Daily Current Affairs
Here we have updated 15th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- தமிழகத்தில் ரூ12,178 கோடியில் 12 துறைமுகத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய துறைமுகம், நீர்வழிப் போக்குவரத்து துறை அமைச்சர் சர்வானந்த சோனோவால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
- பல்வேறு பொருளாதார மண்டலங்கள், துறைமுகங்கள், கப்பல் சரக்கேற்றும் மையங்கள் ஆகியவற்றை இணைக்கும் பல்முனை இணைப்பு உட்கட்டமைப்ப மேம்படுத்தும் பிரதமரின் விரைவு சக்தி தேசியப் பெருந்திட்டத்தின் கீழ் ரூ. 60,872 கோடி செலவில் 101 திட்டங்கள் நாடு முழுக்க மேற்கொள்ப்பட்டு வருகின்றன.
- மார்ச் 14-ல் தமிழ்நாடு தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில் நுட்பவியல் நிறுவனம் சார்பிலான BRIDGE-23 (பிரிட்ஜ்-23) மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அச்சத்தால் ஏற்படும் காய்ச்சல் பாதிப்பு மற்றம் உளவியல் ரீதியான ஆலோசனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் உதவி மைய எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம் என பொது சுகாதரத்துறை இயக்குநர் டாக்டர் செல்விநாயகம் தெரிவித்துள்ளார்.
- மார்ச் 14-ல் தமிழ்நாடு அங்கக வேளாண்மைக்கென தனிக் கொள்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- முதன் முறையாக அங்கக வேளாண்மை நிதி நிலை அறிக்கையில் அங்கக வேளாண்மைக்கான தனிக்கொள்கை குறித்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
- தேசிய அளவில் அங்கக வேளாண்மையில் தமிழ்நாடு 14வது இடத்தில் உள்ளது.
- மார்ச் 14-ல் தமிழகத்தில் ஒரு மெகா உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப் பதன அலகுகள், 9 வேளாண் பொருள்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள் 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கபட்டுள்ளதாக மத்திய உணவுப் பதப்படுத்துதல் தொழில்துறை இணையமைச்சர் பிரஹலாத் சிங் படேல் தெரிவித்தார்.
- தமிழக எழுத்தாளர் “பெருமாள் முருகன்” எழுதிய “பூக்குழி” நாவலின் ஆங்கில மொழி பெயர்ப்பான “பயர்” சர்வதேச புக்கர் விருதுக்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது
- இவரே “சர்வதேச புக்கர் விருது”க்கான இறுதி பரிந்துரைப் பட்டியலில் இடம் பெறும் முதல் தமிழ் எழுத்தாளர்.
- பூக்குழி நாவலை தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு அனிருத்தன் வாசுதேவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.
- 2022-ம் ஆண்டுக்கான விருதை “டூம்ப் ஆஃப் சேண்ட” என்ற நாவலுக்காக ஹிந்தி எழுத்தாளர் “கீதாஞ்சலி” மொழிபெயர்ப்பாளர் “டெய்சி ராக்வெல்” ஆகியோர் பெற்றிருந்தனர்.
- நாட்டில் எழுத்தறிவு பெற்ற மாநிலங்களில் 80.09%வுடன் தமிழகம் 14வது இடத்தை பிடித்துள்ளது.
- முதலாவது இடத்தை கேரளாவும், கடைசி இடத்தை பீகாரும் பிடித்துள்ளது.
- பள்ளிக் கல்வியின் அனைத்து நிலைகளிலும் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கல்வியல் பாலின மற்றும் சமூக இடைவெளிகளைப் போக்கவும் “முமுமையான கல்வித் திட்டம் (சமக்ர சிக்சா அபியான்)” என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
- 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தின் முடிவில் நாட்டின் ஒட்டு மொத்த எழுத்தறிவு விகிதத்தை 80% அளவிற்கு உயர்த்தவும், எழுத்தறிவு பாலின இடைவெளியை 10% அளவுக்கும் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய செய்தி
- சுரேகா யாதவ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரயிலை இயக்கிய முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- 1988ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- மகாராஷ்டிராவின் சோலாப்பூரிலிருந்து மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்கியுள்ளார்.
- நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022-ல் 14.6 லட்சம் பேராக இருந்த நிலையில் 2025-ல் 15.7 லட்சம் பேராக உயரும் என மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 30வயதைக் கடந்தவர்கள் இலக்காகக் கொண்ட அவர்களுக்கு தொண்டை புற்றுநோய், மார்பக புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்பட்டுள்ளதா என்பதை ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் சென்டர் நல மையங்களில் இப்பரிசோதனை மேற்கொள்ப்படுகிறது.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வின்படி நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1% இருதய நோய்களால் ஏற்படுவதாக மத்திய சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
- ஐசிஎம்ஆர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி “இந்தியா; தேசத்தின் ஆரோக்கியம்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
- ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து பொருத்தமான சுகாதார வசதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஃபிட் இந்தியா இயக்கம், யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் ஆயுஷ்மான் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலகச் செய்தி
- இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவில் அச்சுறுத்தை எதிர்கொள்ளும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதற்கான திட்டத்திற்கு அமெரிக்கா-பிரிட்டன்-ஆஸ்திரேலியா இடையிலான “ஆக்கஸ்” கூட்டணி ஒப்புதல் வழங்கியுள்ளது.
- உலக அளவில் பெண்களுக்கு சம சட்ட உரிமைகள் வழங்கும் நாடுகளில் பெல்ஜியம், கனடா, டென்மார்க் ஆகியன முறையே முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளது என உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
- இப்பட்டியலில் இந்தியா 74.4 புள்ளிகளை பெற்றுள்ளது.
- சர்வதேச சராசரி புள்ளி – 71.7
முக்கிய தினம்
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம்