Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 15th October 2024

Daily Current Affairs

Here we have updated 15th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நடுகல் கண்டுபிடிப்பு

Vetri Study Center Current Affairs - Hero Stone

  • திருப்பத்தூர் மாவட்டம், பெருமாள் கோவில் வட்டம் என்னுமிடத்தில் 600 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இது விஜயநகர மன்னர்கள் காலத்தை சேர்ந்ததாகும்.

டிமேட் கணக்கு

  • டிமேட் கணக்கு அதிகம் வைத்திருப்பவர்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது.
  • தமிழ்நாடு 7வது இடம் பிடித்துள்ளது.
  • டிமேட் கணக்கு என்பது பங்குச் சான்றிதழ்கள் மற்றும் மின்னணு வடிவத்தில் வைத்திருக்கும் பிற பத்திரங்களுக்கான வங்கிக் கணக்கு ஆகும்.

மெட்ராஸ் ஐஐடி

  • சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சிக்கான மையத்தை மெட்ராஸ் ஐஐடி தொடங்கியுள்ளது.

நோபல் பரிசு – 2024

  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 2024-ஆனது டாரன் அசாமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ராபின்சன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • நிறுவனங்கள் எப்படி கட்டமைக்கப்படுகின்றன?, எவ்வாறு வளர்ச்சியை பாதிக்கின்றன? என்ற ஆய்விற்காக வழங்கப்பட உள்ளது.

குடியரசுத்தலைவர் ஆட்சி

  • ஜம்மு-காஷ்மீரில் கடந்த 5 ஆண்டு காலமாக செயல்பட்டு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சியை திரும்ப பெறுவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீரில் கடந்த 31.10.2019-ல் குடியரத்தலைவர் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு – 370

  • சிறப்பு அந்தஸ்தின்படி குடியரசுத்தலைவர் 356-ன் கீழ் மாநில அவசர நிலையை குடியரசுத்தலைவர் பிறபிக்க முடியாது.
  • மேலும் அம் மாநில அரசை கலைக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்கு கிடையாது.
  • 360 கீழ் செயல்படுத்தப்படும் நிதி நெருக்கடி அவசர பிரகடனத்தையும் குடியரசுத்தலைவர் பிறபிக்க முடியாது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாள் – 05.08.2019

இவ்விதியை எழுதியவர் – கோபாலசாமி ஐயங்கார்

உத்திரபிரதேசம்

  • பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக பதிவாகியுள்ளதாக சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெதர் மார்க் சான்று

Vetri Study Center Current Affairs - Leather Mark

  • தோல் பொருட்களின் தரத்தினை உறுதி செய்ய லெதர் மார்க் சான்றினை CLRI அறிமுகம் செய்துள்ளது.
  • CLRI (Central Leather Research Institute) – 24.04.1948

தொடர்புடைய செய்திகள்

  • தங்கத்தின் தரம் உறுதி செய்ய ஹால்மார்க் சான்று வழங்கப்படுகிறது.
  • பட்டின் தரம் உறுதி செய்ய சில்க்மார்க் சான்று வழங்கப்படுகிறது.

டிஜிட்டல் வேளாண் மாநாடு 2024

  • இந்தியா டிஜிட்டல் வேளாண் மாநாடு 2024  புது தில்லியில் நடைபெற்றது.

சரக்கு போக்குவரத்து

  • உலக வங்கியின் சரக்கு போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு தரவரிசையில் இந்தியா 38வது இடத்தில் உள்ளது.

எக்ஸ்-பேண்ட் ரேடார்

  • கேரளாவின் வயநாட்டில் மேம்பட்ட எக்ஸ்-பேண்ட் ரேடார் (X-Band Radar) பொருத்தப்பட்டுள்ளது.

ஆற்றல் திறனுக்கான பிளாட்டினம் விருது

  • குஜராத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையம் ஆற்றல் திறனுக்கான பிளாட்டினம் விருதினை வென்றுள்ளது.

சஞ்சு சாம்சன்

Vetri Study Center Current Affairs - sanju samson

  • சர்வதேச டி20 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றுள்ளார்.

வுஹான் ஒபன் டென்னிஸ் போட்டி

  • வுஹான் ஒபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் பிரிவில் அரினா சபலெங்கா சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ஆண்கள் பிரிவில் ஜின்னிக் சின்னர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பிஷன்ஷிப்

  • ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பிஷன்ஷிப் அஸ்தானா நகரத்தில் நடைபெற்றுது.

முக்கிய தினம்

உலக மாணவர்கள் தினம் (Word Student’s Day) அக்டோபர் – 15

  • அப்துல்கலாம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் 11வது குடியரசுத்தலைவர்.
  • பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு – 1997

உலக கை கழுவும் தினம் (Word Hand Wash Day) அக்டோபர் – 15

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் – அக்டோபர்

தமிழக அரசின் திட்டங்கள்

சிற்பி திட்டம் – 14.09.2022

வானவில் மன்றம் – 28.11.2022

Related Links

Leave a Comment