Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th December 2023

Daily Current Affairs

Here we have updated 16th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம்

Vetri Study Center Current Affairs - Our School Shining School project

  • எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளிகளிலும் காய்கறித் தோட்டமானது அமைக்கப்பட உள்ளது.
  • எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் (2023) – பள்ளிகளை சுத்தமாக வைத்திருக்கும் திட்டம்

தொடர்புடைய செய்திகள்

  • நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
  • மனம் திட்டம் – 22.12.2022
  • புன்னகை திட்டம் – 09.03.2023

முதல்வர் – துவக்கி வைத்தல்

Vetri Study Center Current Affairs - Fire and rescue operations

  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பயன்பாட்டிற்காக ரூ.63.30 கோடி மதிப்பிலான ஊர்திகளை தமிழக முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
  • தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானக் கழக பயிற்சி நிலையத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 50 தொழிலாளர்களுக்கு இலவச திறன் பயிற்சியும், 50 தொழிலாளர்களுக்கு உதவித் தொகையுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சியையும் தொடங்கி வைத்துள்ளார்.

காசி தமிழ் சங்கமம் 2.0

Vetri Study Center Current Affairs - Kasi Tamil Sangam-2

  • டிசம்பர் 17-30 வரை நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சிக்கு தமிழகத்திலிருந்து 216 பேருடன் புறப்பட்ட முதல் சிறப்பு ரயிலை ஆளுநர் ஆர்.என்.ரவி துவக்கி வைத்தார்.
  • தமிழ்நாடு, உத்தரப்பிரதேச மாநிலங்களுக்கிடையேயான ஆன்மீக உறவை மேம்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் 2.0 நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  •  முதலாவது காசி-தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியானது 2022 நவம்பர் 18 முதல் டிசம்பர் 16 வரை நடைபெற்றுள்ளது.

சைபர் கிரைம் வழக்கு – 2022

Vetri Study Center Current Affairs - Cyber Crime Case

  • இந்தியாவில் 2022-ல் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்ற வழக்குகளானது தெலுங்கானாவில் அதிகம் பதிவாகியுள்ளது.
  • தெலுங்கானா (15,297), கர்நாடகா (12,556), உத்திரப்பிரதேசம் (10,117)

வழக்குகள் நிலுவை

Vetri Study Center Current Affairs - Cases pending

  • இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை மத்திய சட்ட இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பட்டியலிட்டுள்ளார்.
    • உச்சநீதிமன்றம் – 5,08,85,856 வழக்குகள்
    • உயர்நீதிமன்றம் – 61,75,579 வழக்குகள்
    • மாவட்ட & கீழமை நீதிமன்றங்கள் – 4,46,30,237 வழக்குகள்

கேரளா

Vetri Study Center Current Affairs - Barracuda boat

  • கேரளாவின் ஆலப்புழாவில் இந்தியாவின் அதிவேக சோலார் மின்சாரப்படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • இப்படகிற்கு பறக்குடா (Barracuda) எனப் பெயரிடப்பட்டுள்ளது.

காஞ்சன் தேவி

Vetri Study Center Current Affairs - Kanchan Devi

  • இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி சபையின் தலைமை இயக்குநராக காஞ்சன் தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

குழந்தைகள் வளர்ப்பு பட்டியல்

Vetri Study Center Current Affairs - Elephant Sanctuary

  • உலக அளவில் ஸ்வீடன் நாடானது குழந்தைகள் வளர்ப்பு பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
  • நார்வே, பின்லாந்து, டென்மார்க் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் இந்தியா 79வது இடத்தினை பிடித்துள்ளது.

