Daily Current Affairs
Here we have updated 15th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- தமிழக அமைச்சரவையில் 35வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.
- அவருக்கு இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
- மேலும் சில அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட துறைகள்.
ஐ.பெரியசாமி | ஊரக வளர்ச்சி, ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் |
சு.முத்துசாமி | வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை |
கே.ஆர்.பெரியகருப்பன் | கூட்டுறவுத்துறை |
ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் | பிற்படுத்தப்படோர் நலன், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சீர்மரபினர் நலன் மற்றும் கிராமத் தொழில் வாரியம் |
கா.ராமச்சந்திரன் | சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் |
ஆர்.காந்தி | கைத்தறி பூதானம் மற்றும் கிரா தானம் |
பி.கே.சேகர் பாபு | இந்து சமயம் மற்றம் அறநிலையங்கள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) |
பழனிவேல் தியாகராஜன் | நிதித்துறை, திட்டம், மனிதவள மேலாண்மை ஒய்வூதியம் மற்றும் ஒய்வுக்கால நன்மைகள், புள்ளியியல் துறை |
சிவ வீ.மெய்யநாதன் | சுற்றுசூழல் மற்றும் மாசுக் கட்டபாட்டுத் துறை |
டாக்டர் எம்.மதிவேந்தன் | வனத்துறை |
- தமிழக விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் ரூ.3000லிருந்து ரூ6000மாக அதிகரிக்கப்பட்டு்ள்ளது.
- சேலத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனத்தில் சார்பில் ஐஸ்கீரிம் தொழிற்சாலை திறக்கப்பட்டுள்ளது.
- நாடுமுழுவதும் அதிக சைபர்கிரைம் காவல்நிலையங்கள் கொண்ட பட்டியிலில் தமி்ழ்நாடு(46) முதலிடம் பிடித்துள்ளது.
- இரண்டாவது இடம் – மகாராஷ்டிரா(43)
- 2023 ஜனவரி 01-08 வரை இலக்கியத் திருவிழா அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நடைபெற உள்ளது.
தேசிய செய்தி
- டிசம்பர் 15-ல் இந்தியாவினை ஒங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றிய “இந்தியாவின் இரும்பு மனிதன்” என அழைக்கப்படும் சர்தார் வல்லபபாய் படேல் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.
- டிசம்பர்14-ல் நியூயார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்துள்ளார்.
- டிசம்பல் 14-ல் புதுதில்லி சர்வதேச மத்தியஸ்த மையம் என்பதை இந்திய சர்வதேச மத்தியஸ்த மையம் என பெயர் மாற்றும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
- கர்நாடாகவில் நகர்புற ஏழைகளுக்காக “நமது கிளினிக்குகள்”ஐ அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.
- கர்நாடாக மாநிலத்தின் ரெய்ச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 5வது சிறுமிக்கு முதல்முறையாக ஜிகா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- ஜிகா வைரஸ் ADS கொசுக்கள் மூலம் மனிதருக்கு பரவுகிறது
- இவ் வைரஸ் 1947-ல் கிழக்கு ஆப்பிரிக்கா நாடான உகாண்டாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 2023 ஜனவரி 1 முதல் டெல்லியில் 450 வகையான மருத்துவப் பரிசோதனைகள் இலவசமாக வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய இருதயவியல் சங்கத்தின் புதிய தலைவராக ஹைதரபாத்தின் இருதய நோய் நிபுணர் B.C.ராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- டிசம்பர் 14-ல் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் தோல் தான அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
- டிசம்பர் 15-17வரை தில்லியில் 7வது இந்திய நீர் தாக்க உச்சி மாநாடு டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறஉள்ளது.
உலகச் செய்தி
- அமெரிக்காவில் சம பாலினத்தவர் மற்றும் இனக்கலப்பு திருமணங்களுக்கு சட்டபாதுகாப்பு அளிக்கும் மசோதாவில் அதிபர் ஜோபைடன் கையொப்பம் இட்டு்ள்ளார்.
- 2015-ல் சமபாலினத்தவர் திருமணத்திற்கு அமெரிகக உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
விளையாட்டு செய்தி
- டிசம்பர் 16,17-ல் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் ஜூனியர் பெண்கள் உலக கோப்பை வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை ஜாய்ஸ் அஷிதா பங்கேற்கிறார்.
முக்கிய தினம்
- தேசிய தேயிலை தினம் (National Energy Conservation DaY)
- 2005 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது