Daily Current Affairs
Here we have updated 15th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சுதந்திரதினம்
- நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது.
- கருப்பொருள்: வளர்ந்த பாரதம்
ராம்சர் தளங்கள்
- தமிழ்நாட்டிலுள்ள நஞ்சராயன் சரணாலயம் (திருப்பூர்), கழுவேலி சரணாலயம் (விழுப்புரம்) போன்றவை ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
- இதன் மூலம் தமிழ்நாட்டில் ராம்சார் தளங்களின் எண்ணிக்கை 18 உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக ராம்சார் தளங்கள் உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
- மேலும் மத்தியபிரதேசத்தின் தவா சரணலாயமும் ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போது இந்தியாவில் உள்ள ராம்சர் தளங்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலக சதுப்பு நில தினம் – பிப்ரவரி 2
கி.ரா.விருது
- 2024-ஆம் ஆண்டிற்கான கி.ரா.விருது நாஞ்சில் நாடனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விதி 316(1)
- TNPSC தலைவர் விதி 316(1) கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- TNPSC தலைவர் பதவிக்காலம் – 6 ஆண்டுகள்/62வயது
- மாநில பணியாளர் தேர்வாணையம் – 315 முதல் 323
தொடர்புடைய செய்திகள்
- சமீபத்தில் TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜகதாம்பிகா பால்
- வக்ஃப் மசோவினை ஆராய ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒடிசா
- பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்காக பல்கலைக்கழகம் ஒன்றை ஒடிசா தொடங்கவுள்ளது.
- இந்தியாவின் முதல் பார்வை குறைபாடுள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழமாக இது திகழ்கிறது.
பழமையான காலண்டர்
- துருக்கி நாட்டில் 12,000 ஆண்டுகள் உலகின் பழமையான காலண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய துக்கநாள்
- வங்கதேசமானது ஆகஸ்ட் 15-யை தேசிய துக்க நாளாக அனுசரிக்கிறது.
வினய் குவாத்ரா
- அமெரிக்காவிற்கான இந்திய தூதராக வினய் குவாத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- ஆகஸ்ட் 16-ல் EOS-08 செயற்கைக்கோளுடன் SSLV D-3 ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
அமிர்த உதயான் தோட்டம்
- குடியரசுத்தலைவர் மாளிகையில் அரியவகை செடி, கொடிகளுடன் காணப்படும் அமிர்த உதயான் தோட்டத்தினை குடியரசுத்தலைவர் திறந்து வைக்கிறார்.
ஓய்வு அளிப்பு
- இந்திய ஹாக்கி அணியின் வீரரான ஸ்ரீஜேஷ் அணிந்து விளையாடிய ஜெர்சி எண் 16க்கு ஓய்வு அளிக்கப்பட்டள்ளது.
- இவர் தற்போது இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஒலிம்பிக் போட்டியின் முடிவில் ஸ்ரீஜேஷ், மனுபார்க்கர் இருவரும் தேசிய கொடியினை ஏந்தி சென்றனர்.
தொடர்புடைய செய்திகள்
- எம்.எஸ்.தோனி – ஜெர்சி எண் 7 ஓய்வு
- சச்சின் டெண்டுல்கர் – ஜெர்சி எண் 10 ஓய்வு