தேடப்பட்ட செய்திகளின் பட்டியல்

Vetri Study Center Current Affairs - Israel-Gaza War

  • 2023-ல் கூகுளில் உலகளவில் அதிகம் தேடப்பட்ட செய்திகளின் பட்டியலில் இஸ்ரேல் – காசா போர் (War in Israel and Gaza) முதலிடத்தில் உள்ளது.
  • Titanic Submarine, Turkey Earthquake, Hurricane Hilary போன்றவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இயற்பியல் ஆய்வகம்

Vetri Study Center Current Affairs - underground physics laboratory

  • தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் ஜின்பிங் மலையில் 2400மீ ஆழத்தில் இயற்பியல் ஆய்வகம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது உலகின் மிக ஆழத்தில் அமைந்த மற்றும் மிகப்பெரிய நிலத்தடி இயற்பியல் ஆய்வகம் ஆகும்.
  • கண்ணுக்குத் தெரியாத கரும்பொருள் ஆய்விற்காக தொடங்கப்பட்டுள்ளது.

சங்கீத கலாநிதி விருது

Vetri Study Center Current Affairs - Bombay Jayashree

  • கர்நாடக இசைப் பாடகரான பாம்பே ஜெயஸ்ரீ-க்கு சங்கீத கலாநிதி விருது 2023 வழங்கப்பட்டுள்ளது.
  • இவ்விருதானது 97வது மீயூசிக் அகாடமி இசை விழாவில் வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் எம்.எஸ்.சுப்புலெட்சுமி அறக்கொடை விருதும் இந்து பத்திரிக்கை குழுமம் வழங்கியுள்ளது.

தோனிக்கு கெளரவம்

  • இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை கெளரவிக்கும் விதமாக அவர் பயன்டுத்திய ஜெர்சி எண்-7ஐ ரிட்டையர்டு செய்வதாக பிசிசிஐ (BCCI) அறிவித்துள்ளது.
  • இதன்படி எதிர்காலத்தில் இந்த ஜெர்சி எண் யாருக்கும் வழங்கப்படாதென பிசிசிஐ தெரிவித்துள்ளது.
  • இதற்கு முன் சச்சின் டெண்டுல்கருக்கு (ஜெர்சி எண் 10) இந்த கெளரவம் வழங்கப்பட்டிருந்தது.
  • 2007 – டி20 உலகக்கோப்பை, 2011 – ஒருநாள உலகக்கோப்பை, 2013 – சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை வென்றுள்ளது.
  • 2004 – அறிமுகம், 2019 – ஓய்வு

புரிந்துணர்வு ஒப்பந்தம்

Vetri Study Center Current Affairs - Champions Trophy

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியுடன் இணைந்து ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
  • இவ்வொப்பந்தத்தின் படி 2025-ல் சாம்பியன்ஸ் லீக் கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடத்தப்பட உள்ளது.

முதல் பெண் நடுவர்

Vetri Study Center Current Affairs - Rebecca Welch

  • பிரபல கால்பந்து தொடரான ப்ரீமியர் லீக்கில் பெண் நடுவராக ரெபெக்கா வெல்ச் (இங்கிலாந்து) தொடங்கி வைத்துள்ளார்.
  • ப்ரீமியர் லீக்கின் முதல் பெண் நடுவர் ஆவார்.
  • டிசம்பர் 23 லண்டனில் Fulham – Burnley அணிகளுக்கு இடையேயான போட்டியில் நடுவராக செயல்பட உள்ளார்.

ஐடிஎஃப் உலக சாம்பியன் பட்டம் 2023

Vetri Study Center Current Affairs - Novak Djokovic

  • ஆடவர் பிரிவில் நோவக் ஜோ கோவிச் (செர்பியா), மகளிர் பிரிவில் இகா ஸ்வியாடெக் (போலந்து) ஐடிஎஃப் உலக சாம்பியன் பட்டத்திற்கு தேர்வாகியுள்ளனர்.

விஜய் திவாஸ் (Vijay Diwas) – Dec 16

Vetri Study Center Current Affairs - Vijay Diwas

  • 1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போரில்  இந்தியா வெற்றி பெற்று வங்கதேசம் உருவான நாள்

 

December 14 Current Affairs | December 15 Current Affairs

Related Links

Leave a Comment