Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th February 2023

Daily Current Affairs

Here we have updated 16th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • கடந்த ஒன்றரை மாதத்தில் 1,271 பேருக்கு டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது.
    • டெங்கு காய்ச்சல் “ஏடிஸ் எஜிப்டை” வகை கொசுக்களால் பரவுகிறது.
  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் புதிய 4 நெல் ரகங்கள் உள்பட வேளாண்மை, தோட்டக்கலை, மரப்பயிர்கள் என 23 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
    • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் –  1971
    • தலைமையகம் – கோயம்புத்தூர்
    • நெல் ரகங்கள் – கோ-56, கோ-57, எடிடி 58, ஏஎஸ்டி 21
  • நாடு முழுவதும் அரசு, தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் மாணவர்களின் முயற்சியில் உருவான அப்துல் கலாம் செயற்கைக்கோள்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பட்டிபுலம் என்ற இடத்திலிருந்து ஏவப்பட்டது.

தேசிய செய்தி

  • நிலக்கரியை முறைகேடாக எடுக்கப்படுவதை தடுக்க “கானன் பிரஹாரி மொபைல் செயலி” அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
  • “தாரா 2023-நதி நகர கூட்டணி வருடாந்திர கூட்டம்” புனேயில் நடைபெற்றுள்ளது.
  • சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சர்வதேச செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு மாநாடு நடைபெற்றுள்ளது.
  • இந்தியாவின் முதல் ஏசி இரு அடுக்கு மின்சார பேருந்து மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாவிடாய்கால விடுமுறை அளிப்பதற்கான விதியை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தவிடக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
    • மகப்பேறு பலன்கள் சட்டம் 1961 பிரிவு 14-ன் கீழ் பிரசவத்தின் போது குறிப்பிட்ட நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெண்களுக்கு அளிக்கும் சட்டம் கட்டாயமாகிறது.
    • பீகார், கேரளா மாநிலங்களின் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
  • பிப்ரவரி 16ல் ஆதி மஹோத்சவ் –  மெகா தேசிய பழங்குடியினர் திருவிழா புது தில்லியில் நடைபெறுகிறது.
  • நாட்டின் அதிவேக ரயில் சேவையான வந்தே பாரத்தின் மும்பை-காந்தி நகர் வழித்தடத்தில் கடந்த ஜனவரி மாதம் வரை அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
    • வந்தே பாரத் ரயில் தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
    • ரயிலின் வேகம் – 180 கி.மீ.
    • பிப்ரவரி மாத நிலவரப்படி இதுவரை 10 ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா-சீனா இடையேயான எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையை (ஐடிபிபி) வலுப்படுத்தும் வகையில் புதிதாக 7 படைப் பிரிவுகளை உருவாக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
    • இந்திய-சீன எல்லைப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புதிதாக அமைக்கபட்டுள்ள 47 எல்லை நிலைகள் மற்றும் 12 படை முகாம்களில் பணியர்த்தப்பட உள்ளன.
    • இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை – 3,488 கி.மீ
    • இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை – 1962
  • பிப்ரவரி 15ல் நிதி நிலை அறிக்கைக்கு பிந்தைய கூட்டம் (POST BUDGET) தில்லி பிஹெச்டி வர்த்தக தொழில் சபையால் நடத்தப்பட்டுள்ளது.
    • நிகழாண்டில் “அனைவருக்கும் இலவச உணவு தானியத் திட்டம்” தொடர்ந்து செயல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
  • பிப்ரவரி 14ல் அமெரிக்கா நியூயார்க் நகரில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் இந்தியா சார்பில் நடத்தப்படும் சிறுதானியங்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது.
    • சிறுதானியங்களுக்கான சர்வதேச ஆண்டாக 2023-ல் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியா முழுவதும் கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் அடுத்த 5 ஆண்டுகளில் 2லட்சம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பால் பண்ணை – மீன்பிடி கூட்டுறவுச் சங்கங்களை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • தற்போது நாடு முழுவதும் 63,000 தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.
  • இந்தியாவின் வடக்கு எல்லையில் அமைந்துள்ள கிராமங்களின் விரிவான மேம்பாட்டுக்காக ரூ.4,8000 கோடியை “ஒளிரும் கிராமங்கள் திட்டம்”காக மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
    • வடக்கு எல்லையில் வேலைவாய்ப்புக்காக புலம்பெயர்வதை தடுப்பதற்காகவும், சொந்த கிராமங்களிலேயே வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் உதவும்.
  • ரஷியாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி 384% அதிகரித்துள்ளது.
    • 2021-22ம் நிதியாண்டில் இறக்குமதியில் 18வது இடத்தில் (ரூ.81,685 கோடி) இருந்தது.
    • நிகழாண்டில் எப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலத்தில் 4வது இடத்திற்கு (ரூ.3லட்சம் கோடி) முன்னேறியுள்ளது.
  • பிப்ரவரி 16-ல் திரபுராவில் உள்ள 60 தொகுதிகளுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படுகிறது.

உலகச் செய்தி

  • சவுதி அரேபியா சர்வதேச விண்வெளி மையத்திற்கு முதன் முறையாக ரியானா என்ற பெண் விஞ்ஞானியை அனுப்புகிறது.

Feb 14 Current Affairs  |  Feb 15 Current Affairs

Leave a Comment