Daily Current Affairs
Here we have updated 15th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய மாநகராட்சிகள்
- தமிழ்நாட்டில் புதிதாக புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நான்கு மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- 1988 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்ட திருத்தத்தின் படி 21ஆக இருந்த மாநகராட்சிகளின் எண்ணிக்கையானது தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது.
பி.எம்.சூரஜ் (PM SURAJ) போர்ட்டல்
- பின்தங்கிய பிரிவினருக்காக கடனுதவி வழங்க பி.எம்.சுராஜ் (PM SURAJ) எனும் போர்ட்டல் துவங்கப்பட்டுள்ளது.
கர்நாடகா
- உலக பொருளாதார மன்றத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) மையமானது கர்நாடகத்தில் துவங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் AI நகரம் – லக்னோ
- முதல் AI பள்ளி – கேரளா
- முதல் AI ஆசிரியர் – ஐரீஸ் (கேரளா)
தேர்தல் ஆணையர்கள் நியமனம்
- இந்திய தேர்தல் ஆணையர்களாக சுக்பீர் சந்து, ஞானேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்ட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
- இந்திய தேர்தல் ஆணையம் – 25.01.1950
பீகார்
- பீகாரின் பாட்னாவில் இந்தியாவின் முதல் நதி ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.
- 2009ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவிக்கப்பட்டது.
இமாச்சலப்பிரதேசம்
- 18 முதல் 59 வயது வரையுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இதற்கு இந்திராகாந்தி பியாரி பெஹ்னா சம்மன் நிதி யோஜானா என பெயரிட்ப்பட்டுள்ளது.
கட்லஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சி
- பல்வேறு நாடுகள் இணைந்து நடத்திய சர்வதேச கட்லஸ் எக்ஸ்பிரஸ் பயிற்சியானது சீஷெல்ஸ் பகுதியில் நடைபெற்றது.
சர்வதேச சோலார் கூட்டணி
- பனாமா நாடானது சர்வதேச சோலார் கூட்டணியில் 97வது நாடாக இணைந்துள்ளது.
ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டி
- ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 42வது முறையாக மும்பை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- 2வது இடத்தை விதர்பா அணி பிடித்துள்ளது.
இஸ்லாமோஃபோபியாவை எதிர்த்துப் போராடுவதற்கான சர்வதேச தினம் (International Day to Combat Islamophobia) – மார்ச் 15
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் (World Consumer Rights Day) – மார்ச் 15
- கருப்பொருள்: Fair and responsible AI for Consumers.
உலக உறக்க தினம் (World Sleep Day) – மார்ச் 15
- கருப்பொருள்: Sleep Equity for Global Health
- ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2வது வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது.
March 13 Current Affairs | March 14 Current Affairs