Daily Current Affairs
Here we have updated 17th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- நோயாளிகள் பாதுகாப்பில் நாட்டிலேயே சிறந்து விளங்கும் மருத்துவமனையாக சங்கர நேத்ராலயா தேர்வாகியுள்ளது.
- தில்லியில நடந்த சர்வதேச நோயாளிகள் பாதுகாப்பு குறித்த மாநாடுல் இதற்கான விருது வழங்கப்பட்டது.
- ரூ.63,246 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2ம் கட்ட பணிகள் 118.9 கி.மீ தொலைவிற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
- மாதாவரம் – சிறுசேரி சிப்காட் வரை (45.8 கி.மீ.) 3வது வழித்தடமாக அமைகிறது.
- மேலும் அடையாற்றில் சுரங்கம் தோண்டும் பணியில் “காவிரி” என்ற இயந்திரம் ஈடுபட்டுள்ளது.
- தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ரூ.50 கோடி செலவில் 25 நகரங்களில் புதிதாக காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன
- தற்போது 34 காற்று தர கண்காணிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
தேசிய செய்தி
- திரிபுராவில் 81% வாக்குகள் பதிவானது.
- இத்தேர்தலில் மிஸோரமிலிருந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுராவில் வசித்து வரும் “புரு” பழங்குடியின அகதிகளுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
- உலகளவில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பெங்களூர் பிடித்துள்ளது.
- முதலிடம் – லண்டன்
- 6வது இடம் – புனே
- 34வது இடம் – டில்லி
- 47வது இடம் – மும்பை
- ஜியோலொகேஷன் நடத்தியுள்ள இந்த ஆய்விற்கு “டாம்டாம் போக்குவரத்து நெரிசல் பட்டியல்” என அழைக்கப்படுகிறது.
- 2022-ம் ஆண்டில் அதிக கார்பன் மாசுவை வெளியிட்டுள்ள நகரங்களில் 5 இடத்தை பெங்களூரு பிடித்துள்ளது.
- பிப்ரவரி 16-ல் டெல்லி காவல்துறையின் 76-வது எழுச்சி தினம் டெல்லியில் கொண்டாடப்பட்டது.
- பிப்ரவரி 16-ல் டெல்லியில் கொண்டாடப்பட்ட சர்வதேச துத்தநாக உச்சி மாநாடு – 2023ல் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றுள்ளார்
- துத்தநாக தயாரிப்பில் இந்தியா நான்காம் இடம்-ஐ பிடித்துள்ளது.
- மத்திய ஜல் சக்தி துறை மற்றும் பிரம்ம குமாரிகள் அமைப்பு சார்பில் ஜல் ஜன் அபியான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
- 5000 நீர் நிலைகளை புணரமைக்க இலக்கு நிர்ணயம்.
- மேலும் இம் மாநாட்டில் மத்திய அரசின் தூய்மை கங்கை திட்டம் (நாமி கங்கா – 2014), மழைநீரை சேமிப்போம் முதலிய திட்டங்களை எடுத்துரைத்துள்ளார்.
- பிப்ரவரி 16-ல் டெல்லியில் கொண்டாடப்பட்ட சர்வதேச துத்தநாக உச்சி மாநாடு – 2023ல் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பங்கேற்றுள்ளார்
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அறிமுகப்படுத்திய “இ-சஞ்சீவின்” திட்டத்தில் பயனடைந்ததில் தமிழகம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது
- இத்திட்டத்தில் 10 கோடி பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
- பயனடைந்ததில் ஆந்திரா முதலிடம், மேற்கு வங்காளம் மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை – 1947
- 2030ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் எஃகு உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- இராணுவத்திற்கு நிதி ஒதுக்குவதில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
- அமெரிக்கா முதலிடமும், சீனா இரண்டாவது இடமும் பிடித்துள்ளது.
- இந்தியாவிற்கு ஆயுதங்களை விநியோகம் செய்வதில் ரஷ்யா முன்னிலையில் உள்ளது
- எல்லையில் ட்ரோன் ஊடுருவலை தடுக்க புதிய கருவியை சதானந்த் சவுகான் என்ற ராணுவ வீரர் உருவாக்கினார்.
- ஜி20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் தலைவர்கள் கூட்டம் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
- ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் N.T.ராமாராவ் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ரூ.100 வெள்ளி நாணயத்தை மத்திய அரசு வெளியிட உள்ளது.
- பிப்ரவரி 18ல் ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
- GST – 2017ல் உருவாக்கப்பட்டது (129 சட்டத்திருத்தம்)
- மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
- உறுப்பு தானம் பெற இனி 65வயதுக்கும் மேற்பட்டவர்களும் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உள்ளது.
- 2013-ல் 4,990-ஆக இருந்த உறுப்பு தான எண்ணிக்கை 2022-ல் 15,561-ஆக அதிகரித்துள்ளது.
- தில்லியில் “ஆதி மகோத்சவ் எனும் தேசிய அளவிலான பிரம்மாண்ட பழங்குடியினர் திருவிழாவினை பிரதமர் துவக்கி வைத்தார்.
- பழங்குடியின சுதந்திர போராட்டத் தலைவர் பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தை “பழங்குடியினர் பெருமை தினமாக” கொண்டாடப்படுகிறது.
- “வன் தன்” திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 3,000-க்கும் மேற்பட்ட மையங்கள் நிறுவப்பட்டு பொருள்களின் மதிப்புக்கூட்டுதல் மூலம் பழங்குடியினர் வருவாய் உறுதி செய்யப்படுகிறது.
- பிஎம்-விகாஸ் (பிரதமரின் விஸ்வகர்மா கெளஷல் சம்மான்) திட்டத்தால் பழங்குயினரிடையே கைவினைத் திறன் மேம்படுத்தப்படுகிறது.
- 2014-ல் 80-ஆக இருந்த எகலைவ மாதிரிப்பள்ளிகள் எண்ணிக்கை 2022-ல் 500-ஆக உயர்ந்துள்ளது.
- யூடியூப் சிஇஓ-ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீல் மோகன் நியமிக்கப்ட்டுள்ளார்.
- பிப்ரவரி 16ல் உத்திர பிரதேசத்தின் கோரக்பூரில் “கேல் மகா கும்பமேளா” என்ற விளையாட்டு விழாவை தொடங்கி வைத்துள்ளார்.
- 2010-ம் ஆண்டில் குஜராத்தில் நரேந்திர மோடி முதல்வராக இருந்து போது “கேல் கும்ப மேளா” என்ற இந்த விளையாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.
- குஜராத் உயர்நீதிமன்ற முதல் பெண் தலைமை நீதிபதியாக சோனியா கோகனி பதவியேற்றார்.
- குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவவிரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உலகச் செய்தி
- 2023ம் ஆண்டிற்கான குவாட் மாநாடு ஆஸ்திரேலியாவின் சிட்டினியல் நடைபெறுகிறது.
- குவாட் அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் – அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா
விளையாட்டுச் செய்தி
- சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம்.
- பிப்ரவரி 8 முதல் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையிலான 84வது இளையோர் மற்றும் ஜுனியர் தேசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் யு-19 ஆடவர் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் தமிழகத்தின் வருண் கணேஷ், பிரேயேண் ராஜன் ஜோடி தங்கம் வென்றது.