Daily Current Affairs
Here we have updated 15th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
சங்கரய்யா
- சுதந்திரப் போராட்ட தியாகி சங்கரய்யா தனது 102 வயதில் (1922-2023) காலமானார்.
- 1967, 1977, 1980 ஆகிய ஆண்டுகளில் மதுரை கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ-வாகவும் இருந்துள்ளார்.
- தமிழக அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பரிந்துரை சமர்பிப்பு
- கூர்நோக்கு இல்லங்களை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் கமிட்டி தலைவரான சந்துரு தனது அறிக்கையை தமிழக முதல்வரிடம் சமர்பித்துள்ளார்.
பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
- நவம்பர் 15-ல் புதுக்கோட்டையில் புதிய பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறக்கப்பட உள்ளது.
- இது தமிழ்நாட்டின் மூன்றாவது பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.
- சென்னையிலும், சிதம்பரத்திலும் செயல்பட்டு வருகிறது.
சிலை திறப்பு
- தாமிரபரணி ஆற்றிலிருந்து கடற்கரை நகரத்திற்கு குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்ட ராவ்பகதூர் குரூஸ் பெர்னாண்டஸ் (Cruz Fernandez) சிலையானது தூத்துக்குடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
- இவர் தூத்துக்குடியின் தந்தை என அறியப்படுகிறார்.
டாக்டர் ஜெ.சங்கு மணி
- தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக டாக்டர் ஜெ.சங்கு மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்
ஸ்மார்ட் சிட்டி தரவரிசை (Smart City Ranking)
- தமிழ்நாட்டின் மதுரை 8வது இடம் பிடித்துள்ளது.
- முதலிடம் – சூரத் (குஜராத்), இரண்டாமிடம் – ஆக்ரா (உத்திரப்பிரதேசம்), மூன்றாமிடம் – அகமதாபாத் (குஜராத்) ஆகியன பிடித்துள்ளன.
பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டம்
- பிர்சாமுண்டாவின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 15-வது தவணைத்தொகையான ரூ.18,000 கோடியை பிரதமர் மோடி விடுவிக்கிறார்.
- இத்திட்டத்தில் 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறுகின்றன.
- பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டம் – 2019
இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி
- புதுதில்லியின் பிரகதி மைதானத்தில் 42வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியானது (India International Trade Fair) தொடங்கப்பட்டுள்ளது.
- இக்கண்காட்சியாது 14 நாட்கள் நடைபெற உள்ளன.
- கருப்பொருள்: “வாசுதேவ குடும்பகம்”
ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்
- நவம்பர் 16, 17-ல் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்துகொள்ளும் 10-வது ஆசியான் (ASEAN) பாதுகாப்பு அமைச்சகர்கள் கூட்டமானது நடைபெற உள்ளது.
- இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
- ASEAN – Association of Southeast Asian Nations
சம்பூர்ன் குறியீடு அறிமுகம்
- இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI), ஜோக்காட்டா (Jocata) இணைந்து சம்பூரன் குறியீட்டை அறிமுகம் செய்துள்ளது.
- இந்திய MSME துறையின் செயல்திறன் பற்றிய நிகழ்நேர தகவலை வழங்க இக்குறியீடு வழங்குகிறது.
பொது சிவில் சட்டம்
- உத்திரகாண்ட் மாநிலமானது பொதுசிவில் சட்டத்தினை அமல்படுத்த உள்ளது.
- கோவாவில் பொதுசிவில் சட்டமானது இந்திய சுதந்திரத்திற்கு முன்பே போர்சுகீசியர்களால் கொண்டு வரப்பட்டு நடைமுறையில் உள்ளது.
டிக்டாக் செயலி தடை
- நேபாளம் நாட்டில் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- போர் விமானங்களை தாக்கி அழிக்கும் இக்லா-எஸ் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய இந்தியா மற்றும் ரஷ்யா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- 5 முதல் 6 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது.
சின்னம்மை தடுப்பூசி – பரிந்துரை
- பிரிட்டனின் பொதுமருத்துவமனைகளில் சின்னம்மை தடுப்பூசிகளை (Smallpox vaccine) குழந்தைகளுக்கு செலுத்த பிரிட்டன் அரசு தன் நாட்டு நோய்த் தடுப்புக்கான நிபுணர்கள் கூட்டுக் குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.
ஐசிசி அக்டோபர் மாத விருதுகள் – 2023
- சிறந்த வீரர் விருது – ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து)
- சிறந்த வீராங்கனை – ஹெய்லி மேத்யூஸ் (மேற்கிந்திய தீவுகள்)
பழங்குடியினர் பெருமை தினம் (Janjatiya Gaurav Divas) – Nov 15
- ஜன்ஜாதிய கௌரவ் திவாஸ்
- பிர்சாமுண்டா பிறந்த தினம் – 15.11.1875
ஜார்க்கண்ட் உருவாகிய தினம் (Jharkahand Foundation Day) – Nov 15
- 15.11.2000-ல் பீகாரிலிருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்ட தினம்
November 12-13 Current Affairs | November 14 Current Affairs