Daily Current Affairs
Here we have updated 16th November 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- 10ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கான வீடு வசதித் திட்டத்தினை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
- ஹுஸ்டன் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட தமிழக முதல்வர் நிதி வழங்கியுள்ளார்.
- தமிழ் மொழியின் சிறப்பை பரப்பும் நோக்கில் உலகெங்கிலும் உள்ள பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திடும் வகையில் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
- சென்னை காமராஜர் சாலை தலைமை இயக்குநர் அலுவலகம் எதிரேயுள்ள மகாத்மா காந்தியடிகள் சிலை முன்பு நடந்து வந்த தமிழக அரசின் குடியரசு தின விழா இடம் மாற்றுகிறது.
- உழைப்பாளர் சிலை அல்லது விவேகானந்தர் இல்லம் ஆகிய இரு இடங்களில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி எது என தெரிவு செய்யப்பட்டு அங்கு குடியரசு தின விழா நடைபெறும்.
தேசிய செய்தி
- ரயில்களில் சர்க்கரை நோயளிகள், குழந்தைகளக்கான உணவுகள், உடல்நல ஆர்வலர்க்கான பிரத்யேக உணவுகளை தயாரிக்க IRCTC(Indian Railways Catering and Tourism Corporation)-க்கு இரயில்வே வாரியம் அனுமதி
- ஒடிசாவின் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள பாரதீப் கடற்கரையில் நவம்பர் 15, 16-ல் Sea Vigil-22 என்ற பெயரில் நாடு தழுவிய கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறகிறது.
- இந்தியா – அமெரிக்கா இடையேயான 18வது இராணுவ ஒத்திகை உத்திரகாண்ட்டில் “யூத் அபியாஸ் 22” (YUDH ABHYAS 2022) என்ற பெயரில் நடைபெற உள்ளது.
- கேரளாவின் முதல்வரான பினராய் விஜயன் 2,365 நாட்கள் முதல்வராக பதவி வகித்ததன் மூலம் கேரளாவில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
- நவம்பர் 16-ல் மத்திய விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மத்தியபிரதேசத்தில் உள்ள பிதாம்பூரில் மஹிந்திரா & மஹிந்திராவின் முதல் பசுமை நில பண்ணை இயந்திர ஆலையை திறந்து வைக்கிறார்.
உலகச் செய்தி
- நவம்பர் 15-ல் உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டியதாக ஐ.நா. மக்கள் தொகை நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.
- 2022ம் நிலவரப்படி உலக மக்கள் தொகையில் சீனா (142.6 கோடி) முதலிடம், இந்தியா (141.2 கோடி) இரண்டாம் இடமும் பிடித்துள்ளது.
- நவீன குடும்ப கட்டுபாட்டு முறையால் இந்தியாவில் சராசரி கருவுறுதல் 2.2லிருந்து 2ஆக குறைந்துள்ளது.
- 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நிலையான கருவுறுதல் 2.1 என்ற நிலைய அடைந்துள்ளது.
- மக்களின் சராசரி வயது
- இந்தியா – 28.7
- சீனா – 38.4
- ஜப்பான் – 48.6
- உலகஅளவில் – 30.3
- உலக மக்களின் சராசரி ஆயுள் கால்
- 1990 – 64
- 2019 – 72.8
- 2050 – 77.2
- உலக மக்கள் தொகையில் முதியவர்
- 2022 – 10%
- 2050 – 16%
- இந்திய மக்கள்தொகை
- 15 முதல் 64 வயது – 68%
- 65+ – 7%
- உலக மக்கள்தொகை கடந்து வந்த பாதை (700-லிருந்து 800 கோடியில் முக்கிய பங்களிப்பு)
- இந்தியா – 17.7 கோடி
- சீனா – 7.3 கோடி
- 2050-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணிப்பு
- இந்தியா – 168.8 கோடி
- சீனா – 7131.7 கோடி
- உலகம் – 950 கோடி
- நவம்பர் 16ல் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்புவதற்கு முன்னோடியாக விண்வெளிக்கலம் அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
- “ஆர்டமிஸ்-1” என்ற திட்டம் இருமுறை எஞ்சின் கேளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
- ஸ்வோனியாவின் முதல் பெண் அதிபராக நடாசா தேர்வானார்.
- நவம்பர் 14-ல் டெல்லி ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு தலைவர் தேர்தலில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவரான ஐசரி கணேஷ் வெற்றி பெற்றார்.
- நவமபர் 14-ல் டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தடகள ஆணையத்தின் உறுப்பினர்களாக 10 பேர் தேர்வானார்கள்.
முக்கிய தினம்
- சர்வேதச சகிப்புத்தன்மை தினம்
- இந்தியாவில் 28வது மாநிலமாக 15.11.2000 அன்று பீகார் மறுசீரமைப்பு சட்டத்தால் உருவானது.
- “காடுகளின் நிலம்” (or) புதர் நிலம் என அழைக்கப்படுகிறது
Nov 13 – 14 Current Affairs | Nov 15 – Current Affairs