அரங்கம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
 • அனைத்து திட்டங்களையும் ஒரே ஆண்டில் நிறைவேற்றிக் காட்டுவோம் “உங்களில் ஒருவன் பதில்கள்” என்ற நிகழச்சியில் தமிழக அரசு அறிவிப்பு.
  • உங்களில் ஒருவன் பதில்கள் – தமிழக முதலவர் மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கும் நிகழ்ச்சி
  • கள ஆய்வில் முதல்வர் –  இத்திட்டம் 2023 பிப்ரவரி 1-ல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் படி அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மாவட்டந்தோறும் சென்ற நிர்வாக பணி பற்றியும், நலத்திட்டங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இத்திட்டம் முதல் முறையாக வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
  • காலை உணவுத் திட்டம் – அண்ணாவின் பிறந்த நாளான 2022 செப்டம்பர் 15-ல் செயல்படுத்தப்பட்டது
  • புதுமைப் பெண்கள் திட்டம்6-12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி செல்லும் போது மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் “மூவலூர் இராமிர்தம் உயர் உறுதித் திட்டம்”என்ற பெயரில் “புதுமை பெண்கள் திட்டம்” செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கடந்த 2022 செப்டம்பர் 5ல் தொடங்கி வைக்கப்பட்டது
 • குடற்புழு தினத்தினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு வாரத்தில் 2.69கோடி பேருக்கு குடற்புழு நீகக்க மாத்திரை வழங்கபட உள்ளது.
  • பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

தேசிய செய்தி

 • 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் போது மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான “சாட் ஜிபிடி” தேடுதளத்தை பயன்படுத்த சிபிஎஸ்இ தடை விதித்துள்ளது.
  • சிபிஎஸ்இ – மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE)
  • உருவாக்கப்பட்ட  ஆண்டு – 3.11.1929
  • தலைமையிடம் – புதுதில்லி.
 • ஏர் இந்தியா நிறுவனம் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களையும், பிரான்ஸின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 250 விமானங்களையும் சுமார் 6.40 லட்சம் கோடியில் வாங்க உள்ளது.
  • டாடா குழுமத்திற்கு ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமானது குறிப்பிடத்தக்கது.
 • இந்தியாவில் முதல் முறையாக திடக்கழிவுகளில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் திட்டம் மகாராஷ்டிரம் புனேயில் தொடங்கப்பட உள்ளது.
  • பிளாஸ்மா வளிமயமாக்கல் தொழில் நுட்பத்தில் இந்த ஆலை செயல்பட இருக்கிறது.
 • பிப்ரவரி14-ல் ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் 2019ல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
 • பிப்ரவரி 12ல் 1,386 கி.மீ நீளம் உடைய நாட்டின் மிக நீண்ட விரைவுச்சாலையான தில்லி – மும்பை விரைவுச் சாலையை பிரதமர் துவக்கி வைத்தார்.

விளையாட்டுச் செய்தி

 • ஜார்க்கண்டில் நடைபெற்ற தேசிய நடைப் போட்டியில் உத்திரபிரதேசத்தின்  பிரியங்கா கோஸ்வாமி, பஞ்சாபின் அக்ஷ்தீப் சிங் ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றன.
  • இதன் மூலம் ஆகஸ்டில் புடாபெஸ்டில் நடைபெற உள்ளத உலக சாம்பியன்ஷிப் மற்றம் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற்றுள்ளனர்.
  • பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இரு இந்தியர்கள் இவர்களே ஆவர்
 • துபாயில் நடைபெற்ற ஆசிய கலப்பு அணிகள் பாட்மின்டன் சாம்பியன் ஷிப்பில் இந்தியா அணி கஜகஸ்தானை வென்றது.

Feb 12-13 Current Affairs  |  Feb 14 Current Affairs

Leave a Comment