Daily Current Affairs
Here we have updated 15th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
துணைவேந்தர்கள் கூட்டம்
- ஏப்ரல் 16-ல் துணைவேந்தர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
- முதல்வர் தலைமையில் முதன் முறையாக நடைபெற உள்ள துணைவேந்தர் கூட்டம் இதுவாகும்.
கணக்கெடுப்பு
- நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நடக்கவுள்ளது.
- இந்த கணக்கெடுப்பினை தமிழ்நாடும், கேரளவும் இணைந்து நடத்த உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தின் மாநில விலங்கு – நீலகிரி வரையாடு
- நீலகிரி வரையாடு தினம் – அக்டோபர் 7
குழு அமைப்பு
- ஒன்றிய-மாநில அரசுகளின் உறவுகள் குறித்து விரிவாக ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- இக்குழுவானது மாநில சுயாட்சியை உறுதி செய்ய உருவாக்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் நிர்வாக சீர்திருத்தக் குழு – 1966 (மொரார்ஜி தேசாய், கே.அனுமந்தையா தலைமை)
- ராஜமன்னார் குழு – 1969
- சர்க்காரியா ஆணையம் – 1983
- வெங்கட செல்லையா குழு – 2000
- இரண்டாவது நிர்வாக சீர்திருத்தக்குழு (வீரப்ப மொய்லி தலைமை பின்னர் வி.இராமச்சந்திரன் தலைமை)
- புன்ச்சி குழு – 2007
வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2025
- வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது 2025ஆனது சிவகாமி என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இட ஒதுக்கீடு
- தெலுங்கானாவில் பட்டியலின மக்களுக்காக (SC) உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்திய முதல் மாநிலம் என்ற பெருமையை படைத்துள்ளது.
கெளரவ்
- DRDO-ஆல் கெளரவ் என்னும் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஒன்றிய சபை
- உஸ்பெகிஸ்தானில் 150வது நாடாளுமன்ற ஒன்றிய சபை (IPU) கூட்டம் நடைபெற்றுள்ளது.
- Inter parliamentary Union – 1889
- தலைமையகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து
அம்பேத்கர் தினம்
- அமெரிக்காவின் நியூயார்க் மாநிலமானது அம்பேத்கர் பிறந்த நாளை அம்பேத்கர் தினமாக கொண்டாட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அம்பேத்கர் பிறந்த தினம்
- தமிழ்நாட்டில் சமத்துவ தினமாக கொண்டாப்படுகிறது.
- மகாராஷ்டிராவில் அறிவு தினமாக கொண்டாடப்படுகிறது.
ISSF உலககோப்பை 2025
- இந்தியா துப்பாக்கி சுடுதல் பிரிவில் 4 தங்கம் வென்று 2வது இடத்தை பிடித்துள்ளது.
- சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
ஐசிசி விருது
- மார்ச் மாதத்திற்கான ஐசிசி விருதானது இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முக்கியதினம்
சியாச்சின் தினம் (Siachen Day) – ஏப்ரல் 15