Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 16th March 2024

Daily Current Affairs

Here we have updated 16th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சமுத்திர லக்சமணா (Samudra Laksamana)

Vetri Study Center Current Affairs - Samudra Laksamana

  • ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் மலேசியா இரு தரப்பு கடல்சார் பயிற்சியானது சமுத்திர லக்ஸமனா (Samudra Laksamana) என்ற  நடைபெற்றுள்ளது.

கீர்தி திட்டம் (KIRTI Scheme)

Vetri Study Center Current Affairs - Khelo India Rising Talent Identification - KIRTI

  • சண்டிகர் மாநிலத்தில் 9 முதல் 18 வயது வரையிலான வளர்ந்து வரும் மாணவ மாணவியர்களின் திறமைகளை கண்டறிய கீர்தி திட்டம் (KIRTI Scheme) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • KIRTI – Khelo India Rising Talent

விதவை மறுமண ஊக்குவிப்பு திட்டம்

  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் விதவை மறுமண ஊக்குவிப்பிற்காக வித்வா புனர்விவா ப்ரோட்சஹன் யோஜனா என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இத்திட்டத்தினை துவங்கியுள்ள முதல் மாநிலம் ஜார்க்கண்ட் ஆகும்.

உலக ஆன்மிக திருவிழா

  • உலக ஆன்மிக திருவிழாவானது ஹைதராபாத் நகரில் நடைபெற்றுள்ளது.

ஹோமியோபதி கல்லூரி

  • ஜம்மு & காஷ்மீரின் கத்துவா நகரில் வட இந்தியாவின் முதல் ஹோமியோபதி கல்லூரியானது நிறுவப்பட்டுள்ளது.

புதிய படைப்பிரிவு

Vetri Study Center Current Affairs - Panama

  • ராஜஸ்தானின் ஜோத்பூரில் இராணுவத்தின் முதல் அப்பாச்சி ஹெலிகாப்டர் படைப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
  • அப்பாச்சி ஹெலிகாப்டர் (பறக்கும் பீரங்கி) அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது.

நிலவு திட்டம் தோல்வி

  • சீனா நிலவை ஆராய்வதற்காக டிஆர்ஓ – ஏ & பி இரு செயற்கைக்கோள்களை நிலவுக்கு அனுப்பிய திட்டம் தோல்வி அடைந்துள்ளது.
  • இரு செயற்கைக்கோள்களும் யுயன்ஷெங்-எஸ் ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மீத்தேன்சாட் செயற்கைக்கோள்

  • மீத்தேன் உமிழ்வினை கண்காணித்து அளவிடும் மீத்தேன்சாட் செயற்கைக்கோள் விண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • நியூசிலாந்து விண்வெளி மையம் மற்றும் அமெரிக்காவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் இணைந்து உருவாக்கியுள்ளது.

அமிதவ் கோஷ்

Vetri Study Center Current Affairs - Amitav Ghosh

  • புகழ்பெற்ற இந்திய எழுத்தாளரான அமிதவ் கோஷ்-க்கு எராஸ்மஸ் பரிசு 2024 வழங்கப்பட்டுள்ளது.
  • நெதர்லாந்தின் பிரீமியம் எராஸ்மியனம் அறக்கட்டளை சார்பில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் 2018-ல் ஞானபீட விருது (இலக்கிய உயரிய விருது) பெற்றுள்ளார்.

தேசிய தடுப்பூசி தினம் (National Vaccination Day) – மார்ச் 16

Vetri Study Center Current Affairs - National Vaccination Day

  • கருப்பொருள்: Vaccines work for all.
  • 1995-ல் போலியோ ஒழிப்பு திட்டம் இந்தியாவில் தொடக்கப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.

March 14 Current Affairs | March 14 Current Affairs

Related Links

Leave a Comment