Daily Current Affairs
Here we have updated 16th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
முதலைகள் பாதுகாப்பு மையம்
- காவேரி டெல்டா பகுதிகளில் சதுப்பு நில முதலைகளின் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.
- இதன் மூலம் காவேரி டெல்லா பகுதிகளில் மனித-முதலை மோதலை குறைப்பதற்கும், காடுகளில் சதுப்பு நில முதலைகளின் எண்ணிக்கையை வரைபடமாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
- மேலும் ஆனைக்கரை என்னுமிடத்தில் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தமிழ்நாட்டில் உள்ள முதலை இனப்பெருக்க மையங்கள்
- சாத்தனூர்
- ஒகேனக்கல்
- அமராவதி
திருநங்கை விருது 2025
- 2025ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதானது பொன்னி (தூத்துக்குடி), ரேவதி (நாமக்கல்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
- திருநங்கை தினம் – ஏப்ரல் 15
தொடர்புடைய செய்திகள்
- அரவாணிகள் என்ற பெயரை திருநங்கை என்று மாற்றியவர் – கலைஞர் கருணாநிதி
- தமிழ்நாடு திருநங்கை நலவாரியம் – 15.04.2008
- 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு உணவு ஆணையம்
- தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தின் தலைவராக சுரேஷ் ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- தமிழ்நாடு மாநில உணவு ஆணையம் – 2018
ஐகிமி பயிற்சி
- ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியானது ஐகிமி (AIKEYME) என்ற பெயரில் நடைபெற்றது.
- தான்சானியாவில் நடைபெற்ற இப்பயிற்சியில் INS சென்னை, INS கேசரி, INS சுனைனா போன்ற கப்பல்கள் இடம் பெற்றுள்ளன.
டிஜிட்டல் கல்வியறிவு
- கிராமப்புற மக்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்த கேரளாவில் பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சாக்ஷர்தா அபியான் திட்டம் தொடங்கப்பட்டது.
- இத்திட்டத்தின் மூலம் கேரளா டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற மக்கள் அதிகம் வாழும் மாநிலமாக உருவெடுத்துள்ளது.
பிராந்திய கிராமப்புற வங்கி
- வியாஸ் கமிட்டியானது இந்தியாவிலுள்ள 43 பிராந்திய கிராமப்புற வங்கிகளை (RRB) 28 ஆக குறைக்க பரிந்துரைத்துள்ளது.
- பிராந்திய கிராமப்புற வங்கி – 1975
- பிராந்திய கிராமப்புற வங்கி சட்டம் – 1976
புதுதில்லி
- உலகளாவிய தொழில் உச்சி மாநாடு 2025 புதுதில்லியில் நடைபெற்றுள்ளது.
கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி
- பீகாரில் 2025ஆம் ஆண்டுக்காகன கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியானது நடைபெற உள்ளது.
- இதன் சின்னமாக கஜசிம்கா வெளியிடப்பட்டுள்ளது.
உலக வில்வித்தை போட்டி
- அமெரிக்காவில் நடைபெற்ற வில்வித்தை இரட்டையர் போட்டியில் ஜோதி சுரேகா, ரிஷப் யாதவ் தங்கம் வென்றுள்ளனர்
முக்கியதினம்
தேசிய திருநங்கை தினம் (National Transgender Day) – ஏப்ரல் 15