Daily Current Affairs
Here we have updated 16th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election)
- மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல்-க்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் இயற்றியுள்ளது.
- இத்தீர்மானத்தினை இயற்றியுள்ள முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
- ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதனை ஆராய முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பாலக்கோடு உழவர் சந்தை
- தர்மபுரி மாவட்டத்தின் பாலக்கோடு உழவர் சந்தைக்கு FSSAI-யால் நல்ல பழங்கள் மற்று காய்கறி சந்தை (Eat Right Fruits and Vegetable Market) என்ற சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
- Food Safety and Standards Authority of India – 05.09.2008
தொடர்புடைய செய்திகள்
- உழவர் சந்தையானது கலைஞர் கருணாநிதியால் உருவாக்கப்பட்டது.
- 14.11.1999-ல் முதல் உழவர் சந்தை மதுரையில் நிறுவப்பட்டது.
சமாதான திட்டம்
- சமாதான திட்டத்தின் காலமானது பிப்ரவரி 15-டன் முடிவடைந்த நிலையில் மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
- வணிகர்கள் தங்களின் வரி நிலுவையை செலுத்த உருவாக்கப்பட்டது.
- சமாதான திட்டம் – 16.10.2023
ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை
- நாட்டின் முதல் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையானது உத்திரகாண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
- இந்த ஹெலிகாப்டர் சேவையானது சஞ்சீவீ என்ற திட்டத்தின் கீழ் இயங்க உள்ளது.
தாட்கா (TAHOCO)
- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமானது தனது 50வது ஆண்டு விழாவினை கொண்டாடியுள்ளது.
- TAHOCO (Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited) – 1974
தமிழ்நாட்டின் வளர்ச்சி பட்டியல்
- இந்தியாவில் ஏற்றுமதி தயார் நிலைக்குறியீடு – முதலிடம்
- மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி – முதலிடம்
- புத்தாக்க தொழில்கள் வரிசை – முதலிடம்
- இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி – 2வது இடம்
- கல்வி பட்டியல் – 2வது இடம்
- தொழில் முதலீடு உகந்த மாநிலம் – 3வது இடம்
கவுகாத்தி, அசாம்
- 2024ஆம் ஆண்டிற்கான எதிர்கால இந்தியா திறன் உச்சி மாநாடானது நடைபெற்றுள்ளது.
தேர்தல் பத்திரம்
- தேர்தல் பத்திரங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
- தேர்தல் பத்திரங்கள் 2017-ல் அறிமுகமாகி 2018-ல் அமலுக்கு வந்துள்ளது.
- தேர்தல் பத்திரங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) வங்கியில் கிடைக்கும்.
- அரசியலமைப்பு விதிகளான விதி 14, விதி 19(1)(a), விதி 19(2) போன்றவற்றிற்கு எதிராக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசம்
- உத்திரப்பிரதேசத்தின் நொய்டா நகரத்திற்கு நீர் போராளி விருது வழங்கப்பட்டுள்ளது.
- இவ்விருது சிறந்த கழிவு நீர் மேலாண்மைக்காகவும், சிறந்த நீர் மறு சுழற்சிக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.
பெரிய பொருளாதார நாடுகள் பட்டியல்
- உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஜெர்மெனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- 3வது இடத்திலிருந்து ஜப்பான் 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
- இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது
- முதலிடம் – அமெரிக்கா
- இரண்டாமிடம் – சீனா
உலக மானுடவியல் தினம் (World Anthropology Day) – பிப் 16
February 14 Current Affairs | February 15 Current Affairs