Daily Current Affairs
Here we have updated 16th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- மார்ச் 15-ல் சென்னையில் அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனையில் உலக யுனானி தின விழா நடைபெற்றது.
- யுனானி மருத்துவம் என்பது கிரேக்க-அரேபிய வைத்திய முறையாகும்.
- மார்ச் 16-ல் “எண்ணும் எழுத்தும்” திட்டத்தால் குழந்தைகளை, ஆசிரியர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பொதுமக்கள் பெற்றோரிடையே எடுத்துச் செல்லும் வகையில் “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான சிறப்பு நிகழ்ச்சிகள் தொடங்கவுள்ளது.
- தமிழகத்தில் குழந்தைகளிக்கிடையே ஏற்பட்ட கற்ற இடைவெளிக்கு தீர்வு காண 2022-ல் “எண்ணும் எழுத்தும்” திட்டம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் தொலைநோக்கு பார்வையானது 2025-ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை 8 வயதுக்கு உள்பட்ட அனைத்து குழந்தைகளும் பெற வேண்டும் என்பதாகும்.
- “எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம்” என்ற தலைப்பிலான நிகழ்வு மார்ச் 16-21ம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
- சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க “ட்ரோன்” ஈடுபடுத்தப்பட்டுள்ளது
- உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு தங்கம், வெள்ளி பொருள்களுக்கான விழிப்புணர்வு சென்னையில் நடைபெற்றது.
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம் – மார்ச் 15
- சென்னையில் 2வது கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
- ரூ.69,180 கோடி செலவில் 118.9 கி.மீ. நீளத்துக்க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- வண்டலூர் கிரசன்ட் உயர் தொழில் நுட்பக் கல்வி வளாகத்தில் மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் “ஜி20 டிஜிட்டல் இந்தியா கூட்டமைப்பு கருத்தரங்கு” நடைபெற்றுள்ளது.
- மார்ச் 15 இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
- தமிழகத்தில் 17,000 சாலை விபத்துகளும், 19,000 தற்கொலைகளும் பதிவாகியுள்ளன.
- 2021 டிசம்பர் மாதம் தமிழக முதல்வர் கொண்டு வந்த “இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48” திட்டத்தின் கீழ் அதிக விபத்துக்கள் நிகழும் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அதனருகில் இருக்கும் 679 மருத்துவமனைகளில் உடனடியாக விபத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- முதல் 48 மணி நேரத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு அரசே ரூ.1லட்சம் வரை வழங்கும் வகையில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- “மனம்” எனும் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- எழுத்தாளர் சிவசங்கரிக்கு 2022-ம் ஆண்டுக்கான “சரஸ்வதி சம்மான்” விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2019-ல் வெளியான “சூரிய வம்சம் – நினைவலைகள்” என்ற நூலுக்காக இவ்விருது வழங்கப்படுகிறது.
- தமிழில் ஏற்கனவே இந்திரா பார்த்தசாரதி, அ.அ. மணவாளன் ஆகியோர் இவ்விருதினை பெற்றுள்ளனர்
- 1991-ஆம் ஆண்டு முதல் கே.கே.பிர்லா அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சம்மான் விருது வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய செய்தி
- பசுமை நெடுஞ்சாலை கொள்கையின் கீழ் கடந்த 2016 முதல் 2023 பிப்ரவரி வரையில் 3.44 கோடி மரங்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடப்பட்டுள்ளன என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
- பசுமை நெடுஞ்சலைகள் கொள்கை 2015ல் வெளியிடப்பட்டுள்ளது.
- இக்கொள்கையில் மரக்கன்றுகள் நடுதல், மரங்களை இடம் மாற்றி நடுதல், அழகுபடுத்துதல் மற்றும் பராமரிப்பு ஆகியவை அடங்கும்.
- மார்ச் 15ல் இந்திய தொழிலக கூட்டமைப்பின் (சிஐஐ) கூட்டுறவு உச்சி மாநாடு, தில்லியில் நடைபெற்றது.
- இதில் கலந்து கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா “ஒரே பூமி, ஓரே ஆரோக்கியம்” என்ற தொலை நோக்கு பார்வையுடன், ஒட்டு மொத்த உலகின் ஆரோக்கியதுக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியம். இந்த விஷயத்தில் “வசுதைவ குடும்பகம்” என்ற தத்துவத்துடன் இந்தியா முன்னிலையில் வகிக்கும் நேரமிது என்று தெரிவித்துள்ளார்.
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) நடத்திய ஆய்வின்படி நாட்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 28.1% இருதய நோய்களால் ஏற்படுவதாக மத்திய சுகாதரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
- ஐசிஎம்ஆர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி “இந்தியா; தேசத்தின் ஆரோக்கியம்” என்ற அறிக்கையை சமர்ப்பித்தது.
- ஆயுஷ்மான் பாரத் சுகாதார நல்வாழ்வு மையங்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்களை பரிசோதித்து பொருத்தமான சுகாதார வசதிகள் பரிந்துரைக்கப்படுகிறது.
- ஃபிட் இந்தியா இயக்கம், யோகா தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் ஆயுஷ்மான் அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- ஜி20 நாடுகள் பங்கேற்கும் கல்வித்துறை தொடர்பான கூட்டம் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸில் நடைபெறுகிறது.
- ஏப்ரல் 28-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கலந்துரையாடும் கூட்டம் தில்லியில் நடத்தப்பட உள்ளது.
- இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையை 2022 செப்டம்பரில் ஏற்றது.
- இதன் உறுப்பு நாடுகள்
- சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான்
உலகச் செய்தி
- இந்தியா, ஜப்பான், அமெரிக்கா இணைந்து நடத்தும் மலபார் கடற்படைப் பயிற்சியை இந்த ஆண்டு (2023) ஆஸ்திரேலியாவும் இணைந்து நடத்தும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஆல்பேனசின் அறிவித்துள்ளார்.
- இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக எரிக்கார்செட்டி (52) நியமனம் செய்யப்பட உள்ளார்.
- அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்தியாவுக்கான தூதராக இருந்த கென்னத் ஜஸ்டர் 2021-ல் பதவி விலகினார்
விளையாட்டுச் செய்தி
- மார்ச் 16-ல் தில்லியில் மகளிருக்கான 13வது உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடங்குகிறது.
- இப்போட்டியை இந்தியா நடத்துவது இது 3-வது முறையாகும்.
முக்கிய தினம்
- நோய் தடுப்பூசி தினம்