Daily Current Affairs
Here we have updated 15th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மக்களுடன் முதல்வர் திட்டம்
- டிசம்பர் 18-ல் கோயம்புத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்டமானது தொடங்கப்பட உள்ளது.
- தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்றடையும் விதமாக தொடங்கப்பட உள்ளது.
மென்பொருள் ஏற்றுமதி
- இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறதென தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
- ஏப்ரல்-அக்டோபர் வரையிலான காலகட்டங்களில் 478 கோடி அளவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
- மென்பொருள் ஏற்றுமதியில் தமிழ்நாடு 30.86% பங்கினை அளித்துள்ளது.
பணிக்குழு
- ஆலிவ் ரிட்லி ஆமைகள் மீது எண்ணெய் கசிவின் தாக்கத்தை காண்காணிக்க பணிக்குழுவினை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழா (CIFF)
- டிசம்பர் 14-21 வரை சென்னையில் 21வது சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகிறது. இதில் 57 நாடுகளை சேர்ந்த 126 சிறந்த படங்கள் திரையிடப்பட உள்ளது.
- மாமன்னன், அநீதி, அயோத்தி, போர் தொழில், செம்பி, விடுதலை – 1 உள்ளிட்ட தமிழ் படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளன.
- CIFF – Chennai International Film Festival
ரா.சங்கரன்
- திரைப்பட இயக்குநரான ரா.சங்கரன் (95) காலமானார்.
- மெளனராகம் படத்தில் நடித்து மிஸ்டர் சந்திரமெளலி என்ற சிறப்பு பெயரைப் பெற்றார்.
அலகாபாத் உயர்நீதிமன்றம்
- உத்திரப்பிரதேச மாநிலம் மதுராவிலுள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஷாஹி ஈத்கா மசூதியில் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தொல்லியல் துறையினர் (ASI) ஆய்வு நடத்த அனுமதி அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ளது.
- Archaeological Survey of India – 1861
- நிறுவனம் – அலெக்சாண்டர் கன்னிஹாம்
- தலைமையகம் – புதுதில்லி
பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீடு
- இந்தியா பருவநிலை மாற்றச் செயல்திறன் குறியீட்டில் 30வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
புல்லட் ரயில் முனையம்
- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் முனையமானது அகமதபாத் நகரின் சபர்மதி மல்டிமாடல் போக்குவரத்து மையத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை மற்றும் அகமதாபாத் இடையே துவக்கப்பட உள்ளது.
- 2026-ல் புல்லட் ரயில் சேவையானது தொடங்கப்பட உள்ளது.
ஆசிய வளர்ச்சி வங்கி
- 2023-2024 நிதியாண்டில் இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.7% வளர்ச்சி அடையும் என ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது.
- பண வீக்கமானது 5.5%மாக இருக்குமென தெரிவித்துள்ளது.
- ADB (Asian Development Bank) – 19.12.1966
ஆசியான் – இந்தியா திணை திருவிழா
- ஆசியான் – இந்தியா திணை திருவிழாவானது புது தில்லியில் நடைபெற்றுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- கடந்த நவம்பரில் இந்தோனேசியாவில் சிறுதானிய உணவு திருவிழா நடைபெறுகிறது.
- தேசிய திணை ஆண்டு – 2018
- சர்வதேச திணை ஆண்டு – 2023
அமலாக்கத்துறை
- சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் 2014 ஜனவரி முதல் 2023 அக்டோபர் 31 வரை ரூ. 1,16,792 லட்சம் கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அமலாக்கத்துறை – 01.05.1956
யானைகள் நலக் காப்பகம்
- இந்தியாவின் 14 மாநிலங்களில் 33 யானைகள் நலக்காப்பகம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே மாநிலங்களைவையில் தெரிவித்துள்ளார்.
- 2020-2021 ஆம் ஆண்டில் 57 பேர், 2021-2022 ஆம் ஆண்டில் 37 பேர், கடந்த ஆண்டில் 43 பேர் தமிழகத்தில் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- உலக யானைகள் தினம் – Aug 12
- தமிழ்நாட்டில் யானைகளின் எண்ணிக்கை 2961-ஆக உள்ளது.
- புலிகள் திட்டம் மற்றும் யானைகள் திட்டம் இணைக்கப்பட்டு புலி மற்றும் யானை திட்டப்பிரிவானது உருவாக்கப்பட்டது.
- யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான சண்டையை குறைக்கும் திட்டமான
- “திட்டம் கஜா கோதா (Project Gajah Kotha)” அசாமில் செயல்படுத்தப்படுகிறது
- கஞ்உத்சவ் (யானைகள் திருவிழா) அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்றுள்ளது.
- இந்தியாவின் பாரம்பரிய விலங்கு – யானை (2010)
- கர்நாடாகாவில் யானைகள் அதிகம் உள்ளன.
- அசாமில் அதிகமாக யானைகள் இரயில் அடிப்பட்டு இறக்கின்றன.
நிலக்கரி உற்பத்தி திறன்
- கடந்த நவம்பரில் இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 8.45 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
- இவ்வறிக்கையை நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
- 2022, டிசம்பர் மாதத்தில் 7.61 கோடி டன்னாக இருந்து நிலக்கரி உற்பத்தி 11.03%த்தை விட அதிகமாகும்.
மின் நுகர்வு
- ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மின்நுகர் 1,09,990 கோடி யூனிட்டாக உள்ளது. இந்த மின்நுகர்வு 2022-23 நிதியாண்டினை விட 9% அதிகமாகும்
- 2022-23 நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் மின்நுகர் 1,01,020 கோடி யூனிட்டாக இருந்துள்ளது.
கோடீஸ்வரர்கள் பட்டியல்
- ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் லலித் கைதான் புதிதாக இணைந்துள்ளார்.
- இவர் ரேடிகா கைதான் மதுபான தயாரிப்பு நிறுவனர் ஆவார்
சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல்
- சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலுக்கு லியாண்டர் பயஸ், விஜய் அமிர்தராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
- சர்வதேச டென்னிஸ் அரங்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கெளரவப்படுத்தும் வகையில் அவர்களின் பெயரானது சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் இடம் பெறும்.
- இப்பட்டியலுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர்.
ரைசிங் ஸ்டார் விருது
- வளர்ந்து வரும் வீராங்கனைக்கான ரைசிங் ஸ்டார் விருதானது அன்டீம் பங்காலுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- யுனைடெட் வேல்டு ரெஸ்லிங் அமைப்பானது இவ்விருதினை வழங்குகிறது.
December 13 Current Affairs | December 14 Current Affairs