Daily Current Affairs
Here we have updated 16-17th January 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா
- கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் 9வது தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழாவானது நடைபெறுகிறது.
சர்வதேச ஒட்டகத் திருவிழா
- ராஜஸ்தானின் பிகானரில் சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெற்றுள்ளது.
- சர்வதேச ஒட்டக ஆண்டு – 2024
டி2எம் (D2M)
- சிம்கார்டு மற்றும் இணைய வசதி இல்லாமல் வீடியோக்களை பார்க்க வழிவகை செய்யும் நேரடி கைப்பேசி ஒளிபரப்பு தொழில் நுட்ப சேவையை 19 நகரங்களில் சோதனை செய்யப்பட உள்ளது.
- சாங்க்யா மற்றும் ஐஐடி கான்பூர் ஆகிய இரண்டும் இணைந்து இத் தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.
- D2M – Direct to Mobile
கங்கா சாகர் மேளா
- இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவாக கருதப்படும் கங்கா சாகர் மேளா மேற்குவங்கத்தில் நடைபெற்றது.
இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா 2023
- ஜனவரி 17-20 வரை 9வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவானது ஹரியானாவின் பரிதாபத்தில் நடைபெற உள்ளது.
பைபவ் விருது
- அசாம் மாநிலத்தின் உயரிய விருதான பைபவ் விருதானது உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரஞ்சன் கோகோய்க்கு வழங்கப்பட உள்ளது.
ஆபரேஷன் அம்ரித்
- மருத்துவர் ஆலோசனை இன்றி மருத்து வழங்குவதை தடுக்க கேரளாவில் ஆபரேஷன் அம்ரித் என்னும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொழில்நுட்பத்தினை உறிஞ்சம் ஆண்டு
- இந்திய ராணுவம் 2024-ஆம் ஆண்டினை தொழில்நுட்பத்தினை உறிஞ்சம் ஆண்டாக அறிவித்துள்ளது.
சாலை விபத்துக்கள்
- நாட்டில் சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 53 சாலை விபத்துகள் நடப்பதாகவும் அதில் 19 பேர் உயிர் இழப்பதாகவும் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா
- மகாராஷ்டிராவில் அட்பாடி பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
வறுமை மீட்பு
- கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் 24.82 கோடி பேர் வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக நிதி ஆயோக் ( (NITI Aayog) தெரிவித்துள்ளது.
- 2013-14 காலகட்டத்தல் 29.17% பேர் வறுமையில் இருந்துள்ளன.
- தற்போது (2022-23) 11.28% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2022-23ஆம் ஆண்டில் வறுமையிலிருந்து அதிக மக்கள் தப்பித்த மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும்
- NITI Aayog – 01.01.2015
உலக பொருளாதார மன்ற கூட்டம்
- உலக பொருளாதார மன்றத்தின் 54வது கூட்டம் சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது.
- உலக பொருளாதார மன்றம் – 1971
சிறந்த கால்பந்து வீரர் விருது 2023
- அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி 2023ஆம் ஆண்டுக்கான FIFAவின் சிறந்த கால்பந்து வீரர் விருதினை வென்றுள்ளார்.
- இவர் 2வது முறையாக இவ்விருதினை வென்றுள்ளார்.
ஐசிசி விருது
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்ஸ் டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருதினை வென்றுள்ளார்.
- ஐசிசி (ICC) – International Cricket Council – 15.06.1909
திருவள்ளுவர் தினம் (Thiruvalluvar Day) – ஜன 16
தேசிய ஸ்டார் அப் தினம் (National Startup Day) – ஜன 16
- கருப்பொருள்: Startups Unlocking Infinite Potential
January 13 Current Affairs | January 14-15 Current Affairs